இன்று லட்சுமியை வீட்டிற்கு வரவைக்கும் பூஜை பற்றி தெரியுமா ?

Lakshmi pujai

சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியை நாளையே நாம் அட்சய திருதியை நாளாக கொண்டாடுகிறோம். இந்த நன்னாளானது குறைவற்ற செல்வத்தையும் ஒப்பில்லா ஐஸ்வர்யத்தையும் தரக்கூடிய வல்லமை பெற்றது. இன்று அட்சய திருதியை நாளில் முறையாக எப்படி பூஜை செய்து லட்சுமி தேவியை வீட்டிற்கு வரவைத்து நாம் அறிய பலன்களை பெறலாம் என்று பார்ப்போம் வாருங்கள்.

deepam

இன்று காலையில் எழுந்து நீராடிவிட்டு பூஜை அறையில் ஒரு கோலமிட்டு அதன் மேல் ஒரு மனை பலகையை வைக்க வேண்டும். பிறகு அந்த பலகையின் மேல் ஒரு வாழை இலையை போட்டு அதன் நடுவே பச்சரியைப் பரப்ப வேண்டும். பிறகு அந்த அரிசியின் நடுவே ஒரு செம்பு முழுக்க நீர் வைக்க வேண்டும். பிறகு ஒரு தேங்காயை எடுத்துக்கொண்டு அதற்க்கு மஞ்சள் தடவி பொட்டு வைத்து அதை அந்த செம்பின் மேல் வைத்து கலசம் போல் ஆக்க வேண்டும். ஒரே மாதிரியான சில்லறை காசுகள் ஒன்பதினை எடுத்துக்கொண்டு அதை கலசத்தை சுற்றி வைக்க வேண்டும். ஒரு டம்பளரில் நெல்லை எடுத்து அதை கலசத்திற்கு அருகே வைக்க வன்னெடும். நெல் இல்லாதவர்கள் அரிசியை வைக்கலாம்.

மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து அதை வாழை இலையில் வலது பக்கமாக வைக்க வேண்டும். வீட்டில் உள்ள லட்சுமி படம், லட்சுமி நரசிம்மர் படம் போன்ற தெய்வ படங்களைக்கு மலர் சூட்டி அலங்கரிக்க வேண்டும். புதிதாக ஒரு உப்பு பாக்கெட்டை வாங்கி அதை கலசத்தின் அருகே வைக்க வேண்டும். வேறு சில புதிய பொருட்கள் இருந்தாலும் வைக்கலாம். ஆனால் லட்சுமியின் அருள் பெற உப்பே போதுமானது. கடவுளுக்கு நைவேத்தியமாக ஒரு டம்ளர் சக்கரை கலந்த பாலை வைக்கலாம். பாயசம் செய்ய நேரம் இருந்தால் பால் பாயசம் செய்து வைக்கலாம்.

kamatchi vilakku

பூஜை அறையில் விளக்கேற்றிவிட்டு பூஜையை துவங்கலாம். முதலில் விநாயகருக்கான பூஜையை துவங்கலாம். அதன் பிறகு நாம் வைத்துள்ள கலசத்தில் மஹாலட்சுமி வந்து அமரும்படி வேண்டி மகா லட்சுமிக்கான மந்திரங்களை ஜபிக்க வேண்டும். அதோடு விஷ்ணு மந்திரம், குபேர மந்திரம், லட்சுமி நரசிம்மர் மந்திரம் போன்றவற்றை ஜபிக்கலாம். மந்திரத்தை ஜபிக்க முடியாதவர்கள் அதை கேட்கலாம். பிறகு தீப தூபம் காட்டி பூஜையை நிறைவு செய்யலாம். இன்று விரதம் இருக்க நினைப்பூர் விரதம் இருக்கலாம். விரதத்தினை முடித்த உடன் மீண்டும் கலசத்திற்கு தீப தூபம் காட்டி அதை வடக்கு பக்கமாக நகர்த்தி வைக்க வேண்டும். இது நாம் விரதத்தை முடித்துவிட்டோம் என்பதற்கான செயல் ஆகும். இந்த பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட அரிசி, தேங்காய் போன்றவரை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தலாம்.

- Advertisement -

Kalasam

இந்த பூஜையை செய்வதன் மூலம் மகா லட்சுமி நமது வீட்டில் குடிகொள்வாள் என்பது ஐதீகம். இந்த பூஜையின் பலனாக அடுத்த வருடம் அட்சய திருதியை பூஜை செய்வதற்கு முன்பு நமது கடன்கள் பெரும்பாலும் அடைந்துவிடும். அடகு வைத்த நகைகள் அனைத்தையும் மீட்பதற்கான வழி பிறக்கும். வீட்டில் செல்வம் பெருகும்.

இதையும் படிக்கலாமே:
அட்சய திருதியை நாளில் கூற வேண்டிய ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

English Overview:
Here we have tips to do Atchaya thiruthi puja in Tamil. By doing the atchaya thiruthi puja Goddess Lakshmi will come to our house and bless us.