அத்தி வரதர் இன்றிரவு இவ்வாறு தான் அனந்த சரஸ் குளத்திற்குள் செல்கிறார்

Athi-Varadar-perumal
- Advertisement -

கடந்த 1979 ம் ஆண்டிற்கு பிறகு சரியாக 40 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூன் மாத இறுதியில் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டார். பிறகு அத்தி வரதர் சிலை ஆகம விதிகள் படி தூய்மை செய்யப்பட்டு கடந்த ஜூலை 1 ம் முதல் இருந்து பக்தர்களுக்கு தரிசனம் தர தொடங்கினார். ஒவ்வொரு நாளும் பல விதமான மலர் அலங்காரங்களோடு, தினமும் ஒவ்வொரு வண்ணத்தில் பட்டு ஆடைகளை அணிந்து அருள்பாலித்தார். மேலும் ஜூலை 31 வரை சயனகோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்த அத்தி வரதர் பின்னர் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் தரிசனம் தந்தார். அந்த அத்தி வரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்கப்படுவதை குறித்து சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

athi varadhar

அத்தி வரதர் 48 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் தருவதால், மூலவர் வரதராஜ பெருமாளுக்கு செய்யப்படும் நான்கு கால பூஜைகள் அத்திவரதருக்கு செய்யப்படுவதில்லை என கூறப்படுகிறது. எனினும் பெருமாளுக்கு உகந்த நைவேத்தியங்கள் வைக்கப்பட்டு, தீபாராதனை மற்றும் அர்ச்சனை மட்டுமே வழக்கமாக செய்யப்பட்டது. மொத்தம் 48 நாட்களிலும் கிட்டத்தட்ட 1 கோடி பக்தர்கள் காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசித்து உள்ளனர் அதிகாரப்பூர்வாமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் கடந்த 48 நாட்கள் இந்திய நாடே வியக்கும் வகையில் மிக பிரமாண்டமாக நடைபெற்ற அத்தி வரதர் வைபவம் இன்று இரவு நிறைவு பெறுகிறது. பக்தர்களுக்கான அத்தி வரதர் பொது தரிசனம் அனைத்தும் நேற்றே முடிக்கப்பட்டு விட்டதால் இன்று ஆகம விதிப்படி செய்ய வேண்டிய பூஜைகள் அனைத்தும் முறையாக செய்யப்பட்டு அத்திவரதர் மீண்டும் தன் இருப்பிடமான அனந்தசரஸ் திருக்குளத்தில் அடுத்த 40 ஆண்டு காலம் சயனம் கொள்ளவிருக்கிறார்.

அத்தி வரதர் வைபவத்தின் இறுதி நாளான இன்று அதிகாலை முதல் அத்திவரதருக்கு ஆகம விதிப்படி சிறப்பு பூஜைகள் தற்போது வரை நடைபெற்று வருகின்றன. வரதராஜ பெருமாள் கோயில் பட்டாச்சாரியர்கள் இடைவிடாது வேத மந்திரங்களை முழங்கி பூஜைகள் செய்து வருகின்றனர். அடுத்து 40 ஆண்டுகள் தண்ணீருக்குள் அத்திவரதர் வைக்கப்பட இருப்பதால், சிலை சேதமடையாமல் இருப்பதற்காக பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் சிறப்பு தைலங்கள் வரதர் சிலைக்கு பூசப்பட்டு வருகிறது .

- Advertisement -

Athi-Varadar

இவையெல்லாம் முடிந்ததும் இன்று இரவு 10 மணிக்கு மேல் அத்திவரதர் அனந்த சரஸ் குளத்திற்குள் எடுத்து செல்லப்படுவார். அங்கு அவரது மண்டபத்தின் கீழ் இருக்கும் பாதாள ரகசிய அறையில் சயனக்கோலத்தில் கிடத்தப்படுவார். தலைப்பகுதி ஒரு ஆதிசேஷன் உருவம் செய்துக்கப்பட்ட ஒரு கருங்கல்லின் மேல் வைக்கப்படும். மேலும் அத்தி வரதர் சிலைக்கு தாந்திரீக கவசமாக சுற்றிலும் 16 நாக தேவதைகளின் சிலையும் வைக்கப்படும் என கூறப்படுகிறது.

athi varadhar

மேற்கூறியவை அனைத்தும் செய்து முடிந்ததும் பாதாள அறையில் இருந்து அனைவரும் வெளியே வந்த பின்பு, கோவிலின் பொற்றாமரை குளத்திலிருந்து தண்ணீர் அனந்தசரஸ் திருக்குளத்திற்குள்ளாக செலுத்தப்படும். மிகவும் ஆத்மார்தமாக செய்யப்பட வேண்டிய இந்த நிகழ்வின் போது கோயில் பட்டாச்சாரியார்கள், திருக்கோவில் ஊழியர்கள், காவல் துறையினர் தவிர மற்ற யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என முன்னரே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு 2059 ஆம் ஆண்டில் மட்டுமே நாம் அனைவரும் அத்திவரதர் பெருமாளை தரிசிக்க முடியும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
சபரி மலை கோயில் விவகாரம் – பந்தள மன்னர் எச்சரிக்கை

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar sayanam in Tamil. It is also called as Athi varadhar in Tamil or Kanchipuram varadaraja perumal kovil in Tamil or Athi varadhar kovil thiruvizha in Tamil.

- Advertisement -