காஞ்சி அத்திவரதர் தரிசனம் செய்ய விரும்புபவர்களுக்கான அவசிய குறிப்புக்கள்

athivaradhar

மகாவிஷ்ணு எனப்படும் பெருமாளை முழுமுதற்நாயகனாக கொண்டு வழிபடும் வைணவ மதம் பல சிறப்புகளைக் கொண்டது. அந்த வைணவ மதத்தின் பெருமையை தழைத்தோங்கச் செய்யும் பல புகழ்பெற்ற கோயில்கள் நாடெங்கிலும் இருக்கின்றன. அக்கோவில்களின் சில நடைமுறைகள் அதிசயம் அளிக்கும் வகையில் இருக்கின்றன. அப்படி ஒன்று தான் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில் குளத்திலிருந்து எடுக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்படும் அத்திவரதர் திருமேனி வைபவம் ஆகும். பெரும்பாலானவர்கள் தங்களின் வாழ்வில் ஒருமுறை அல்லது அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே தரிசிக்கும் பாக்கியம் உள்ள இந்த அத்திவரதரின் அற்புத தரிசனம் சிறப்பாக அமைய பக்தர்களுக்கான சில அவசிய குறிப்புகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக சனிக்கிழமையென்றாலே பெருமாள் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமிருக்கும். அதுவும் அபூர்வமான அத்திவரதரை சனிக்கிழமையில் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை புரிவதால் வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் அத்திவரதரை தரிசிக்க செல்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் தற்போது தினந்தோறும் அத்திவரதர் தரிசன நேரம் இரவு 11 மணியிலிருந்து இரவு 9 மணி வரை மட்டும் என குறைக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கேற்றார் போன்று முன்திட்டமிடல் நல்லது.

கடுமையான கோடைகாலம் இன்னும் நீடிப்பதால், வெயிலின் கோர தாக்கத்திலிருந்து அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் அத்திவரதர் உகந்த நேரங்களாக இருக்கிறது. அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள்ளாக காஞ்சி வரதராஜர் கோயிலுக்கு சென்றால், கோயிலின் கிழக்கு கோபுர வாயில் வழியாக வயதானவர்கள், குழந்தைகளுடன் வரும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரை தனி வரிசையில் அனுப்புகின்றனர், அரை மணி நேரத்தில்இத்தகையவர்களுக்கு அத்திவரதர் தரிசனம் கிடைக்கின்றது.

people

கைக் குழந்தைகள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அழைத்து வரும் பக்தர்கள் தங்களுடன் ஒரு பையில் குடிநீர் பாட்டில், பிஸ்கெட், பழங்கள் எடுத்துச் செல்வது நல்லது,முடிந்தால் கையுடன் ஒரு விசிறி மட்டையும் எடுத்துச் செல்வது நல்லது.

- Advertisement -

காலி குடிநீர் பாட்டில்களையும், தின்பண்டங்களையும் வழியிலும், கோவில் பிரகாரத்திலும் வீசாமல், கைப்பைகளில் சேகரித்து வைத்துக் கொண்டு,தரிசனம் முடிந்தபின் வெளியே உள்ள குப்பைத் தொட்டிகளில் வீசி கோயில் மற்றும் காஞ்சிபுரம் நகரத்தின் தூய்மையை பேண பக்தர்களை கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

athi vardhar

தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள், இரண்டு நாட்களுக்கு திட்டமிட்டு காஞ்சிபுரம் நகரத்தில் தங்கும் அறை வாடகைக்கு எடுத்துக் கொள்வது நல்லது. இப்படி செய்வதால் கோயிலில் அதிக கூட்டநெரிசல் இருந்தால் அறைக்கு திரும்பி விட்டு, பின் கூட்டம் சற்று குறைந்த பின் சென்று தரிசனம் செய்யலாம். அப்படியே காஞ்சிபுரத்தில் இருக்கும் பிற கோவில்களுக்கும் சென்று தரிசிக்கவும் வழிவகை செய்கிறது.

அத்திவரதர் தரிசனத்திற்காக கோயில் நிர்வாகம் மற்றும் அரசு இயன்ற முன்னேற்பாடுகளை செய்தாலும், பக்தர்களாகிய நாமும் தகுந்த சில முன்னேற்பாடுகளை செய்து கொள்வதால் சிரமங்களை தவிர்க்கலாம். ஒரு சிலர் உள்நோக்கத்துடன் கோயில் நிர்வாகம் மற்றும் அரசாங்க ஏற்பாடுகளின் குறைகளை மட்டுமே மிகைப்படுத்தி வெளியிடும் வலைதள பதிவுகள், வாட்ஸப் வதந்திகள் போன்றவற்றை நம்ப தேவையில்லை.

ramanujar

நாம் அனைவரும் தரிசிக்க செல்வது ராமானுஜரும், திருக்கச்சி நம்பிகளும், வேதாந்த தேசிகரும், பூதத்தாழ்வாரும் சேவித்து, பூசித்து, நேசித்த பேரரருளாளன் அத்தி வரதர் என்பதை மனதில் கொண்டு அவரை வழிபடுவதால் அவரின் கடைக்கண் பார்வை பட்டு, நமது பிறவிப்பிணியை போக்கி, அருட்கடாச்சம் தரும் அத்திவரதர் பெருமாளின் அருளால் வாழ்வில் எல்லா இன்பங்களையும் அனைவரும் பெற பிராத்திப்போம்.

இதையும் படிக்கலாமே:
தொழில் லாபங்கள் பெருக பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadar darshan tips in Tamil. It is also called as Athi varadhar in Tamil or Kanchipuram varadaraja perumal in Tamil or Athi varadar vaibhavam in Tamil or Athi varadhar vizha in Tamil.