அத்தி வரதர் தரிசனத்திற்கு மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு செய்துள்ள வசதிகள் இதோ

athi-varadhar
- Advertisement -

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் மிகப் பழமையான கோவில்கள் நிறைந்த ஆன்மிக பூமியாக விளங்குகிறது. இவற்றில் ஒரு சில கோவில்கள் எப்போதும் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும், ஒரு சில கோயில்கள் சில குறிப்பிட்ட விழா காலங்களில் மட்டுமே மிக அதிக அளவிலான பக்தர்களின் வருகையை பெறும் வகையில் இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு கோவில் விழா தான் காஞ்சி வரதராஜர் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன திருவிழா. இந்த அத்திவரதர் வைபவத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் செய்துள்ள வசதிகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

athi vardhar

கடந்த 1979 ஆம் ஆண்டுக்குப் பிறகு 40 ஆண்டுகள் கழித்து தற்போது 48 தினங்களுக்கு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் தரிசன வைபவம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலானவர்களுக்கு வாழ்வில் ஒருமுறை அல்லது இரு முறை மட்டுமே இந்த அத்தி வரதர் தரிசனம் கிடைக்கும் என்பதால் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் காஞ்சிபுரம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

- Advertisement -

48 நாட்கள் நடைபெறுகின்ற இந்த அத்தி வரதர் தரிசனத்துக்காக பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் நிற்க வேண்டியிருப்பதால் உணவு, தண்ணீர் கூட இல்லாமல் அவதிப்படுகின்ற நிலை இருப்பதை அறிந்த மாவட்ட நிர்வாகம் கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு இலவச உணவு மற்றும் குடிநீர் வழங்கும் ஏற்பாடுகளை தொடங்கி செய்து வருகிறது.

people

காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் அத்தி வரதர் தரிசன ஏற்பாடுகளை செய்த பிறகு ஊடகங்களிடம் பேசிய போது கடந்த சில தினங்களாக கடும் கூட்ட நெரிசலால் சரியான நேரத்திற்கு உண்ண முடியாமலும், குடிநீர் அருந்த முடியாமலும் பக்தர்கள் தவிப்பதை அறிந்த சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இலவச அன்னதானம் வழங்க முன் வந்த போது, அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்ததாகவும், தற்போது மேலும் சில அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் பக்தர்களுக்கு இலவச குடிநீர் வினியோகம் செய்ய முன்வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

- Advertisement -

annadhanam 1

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 16 கால் மண்டபத்தின் அருகில் அரசின் சுகாதார துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும். இதுவரை மட்டும் 25,000 கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மருத்துவ முகாமில் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன என்றும், மேலும் இனி வரவிருக்கும் நாட்களில் அத்திவரதர் தரிசனம் அனைவருக்கும் சுமூகமாக அமைவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

இதையும் படிக்கலாமே:
அத்தி வரதரின் சிறப்பு அலங்கார தரிசனம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar arrangement in Tamil. It is also called as Athi varadhar dharshan in Tamil or Kanchi athi varadar in Tamil or Athi varadhar vizha in Tamil.

- Advertisement -