உங்களின் எத்தகைய எதிரிகளையும் ஒழிக்கும் சக்தி வாய்ந்த மந்திரம் இதோ

satru-om-mantra

எந்த ஒரு விடயத்திலும் நன்மை என்று ஒரு இருந்தால், அதன் எதிர்ப்பதமாக தீமை என்று கட்டாயம் இருந்தே தீரும். மனிதர்களிலும் ஒருவருக்கு தீங்கு விளைவிப்பவர்களை சத்துருக்கள் அல்லது எதிரிகள் என்று அழைக்கின்றனர். இந்த எதிரிகள் மனிதர்கள் ரூபத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனின் மனதிற்குள்ளாக தீய எண்ணங்கள் என்னும் வடிவில் இருந்து அவனை நல்வழியில் செல்ல விடாமல் தடுக்கும் எதிரியாகவும் இருக்கிறது. இப்படி அனைத்து விதமான எதிரிகளை அறவே ஒழிக்கும் சத்ரு ஜெய மந்திரம் இதோ.

om

சத்ரு ஜெய மந்திரம்

ஸுலபஸ் ஸுவ்ரதஸ் ஸித்தஸ் ஸத்ருஜிச்சத்ருதாபாந
ந்யக்ரோதோ தும்பரோ ஸவத்தஸ் சாணுராந்த்ர நிஷூதன

ஜெபிப்பவர்களுக்கு நிச்சயமான பலன் தரும் சக்தி வாய்ந்த சத்ரு ஜெய மந்திரம் இது. தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும் கிழக்குத் திசையை பார்த்தவாறு இந்த மந்திரத்தை 27 முதல் 108 முறை வரை ஒரு ஜெபிப்பதால் உங்களுக்கு உருவாகியிருக்கும் எத்தகைய நேரடி மற்றும் மறைமுக எதிரிகளையும் வெற்றி கொள்ள முடியும். உங்களுக்கு எதிரான அவர்களின் சதிச் செயல்கள் எடுபடாமல் போகும். மேலும் நமது மனதிற்குள் எழும் பேராசை, அதிக கோபம், மிகுந்த காமம் போன்ற நமக்குள்ளாக இருக்கும் எதிரிகளையும் இந்த மந்திர ஒரு ஜபம் நீக்க, நமக்கு நன்மைகளை உண்டாக்கும்.

Suryan God

மிகப்பழமையான சனாதன தர்மம் எனும் இந்து மதத்தை தோற்றுவித்த ரிஷிகளும், முனிவர்களும் அந்த மதத்தில் பின்பற்றபடும் எதையும் அறிவியல் பூர்வமாக செய்தனர். அதில் ஒன்று தான் மந்திர உச்சாடனம் செய்யும் முறை. திடசித்தம் மற்றும் மன ஒருமைப்பாட்டுடன் மந்திர உச்சாடனம் செய்பவர்களுக்கு அந்த மந்திரத்திற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என்பது இவற்றை உருவாக்கிய ரிஷிகள் மற்றும் முனிவர்கள் வாக்காகும்.

இதையும் படிக்கலாமே:
தினமும் இம்மந்திரம் துதிப்பதால் ஏற்படும் நன்மை என்ன

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Shatru jaya mantra in Tamil. It is also called as Shatru jaya sloka in Tamil or Ethirigal thollai neenga in Tamil or Ethirigal oliya manthiram in Tamil or Sarva shatru nasana manthiram in Tamil.