அத்தி வரதரை இந்த தினங்களில் வழிபட்டால் சிறப்பான பலன்கள் உண்டு

athi-varadhar
- Advertisement -

இறைவழிபாடு என்பது நமக்கு வாழ்வில் அனைத்து இன்பங்களும் அளிப்பதோடு, உண்மையான மன அமைதி மற்றும் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கிறது. காணும் இடங்களிலெல்லாம் கோவில்கள் கொண்ட ஒரு புனித நகரமாக காஞ்சிபுரம் மாநகரம் திகழ்கிறது. அதில் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதர் பெருமாளை எந்த தினங்களில் வழிபட்டால் அதிக பலன்களை பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 தினங்கள் மட்டுமே பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதரை உங்களுக்கு வசதியான சமயங்களில் வழிபாடு செய்யலாம். எனினும் சில குறிப்பிட்ட நட்சத்திர தினங்களில் அத்தி வரதராஜபெருமாள் வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்வில் நன்மையான பலன்கள் உண்டாகும் எனக் கூறப்படுகிறது.

- Advertisement -

பொதுவாக மகாவிஷ்ணுவிற்கு மிகவும் விருப்பமான நட்சத்திர தினங்களாக கருதப்படும் திருவோணம் மற்றும் ரோகிணி நட்சத்திர தினங்களில் அத்திவரதரை தரிசனம் செய்வதால் வாழ்வில் மேன்மையான பலன்கள் உண்டாகும் என கருதப்படுகிறது. அப்படி இயலாதவர்கள் தங்கள் ஜென்ம நட்சத்திர தினங்களில் அத்திவரதரை வழிபடுவதால், தங்கள் பிறந்த நட்சத்திரங்களால் ஏற்படுகின்ற தோஷங்கள் நீங்கி வாழ்வில் அனைத்து செல்வங்களையும், இன்பங்களையும் கிடைக்கப் பெறுகிறார்கள்.

புராணங்களின்படி அத்திவரதர் சந்திர பகவானுக்குரிய அஸ்தம் நட்சத்திரத்தில் அவதரித்தவராவார். அஸ்த நட்சத்திர தினத்தன்று அத்திவரதரை வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்திலும் வெற்றி பெறும் யோகமும், வாழ்வில் எல்லா விதமான இன்பங்களும் கிடைக்கப் பெற்று, இறுதியில் மீண்டும் பிறவாமை என்னும் முக்தி பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
அத்தி வரதரை வழிபடுபவர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadar valipadu in Tamil. It is also called Athi varadar darshan in Tamil or Athi varadar kovil in Tamil or Athi varadhar vizha in Tamil.

- Advertisement -