உங்களை விபத்துகள், ஆபத்துகளிலிருந்து காக்கும் மந்திரம் இதோ

ashwini

எந்த ஒரு மனிதனுக்கும் வாழ்க்கை என்பது ஒரே மாதிரியாக இருப்பதில்லை. வாழ்வில் நமக்கு பாதகமான விடயங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க முடிந்த அளவு நாம் விழிப்புணர்வுடன் இருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டும். ஆனாலும் நம்மில் பலருக்கு கடும் நோய்கள், எதிர்பாராத ஆபத்துக்கள், தீய எண்ணம் நடத்தை கொண்ட மனிதர்களுடன் சகவாசம் அல்லது தொடர்பு போன்றவை ஏற்படுகிறது. இவை எல்லாவற்றிலிருந்தும் நம்மை காக்க வல்லவர்கள் அஸ்வினி தேவர்கள் ஆவர். அவர்களுக்குரிய அஸ்வினி தேவ மந்திரம் இதோ.

aswini devathas

அஸ்வினி தேவ மந்திரம்

அஸ்வினி தேவதே ஸ்வேத வர்நொவ்
தாவஸ்விநௌ து மஹ

சுதா சம்பூர்ண கலச கராலஜெள
அஸ்வ வாசு கநௌ

அஸ்வினி நட்சத்திரத்தின் தேவதைகளான அஸ்வினி குமாரர்களுக்குரிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் 27 வரை துதிப்பது நல்லது. மாதத்தில் வருகின்ற அஸ்வினி நட்சத்திர தினத்தன்று அஸ்வினி தேவர்களை மானசீகமாக வழிபட்டு, இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிப்பதால் உங்கள் உடலில் இருக்கின்ற எப்படிப்பட்ட நோய்களும் நீங்கும். விபத்துக்கள், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படாமல் காக்கும். தீய எண்ணம், நடத்தை கொண்ட மனிதர்கள் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடாமல் தடுக்கும்.

ashwini

- Advertisement -

27 நட்சத்திரங்களின் வரிசையில் முதலாவதாக வரும் நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவானாவார். இந்த நட்சத்திரத்தின் தேவதைகள் குதிரை முகம் கொண்ட அஸ்வினி தேவர்கள் ஆவர். தேவ மருத்துவர்களாக கருதப்படும் அஸ்வினி தேவர்கள் மனிதர்களின் எப்படிப்பட்ட உடல் ஆரோக்கியக் குறைபாடு மற்றும் திடீர் ஆபத்துகளை நீக்க வல்லவர்களாக இருக்கிறார்கள். அவர்களை வழிபடுவதால் பல நன்மைகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
உங்களின் எத்தகைய எதிரிகளையும் ஒழிக்கும் மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Aswini devas mantra in Tamil. It is also called as Aswini deva slokam in Tamil or Noigal neenga manthiram in Tamil or Ashwini nakshatra devata mantra in Tamil or Uyir kaakum manthiram in Tamil.