சபரிமலை கோயில் சதி – பந்தள அரச குடும்பத்தின் எச்சரிக்கை

ayyapan

மனம் என்பது குரங்கை போன்றது. ஒரு நொடியில் கூட நாம் விரும்பிய மன அமைதியை குரங்கு போன்று தாவுகின்ற நமது மன எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் காரணாமாக பெற முடியாது. இப்படியான மனதை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இறைவனின் பேராற்றலை உணரச் செய்வதற்காக மேற்கொள்ளப்படுவது விரத வழிபாடு. விரதங்களில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது சபரிமலையில் பிரம்மச்சாரியாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரியும் ஸ்ரீ ஐயப்பனுக்கு மேற்கொள்ளப்படும் விரதம் ஆகும். பல லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டிருக்கும் ஐயப்பன் கோவிலுக்கு கடந்த ஆண்டு அரசு மன்றம் நீதிமன்றத்தின் செயல்பாடுகளால் சிறிது பிரச்சனைகள் ஏற்பட்டது. அந்த வகையில் மீண்டும் ஐயப்பன் கோயிலுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினை என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ayyappan

48 நாட்கள் விரதம் அனுஷ்டித்து, கடுமையான கரடு முரடான பாதைகள், கொடிய விலங்குகள் நிறைந்த காடுகளின் வழியே சென்று சபரிமலை மீது கன்னிச்சாமி ஆக அருள் புரியும் ஐயப்பனை வருடந்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று தரிசனம் செய்கின்றனர். பல ஆண்டுகாலம் எந்த ஒரு பிரச்சனைகள் இல்லாது சுமுகமாக நடைபெற்று வந்த இந்த ஐயப்ப தரிசனம் விசேஷத்திற்கு கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று தரிசிக்கலாம் என்ற தீர்ப்பை வழங்கிய பிறகு, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள மாநிலத்தின் பல பகுதிகள் மற்றும் சபரிமலை கோயில் இருக்கும் பகுதிகளில் ஐயப்ப பக்தர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை உலகம் முழுவதும் அறிந்த ஒரு விடயமாகும்.

மலையாள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை தினத்தில் சபரிமலையில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். இதை காண்பதற்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலைக்கு வருகை புரிவர். மேலும் சில வாரங்களில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வழிபடும் ஐப்பசி மாதம் தொடங்க இருப்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் அதற்கான முன்னேற்பாடுகள் சிறிது சிறிதாக செய்யப்பட்டு வருகிறது.

ayyappan

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் இருக்கும் வனப்பகுதியை பற்றி ஆராய்ந்து முழுமையான அறிக்கை தர கேரள அரசு வனத்துறை சார்ந்த நிபுணர்கள், அதிகாரிகள் குழுவை அமைத்தது. சபரிமலை வனப்பகுதியை ஆராய்ந்த அந்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் அந்த வனப்பகுதியில் இயற்கை தன்மை சீர் கெடாமல் இருக்க சபரிமலைக்கு தினந்தோறும் வரும் பக்தர்களின் எண்ணிக்கையை 6000 அளவில் குறைக்க வேண்டும் என்கிற ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர்.

- Advertisement -

sabarimala temple

இது பற்றி கேள்விப்பட்ட பந்தள அரசர் குடும்பத்தினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வனத்துறை மற்றும் கேரள அரசுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பந்தள அரச குடும்பத்தின் நிர்வாகக்குழு செயலர் வனத்துறையின் இந்த அறிக்கையைப் பற்றி கூறும்போது வனத்துறை மற்றும் கேரள அரசும் சபரிமலை பக்தர்களின் வருகையை குறைக்கும் முயற்சி கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், ஐயப்ப பக்தர்களின் வழிபாட்டிற்க்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான முயற்சிகளை வனத்துறை மற்றும் கேரள அரசு கைவிட வேண்டும் என அறிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்கலாமே:
அரசாங்க வேலை கிடைக்க எளிய பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sabarimala temple matter in Tamil. It is also called as Pandalam raja in Tamil or Sabarimalai ayyappan kovil in Tamil or Ayyappan valipadu in Tamil or Ayyappan kovil in Tamil.