அத்தி வரதர் தரிசனத்தின் போது ஏற்பட்ட மகிழ்ச்சியான சம்பவம்

athi-varadhar

இறைவனின் மீது தீவிரமான பக்தி கொண்ட ஒருவர் தனது உடலுக்கு எவ்வளவு கஷ்டங்கள் உண்டானாலும் தன் மனதில் தெய்வத்தின் மீது இருக்கின்ற ஈடுபாட்டில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது. அப்படித்தான் கடந்த 43 நாட்களுக்கும் மேலாக நாடெங்கிலும் இருந்து எண்ணிலடங்கா பக்தர்கள் உடல் மற்றும் மன கஷ்டங்களை துச்சமாகக் கருதி, அத்தி வரதர் பெருமாள் தரிசனம் காண வந்த வண்ணம் இருக்கின்றனர். பெண்கள், குழந்தைகள், முதியோர்களும் மிகுந்த ஆர்வத்துடன் அத்தி வரதர் தரிசனம் செய்வதற்கு காத்திருப்பதை தினந்தோறும் காண முடிகின்றது. மிகச் சிறப்பான இந்த அத்தி வரதர் வைபவத்தில் நடைபெற்ற ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

varadharaja perumal

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற அத்தி வரதர் தரிசனம் வைபவம் இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய உள்ளதால் இது வரை அத்தி தரிசனம் காணாதவர்கள், ஏற்கனவே அத்தி வரதர் தரிசனம் செய்தவர்களும் மிக அதிக அளவில் காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வருவதால் பெருமானுடைய தரிசனம் செய்யும் அனைத்து வகையான பக்தர்களின் வரிசையிலும் கூட்ட நெருக்கடி மிக அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக அத்தி வரதர் தரிசனம் செய்ய நள்ளிரவு வரை எடுத்துக் கொள்கிறது. அப்படி வருகின்ற பக்தர்கள் சுட்டெரிக்கும் வெயிலையும், மிகுதியாக பொழிகின்ற மழையையும் பொருட்படுத்தாமல் மிகுந்த பொறுமையுடன் அத்தி வரதர் தரிசனம் செய்வது, பெருமாளின் மீது அவர்களுக்கிறுகின்ற தீவிர பக்தியைக் காட்டுவதாக உள்ளது.

அத்திவரதர் தரிசனத்திற்கான பக்தர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி மிகவும் அவதிப்படுபவர்கள் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தான். இதில் உடல் ஊனமுற்றவர்கள், வயதில் மூத்த பெருமக்கள், கர்ப்பிணி பெண்கள் போன்றவர்களுக்கு தனியான தரிசன வரிசை இருந்தாலும் பெரும்பாலானோர்களுக்கு அது குறித்து முறையாக தெரியப்படுத்தாதால், பலரும் பொதுவான இலவச தரிசன வரிசையில் நெடுநேரம் நின்றபடி வந்து அத்திவரதர் பெருமானை வழிபட்டு செல்கின்றனர்.

Athi-Varadar-Kanchi

இந்நிலையில் இன்று காலை அத்தி வரதர் தரிசனம் முடித்து வெளியே வந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி உண்டானது. இதை பார்த்த அங்கிருந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணை கோவிலுக்கு அருகில் இருக்கும் மருத்துவ முகாமுக்கு அழைத்து சென்றனர். அங்கு உடனடியாக அப்பெண்ணுக்கு சிகிச்சையில் மருத்துவ குழு இறங்கியது.

- Advertisement -

baby boy

சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை 3 கிலோ எடையில் இருப்பதாகவும், தற்போது தாய், சேய் இருவரும் நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அத்திவரதர் பெருமாளை தரிசித்து வந்த உடன் அந்த ஆண் குழந்தை பிறந்தது குறித்து அங்கிருந்த பக்தர்கள் பிறந்த அந்தக் குழந்தை மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும், அத்தி வரதரை அருளினால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் மிக சிறப்பாக இருக்கும் என எண்ணி மகிழ்ந்தனர்.

இதையும் படிக்கலாமே:
எப்போதும் பணக்கஷ்டம் ஏற்படாமல் காக்கும் பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar baby birth in Tamil. It is also called as Athi varadhar in Tamil or Athi varathar festival in Tamil or Kanchipuram athi varadhar seidhigal in Tamil.