சுக்கிரனின் சேர்க்கையால் பணமழையில் நனைய போகும் ராசிகள்

sukiran jathagam
- Advertisement -

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலுப் பெற்று விட்டால் அந்த ராசிக்காரர்கள் அனைத்து விதமான யோகங்களையும் பெற்றவர்கள் ஆகி விடுவார்கள். திருமண தடை, குழந்தை பேரு, தொழில் முன்னேற்றம், ஆடம்பரப் பொருட்கள் வாங்குவது, சமூகத்தில் அந்தஸ்து கௌரவம் உயருவது என சொல்லிக் கொண்டே செல்லலாம். அத்தனை சௌகரியங்களை தரக் கூடிய சௌபாக்கியவான் இந்த சுக்கிர பகவான் தான்.

அப்படியான சுக்கிர பகவான் துலாம் ராசியில் இருந்து டிசம்பர் 25ஆம் தேதி விருச்சக ராசியில் சஞ்சரிக்க உள்ளார். அந்த காலக்கட்டத்தில் செவ்வாய், புதன் ஆகியோருடன் சுக்கிர பகவான் இணைய போகிறார். இந்த மூன்று பேரின் கூட்டணியில் ஐந்து ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் அடையப் போகிறார்கள். அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

மேஷ ராசி

செவ்வாய் பகவான் விருச்சக ராசியில் ஆட்சி புரிந்து வருகிறார். சுக்கிரனும் அங்கு சேர உள்ளார். இதன் பலனாக மேஷ ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட வாய்ப்பினை பெற போகிறார்கள். இவர்களுக்கு பணியிடத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் சம்பள உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய நட்புக்களின் மூலம் முன்னேற்ற வாய்ப்புகள் பெருகும்.

ரிஷபம்

சுக்கிரனின் இந்த கூட்டணியால் ரிஷப ராசிக்காரர்களும் பல நல்ல மாற்றங்களை அடையப் போகிறார்கள். அவர்களுடைய பணியிடை பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி அவர்களுடைய செயல்பாட்டு திறன் அனைவரையும் ஈர்க்கும். இதனால் பணியிடத்தில் நற்பலன்களை பெறுவதோடு வருமானம் அதிகரிக்கும் . குடும்பத்திலும் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாகும். பண வரவிற்கு பஞ்சமே இருக்காது.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் இந்த சேர்க்கையானது பணவரவை பல மடங்கு அதிகரித்து கொடுக்கும். இந்த காலக்கட்டத்தில் நிதி நிலைமை வெகு சிறப்பாக இருக்கும். உறவுகளுக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். பல நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

கன்னி

இந்த ராசியினருக்கு சுக்கிரனின் இந்த சேர்க்கையால் பல நன்மைகள் உண்டு. குறிப்பாக காதல் கைகூடும் இல்லற வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும். மனக்கசப்பில் இருந்த தம்பதியினர் கூட ஒன்றிணைவார்கள். கஷ்டமான சூழ்நிலை நீங்கி நல்ல பண வரவுடன் பொருளாதார நிலை மேம்படும். இதனால் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழக் கூடிய யோகத்தை பெறுவார்கள்.

- Advertisement -

விருச்சகம்

விருச்சக ராசி காரர்களுக்கு இந்த சுக்கிர சேர்க்கை குடும்பத்தில் அதிக நன்மைகளை ஏற்படுத்த கூடிய வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி அதிகரிக்கும். இது வரை செய்யலாம் என்று நினைத்து செய்யாதிருக்கும் வேலைகள் எல்லாம் செய்து முடிப்பீர்கள். இதனால் பல புதிய வாய்ப்புகள் வரும். பணவரவில் தடை இன்றி இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு கிரகத்தின் பெயர்ச்சி மற்ற ராசிகளுக்கு மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் சுக்கிரனின் இந்த பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் பெருக இருக்கிறது. அதை குறித்தான தகவலை இந்த பதிவில் நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள்.

இதையும் படிக்கலாமே: லட்சுமி நாராயண யோகம் பெரும் ராசிகள்

இது ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துகளின் படி தொகுக்கப்பட்டது. அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப சில மாற்றங்களும் ஏற்படக் கூடிய வாய்ப்பு உண்டு.

- Advertisement -