உங்கள் கை விரல் எப்படி இருந்தால் என்ன பலன் தெரியுமா?

1787
astrology
- விளம்பரம் -

கட்டைவிரல் அளவை வைத்து அந்த விரலுக்குச் சொந்தமானவரின் குண நலன்களை, அவர் அடையப் போகும் பலாபலன்களை விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்.

1. குட்டையான கட்டை விரல்…

thumb

- Advertisement -

இவர்கள் சுயமாகச் சிந்தித்து, செயலாற்ற முடியாதவர்கள். எப்போதுமே பிறர் அபிப்பிராயப்படி நடக்க விரும்புகிறவர்கள். அறிவாற்றலைவிட, உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள். கவிதை, சங்கீதம், கலை போன்ற துறைகளில் ஈடுபாடு கொண்ட சிலரும், அரசாங்கத்தில் நடுத்தரமான பதவி வகிப்பவர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்.

2. நீளமான கட்டை விரல்…

thumb

மிகுந்த தன்னம்பிக்கையும், சாமர்த்தியமும் கொண்டவர்கள். பிறர் மீது அதிகாரம் செலுத்தும் வல்லமை உள்ளவர்கள். உணர்ச்சிகளைவிட, அறிவாற்றலுக்கு முக்கியத்துவம் தருபவர்கள். துணிவு உள்ளவர்கள். விஞ்ஞானம், அறிவியல் போன்ற துறையில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு நீண்ட கட்டை விரல் இருக்கும்.

3. கடினமான கட்டை விரல்…

thumb

கட்டைவிரல் நேராகவும் தசைப்பகுதி கடினமாகவும், தடித்தும் இருந்தால், அவர்கள் இந்த வகையைச் சேர்வார்கள். இத்தகையவர்கள், மிகவும் பிடிவாதக் குணமுள்ளவர்கள். தான் எண்ணியதே ‘சரி’ என நினைப்பவர்கள். பிறர் அறிவுக்கோ, உணர்வுக்கோ அவ்வளவாக மதிப்புத் தராதவர்கள். தன் திறமையில் மட்டுமே நம்பிக்கைக் கொண்டவர்கள்.

4. மிருதுவாக வளைந்து கொடுக்கக்கூடிய கட்டைவிரல்…

thumb

சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டு வாழத் தெரிந்தவர்கள். பொருள்களிடத்தும் செல்வங்களிடத்தும் பற்று கொண்டவர்கள். தங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள்.

பொதுவாக கட்டைவிரலில் மேல்பாகம், கீழ்ப்பாகம் என்று இரண்டு பகுதிகள் உண்டு. கட்டை விரலை மடக்கிப் பார்த்தால், மேல் பகுதியின் நீளத்தையும், கீழ் பகுதியின் நீளத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். அதை வைத்து கட்டை விரலை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

மேல் பகுதி நீளமாக உள்ள கட்டைவிரல்…

தீவிரமான சிந்தனை, வைராக்கியம், செயலாற்றும் துணிவு கொண்டவர்கள், நியாய உணர்வு கொண்டவர்கள்.

கீழ்ப்பகுதி நீளமாக உள்ள கட்டைவிரல்…

இவர்கள் வேகமாகவும், துரிதமாகவும் செயல்படக் கூடியவர்கள். அதனால் எடுக்கும் முடிவில் தவறுகள் நேரிட வாய்ப்புகள் உண்டு.

இத்தகைய குணாதிசயங்களைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப ஒருவரது நடத்தையையும் ஓரளவு மாற்றிக்கொண்டு, குறைகளை நீக்கிக் கொள்ள முயல்வது அறிவுடைமையாகும்.

Advertisement