அனந்த சரஸில் சயனம் கொண்டார் அத்தி வரதர் – மேலும் விவரங்கள் இதோ

athi-varadha

கடந்த ஒன்றரை மாதமாக உலகெங்கிலும் உள்ள ஆன்மீக அன்பர்கள் அதிகம் பேசப்பட்ட ஒரு விடயமாக 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற அத்தி வரதர் தரிசனம் இருந்தது. பக்தர்களுக்கான அத்தி வரதர் தரிசனம் முடிவடைந்து நேற்றைய தினம் அத்தி வரதரை மீண்டும் குளத்திற்குள் வைப்பதற்கான திருப்பணிகள் நடைபெற்று முறையாக திருக்குளத்தில் அனந்த சயனம் செய்ய வைக்கப்பட்டார். அது குறித்த முக்கிய தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

athi varadhar

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வசந்த மண்டபத்தில் 48 நாட்கள் அத்திவரதர் பக்தர்களுக்கு சிறப்பாக அருள்பாலித்தார் இந்நிலையில 48-வது நாளான நேற்று அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் சயனிப்பதற்கான பணிகள் மற்றும் சிறப்பு ஆராதனைகள் கோயில் சார்பாக ஆகம விதிகளை பின்பற்றி நடைபெற்றன. அதே நேரம் திருக்குளத்தில் அத்தி வரதர் சயனம் கொள்ளும் அறையை அதிகாரிகள் ஆய்வு செய்தனர், செய்தியாளர்களும் அவற்றை படமெடுக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு அத்திவரதருக்கு 48 வகையான பட்சண நைவேத்தியங்கள் வைத்து அர்ச்சகர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். இதைத் தொடர்ந்து காஞ்சி வரதராஜ பெருமாள் உற்சவர் வரதராஜப் பெருமாள் அத்திவரதரை தரிசிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், மலர் அலங்காரத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் உற்சவர் வரதராஜப் பெருமாள் கண்ணாடி மாளிகையில் இருந்து புறப்பட்டுச் சென்று வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருந்த அத்திவரதரை தரிசித்தார். பின்னர், கோயில் வளாகத்தை சுற்றி வந்த உற்சவர் மீண்டும் கண்ணாடி மாளிகையை அடைந்தார். இதில் கோயில் அர்ச்சகர்களின் குடும்பத்தினர், கோயில் ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

athi varadhar

இதைத் தொடர்ந்து அத்திவரதர் அனந்த சரஸ் குளத்தில் சயனிக்க தயாரானார். அத்தி வரதர் சிலையை சிறப்பு பல்லக்கில் சுமந்து சென்று அத்தி வரதரை வைக்க உள்ள அனந்தசரஸ் குளத்தில் தண்ணீர் சுரந்தபடியே இருந்தது. இந்த தண்ணீர் குளத்தில் இருப்பது, அத்திவரதரை பாதாள மண்டபத்துக்குள் வைத்து பூஜை செய்ய இடையூறாக இருக்கும் என்பதால் ராட்சத மோட்டார்கள் பயன்படுத்தி அந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

- Advertisement -

athi varadhar

இந்து சமய அறநிலையத் துறைஆணையர் குளத்தைஆய்வு செய்த பின்னர், அத்திவரதருக்கு செய்யப்பட்ட அலங்காரங்கள் நீக்கப்பட்டு, புது வஸ்திரம் மட்டும் சாற்றப்பட்டு அனந்த சரஸ் குளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அப்போது கோயில் பட்டர்கள் மட்டுமே பாதாள அறைக்குள் இருந்தனர். அங்கு அத்திவரதரின் தலைப் பகுதி மேற்கிலும், திருவடிப் பகுதி கிழக்கிலும் இருக்குமாறு சயனக்கோலத்தில் அங்குள்ள கருங்கல் கட்டிலில் வைத்தனர். அவரது தலைப் பகுதி கருங்கல் கட்டிலில் உள்ள திண்டில் வைக்கப்பட்டு, அவரை சுற்றிலும் 16 நாக பாஷங்கள் தாந்த்ரீக காப்புகளாக வைக்கப்பட்டன.

athi varadhar

இதன் பின்னர் கோயில் பட்டர்கள், ஸ்தானிகர்கள் செய்ய வேண்டிய பூஜைகள், சடங்குகள் ஆகம விதிப்படி செய்யப்பட்டன. பின்னர் பள்ளியறை பாசுரங்கள் பாடப்பட்டு அத்திவரதர் சயனிக்க வைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்தக் அனந்த சரஸ் குளம் நீரால் நிரப்பப்பட்டது. அத்திவரதர் அனந்த சயனம் கொள்ள வைக்கப்பட்ட பின் அந்த மண்டபத்தை நோக்கி அங்கிருந்தவர்கள் அனைவரும் கைகூப்பி வணங்கினர்.

athi varadhar

இத்துடன் 40 ஆண்டுகள் கழித்துதான் பொதுமக்கள் தரிசனத்துக்கு அத்தி வரதராஜ பெருமாளை வெளியே எடுப்பர். அதுவரை அத்திவரதரை நாம் அனைவருமே தற்போது எடுக்கப்பட்ட காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் மனதால் மட்டுமே தரிசிக்க முடியும். கண்களால் தரிசிக்க முடியாது என்ற எண்ணங்களுடன் அத்தி வரதரை அனந்த சயனத்தில் வைத்த பிறகு கோயில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் உட்பட அனைத்து பக்தர்களும் கணத்த இதயத்துடன் கலைந்து சென்றனர்.

இதையும் படிக்கலாமே:
அத்தி வரதரின் ராஜ கோல தரிசனம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar thirusayanam in Tamil. It is also called as Athi vardhar in Tamil or Athi varadhar kovil in Tamil or Athi varadhar vizha in Tamil.