அத்தி வரதரை வழிபடுபவர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு என்ன தெரியுமா?

athi-varadhar
- Advertisement -

கோயில்களின் நகரம் காஞ்சிபுரம் என்பது அனைவரும் அறிந்தது தான். சைவம் மற்றும் வைணவ சம்பிரதாய கோயில்கள் சம அளவில் நிறைந்த ஒரு ஆன்மீகபுரியாக காஞ்சிபுரம் இருக்கிறது. அத்தகைய அற்புதமான நகரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வ நிகழ்வாக காஞ்சி அத்தி வரதர் தரிசன வைபவம் இருக்கிறது. அந்த அற்புத ஆன்மீக நிகழ்வை குறித்து கோயில் மற்றும் காஞ்சிபுரம் நகர நிர்வாகத்தினர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஜூலை மாதம் 21 ஆம் தேதி வரையில் மொத்தம் 25 லட்சம் பக்தர்கள் அத்தி வரதர் தரிசனம் செய்துள்ளதாக காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் நாளுக்கு நாள் அத்தி வரதர் தரிசனம் செய்வதற்கு தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களிலிருந்து வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

- Advertisement -

பெருவாரியான பக்தர்கள் அத்திவாரதர் தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கில் காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலுக்கு வருவதால் தரிசனத்திற்காக பக்தர்கள் நிற்கின்ற வரிசையில் அதிகளவு கூட்டநெரிசல் உண்டாகிறது. மேலும் கடுமையான வெப்பமும், சரியான குடிநீர், கழிப்பிட வசதிகள் இல்லாததாலும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சமீபத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் கடுமையான கூட நெரிசலால் 4 பக்தர்கள் உயிரிழந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.

தினந்தோறும் திரளான பக்தர்கள் அத்தி வரதர் தரிசனம் செய்ய நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டியிருப்பதாலும், மேலும் அசம்பாவித நிகழ்வுகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் காஞ்சிபுரம் நகர நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாக குழுவும் பக்தர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

- Advertisement -

அதாவது முதியோர்கள், உடல் ஆரோக்கியம் குன்றியவர்கள், கர்ப்பிணி பெண்கள், சிறு குழந்தைகள் கொண்டிருக்கும் குடும்பத்தினர் ஆகியோரின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி மக்கள் நெருக்கடி மிகுந்த காஞ்சிபுரம் அத்தி வரதரை நேரில் தரிசிக்க செல்வதை தவிர்க்க வேண்டுமென்பதே கோயில் மற்றும் காஞ்சிபுரம் நகர நிர்வாகத்தின் அந்த வேண்டுகோளாகும்.

இதையும் படிக்கலாமே:
அனைவருக்கும் நன்மை தரும் அத்தி வரதர்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar announcement in Tamil. It is also called as Athi varadhar in Tamil or Athi varadhar dharshan in Tamil or Kanchipuram temple in Tamil or Athi varadhar peruvizha in Tamil.

- Advertisement -