- Advertisement -

அக்ஷதை அபிஷேக வழிபாடு

- Advertisement -

திருமண தடைகளை நீக்கி சுப மங்கலம் தரும் இந்த ஒரு பொருளைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதால் ஏற்படக்கூடிய நன்மைகள் ஏராளம். இந்த பொருளைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வருபவர்களுக்கு வியாபாரம் செழிக்கும், செல்வங்கள் சேரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. தடைகளை அகற்றி விதியை மாற்றக்கூடிய இந்த அபிஷேகம் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.

அக்ஷதை, அதாவது பச்சரிசி மற்றும் மஞ்சள் கலந்த ஒரு புனிதமான தானியம். இது மங்கலம், செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாக நம் சாஸ்திரங்களில் போற்றப்படுகிறது. அக்ஷதை கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வருபவர்களுக்கு துன்பம் நிறைந்த சூழலும், காரிய தடைகளும் அகலும் என்பது நம்பிக்கை. தம் மக்கள் அனைவரும் தம்மை ஆசீர்வதித்து அட்சதை தூவி புதுவாழ்வு ஆரம்பிக்க வேண்டும் என்கிற கனவோடு இருப்பவர்களுக்கு, விரைவில் திருமண பாக்கியம் கைகூடும். இந்த சக்தி வாய்ந்த அபிஷேகம் கோவிலிலோ அல்லது வீட்டிலேயே எளிமையாக நாம் செய்து வழிபடலாம்.

- Advertisement -

சிவபெருமானுக்கு அக்ஷதை அபிஷேகம் செய்வதன் மூலம், அவர் மீது நம்முடைய நம்பிக்கையையும், பக்தியையும் முழுமையாகச் செலுத்துகிறோம். குறிப்பாக, வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வழிபாடு மிகுந்த நன்மைகளைத் தருவதாக ஆன்மீக நூல்கள் கூறுகின்றன. அதிலும் தானியங்களை வணிகப் பொருளாகக் கொண்டு தொழில் செய்பவர்களுக்கு இது மிகவும் உகந்தது.

அக்ஷதை அபிஷேகத்தின் ஆன்மீகப் பலன்கள்:
அக்ஷதை அபிஷேகம் என்பது, இயற்கை வளங்களை இறைவனுக்கு அர்ப்பணிப்பதாகும். இது நமக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை நீக்கி, நேர்மறை ஆற்றலை உருவாக்கும். நம்முடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப அமையும் தடைகளை அகற்றி, நல்வழியில் நம்மை பயணிக்கச் செய்யும் ஆற்றல் அக்ஷதை அபிஷேகத்திற்கு உண்டு. அக்ஷதை அபிஷேகத்தின் போது உச்சரிக்கப்படும் மந்திரங்கள், இறைவனின் அருளைப் பெற்றுத் தருவதுடன், நம்முடைய குடும்பத்தில் அமைதியையும், மகிழ்ச்சியையும் நிலைநிறுத்தும்.

- Advertisement -

வியாபார விருத்திக்கு அக்ஷதை அபிஷேகம்:
தானியங்கள், அரிசி, பருப்பு, தானியங்களைச் சார்ந்த உணவுப் பொருட்கள் போன்றவற்றை வியாபாரம் செய்பவர்களுக்கு அக்ஷதை அபிஷேகம் ஒரு வரப்பிரசாதம். இது உங்களுடைய வியாபாரத்தில் வளர்ச்சியை உண்டாக்குவதுடன், உங்களின் உழைப்புக்குரிய முழுப் பலனையும் பெற்றுத்தரும். இந்த அபிஷேகம், உங்களது கடை அல்லது நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பெருகி, வியாபாரம் சிறப்படையும். வியாபாரத்தில் எதிர்பாராத தடைகள், நஷ்டங்கள் போன்றவை நீங்கி, லாபம் பெருகும். வியாபாரத்தில் ஏற்படும் நிதி சிக்கல்கள் படிப்படியாகக் குறையும். அக்ஷதை அபிஷேகம் உங்களது தொழில் நேர்மையையும், நம்பகத்தன்மையையும் மேம்படுத்தும். இதன்மூலம் உங்களது வியாபாரத்துக்கு ஒரு நல்ல பெயர் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
பால் கேசரி செய்முறை

அக்ஷதை அபிஷேகம் செய்ய வேண்டிய முறை:
செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் இந்த அபிஷேகத்தை செய்வது மிகவும் விசேஷம். முதலில் சிவலிங்கத்திற்கு பால், தயிர், தேன், இளநீர் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யுங்கள். அதன்பின்னர், சிறிதளவு அக்ஷதையை எடுத்து, ‘ஓம் நம சிவாய’ மந்திரத்தை உச்சரித்து சிவலிங்கத்தின் மீது தூவி மென்மையாக, மெதுவாக அபிஷேகம் செய்யுங்கள். அபிஷேகம் முடிந்தபின், சிவபெருமானின் முன் அமர்ந்து, உங்களுடைய வியாபாரம் சிறக்க வேண்டும் என மனமுருக பிரார்த்தனை செய்யுங்கள். திருமண தடை நீங்க வேண்டும் என்பவர்கள், உங்கள் பிரச்சினையை கூறி பிரார்த்தனை செய்யுங்கள். இந்த எளிய வழிபாடு, உங்களுடைய வியாபாரத்திற்கு ஒரு புதிய ஆற்றலையும், வளர்ச்சியையும் தருவதோடு, உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய ஆன்மீக ஒளியையும் பாய்ச்சும். இறைவனின் அருளால் அனைத்து நன்மைகளும், சுபகாரியங்களும் உண்டாகட்டும்.

சற்று முன்