சுக்கிரனால் யோகம் பெற போகும் மூன்று ராசிக்காரர்கள்

sukura cash
- Advertisement -

நவகிரகங்களில் சொகுசு நாயகனாக விளங்குபவர் சுக்கிர பகவான். இவர் அசுரர்களின் குருவாக திகழ்ந்த போதும் இவர் ஒரு ராசியில் தனது பார்வையை பார்த்து விட்டால் அந்த ராசிக்காரர்கள் சுகபோக வாழ்க்கையை வாழ்வார்கள். சுக்கிரன் ஆடம்பரம் செல்வம் செழிப்பு சமூக அந்தஸ்து உடன் கூடிய வாழ்க்கை அனைத்தையும் தரக்கூடிய யோகக்காரர்.

இவர் மாதத்திற்கு ஒரு முறை தன்னுடைய இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார். இதன் மூலம் 12 ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்கள் நிகழும். அந்த வகையில் கடந்த 12ம் தேதி மகர ராசிக்குள் நுழைந்து சுக்கிர பகவான் அடுத்து மார்ச் 7ஆம் தேதி கும்ப ராசிக்கு செல்கிறார். இதன் காரணமாக எந்தெந்த ராசிகள் நற்பலனை பெறுகிறது என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

மேஷம்

சுக்கிர பகவானின் இந்த இடமாற்றமானது மேஷ ராசியினருக்கு பலவிதமான நற்பலன்களை கொடுக்கப் போகிறது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த வேலைகள் முடியும். நீங்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றியில் முடியும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுஷ்

சுக்கிரனின் இந்த இடமாற்றமானது தனுசு ராசிக்காரர்களுக்கு பல வகையில் பணவரவை அதிகரிக்க போகிறது. வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் வியாபாரத்தில் லாபம் பெருகும். இது வரை இருந்து வந்த அனைத்து விதமான சிக்கல்களும் நீங்கி சுமுகமான சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நல்ல செய்திகள் தேடி வரும். வீடு வாசல் என வசதிகளை உருவாக்கிக் கொள்ளக் கூடிய காலக்கட்டம் இது.

- Advertisement -

கும்பம்

சுக்கிரனின் இந்த இடப்பெயர்ச்சி கும்ப ராசி எனக்கு பலவிதமான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் முன்னேற்றம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்புகளை இந்த பெயர்ச்சி ஏற்படுத்திக் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை தான் இந்த பதிவு. இதில் அவரவர் கிரக சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றங்கள் ஏற்படும். இந்தப் பதிவில் உள்ள தகவல்கள் உங்களுக்கு பயன்படுமாயின் பயன்படுத்தி பலன் அடையுங்கள் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -