அசுவினி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

0
113
astrology

அசுவினி:

aswini

இந்த நக்ஷத்திரக் கூட்டம் குதிரை முக வடிவில் அமையும். ஆறு நக்ஷத்திரங்களைக் குறிக்கும் இது மேஷ ராசியில் அமையும். இந்த நக்ஷத்திரத்தை ஆளும் கிரகம் கேது. ராசிக்குரிய கிரகம் செவ்வாய்.

பொதுவான குணங்கள்: புத்தி கூர்மை, வடிவான தோற்றம், ஆடை ஆபரணங்கள் அணிவதில் ஆசை, பாசம், நேசம், கோபதாபங்கள். உணர்ச்சிவசப்படுதல், தன்னம்பிக்கை, துணிச்சல், தர்ம சிந்தனை, பயமின்மை, எதையும் வேகமாகச் சிந்தித்து வேகமாகச் செயல்படுதல், தற்பெருமை, கர்வம், தவறான முடிவெடுத்தல் – சாதிக்கும் தன்மை, பிடிவாதம் போன்றவை.

astrology-wheel

அசுவினி முதல் பாதம்: (இது செவ்வாய் கிரகத்தின் அம்சம்)

குடும்பப் பற்று, போர் வீரனைப் போன்ற வீரம், முரட்டுப் பிடிவாதம், அபாரமான தன்னம்பிக்கை, பொருள்களிடமும் பெண்களிடமும் விருப்பம், எல்லாவற்றையும் அனுபவித்து வாழ வேண்டும் என்ற ஆசை போன்றவை இதற்குரிய குணங்கள்.

அசுவினி 2-ம் பாதம்: (சுக்ரனின் அம்சம்)

கலையில் ஈடுபாடு, பணம் சேர்ப்பதில் ஆர்வம், சிற்றின்ப ஈடுபாடு, புகழில் விருப்பம் போன்ற குணங்கள் இருக்கும்.

astrology wheel

அசுவினி 3-ம் பாதம்: (புதனின் அம்சம்)

கல்வி, தெய்வ பக்தி, ஆன்மிக ஈடுபாடு, உடல் சுகம், சாமர்த்தியம், தலைமை தாங்கும் திறமை இதற்குரிய தனிக் குணங்கள்.

அசுவனி 4-ம் பாதம்: (இந்தப் பாதத்திற்கு சந்திரன் அதிபதி) உணர்ச்சிவசப்பட்டு வாழ்பவர், தார்மிகச் சிந்தனை உள்ளவர், திறமையும், நேர்மையும் உள்ளவர்கள் இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள்.