அத்தி வரதரின் ராஜா கோல தரிசனம் – பக்தர்கள் ஆனந்தம்

athi-varadhar

தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்களால் வழிபடப்படும் கோவிலாக திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோவிலில் இருக்கிறது. அந்தக் கோயிலிலேயே தற்போது பக்தர்கள் கூட்டம் ஏதும் இல்லாத நிலையை ஏற்படுத்தி விட்டது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் தரிசன விழா என கூறப்படுகிறது. மிக சிறப்பு வாய்ந்த இந்த அத்தி வரதர் தரிசனத்தை வாழ்வில் ஒருமுறையாவது கண்ட விட வேண்டும் என்ற வேட்கையில் பக்தர்கள் தினமும் காஞ்சிபுரம் வந்து கொண்டிருக்கின்றனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த அத்தி வரதர் தரிசனம் குறித்த சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற ஒரு ஆன்மீக அதிசய வைபவம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறுகின்ற அத்திவரதர் தரிசன விழா. கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் நடைபெற்ற அத்தி வரதர் தரிசனம் நாளை முடிவடைய இருப்பதால் பெரும் திரளான பக்தர்கள் கஷ்டங்களை பொருட்படுத்தாமல், நெடுநேரம் வரிசையில் நின்று அத்தி வரதர் தரிசனம் செய்வதற்கு தயங்காமல் வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர். கோவில் நிர்வாகத்தின் கணக்குப்படி தற்போது வரை 90 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதர் தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். மகாவிஷ்ணு அலங்காரப்பிரியர் என அழைக்கப்படுகிறார். எனவே இந்த 48 நாட்களிலும் தினமும் ஒவ்வொரு விதமான ஆடை, அலங்காரங்களுடன் அத்தி வரதர் தனது திவ்ய தரிசனத்தை பக்தர்களுக்கு கொடுக்கிறார். திருப்பதி ஏழுமலையான் தான் எந்நேரமும் விலை உயர்ந்த நகைகள், ரத்தினங்கள் அணிந்து, மகுடம் தரித்து ராஜ கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார். அந்த திருப்பதி பெருமாளை போன்றே கடந்த இரண்டு தினங்களாக அத்தி வரதர் மகுடம் தரித்து, ஆபரணங்கள் அணிந்து அரசனை போன்ற தோரணையில் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்த வண்ணம் இருக்கிறார்.

Athi-Varadar-Kanchi

மிக அபூர்வமான இந்த தரிசனத்தை கடந்த சில தினங்களாக ஏராளமான பக்தர்கள் கண்டு ஆனந்தம் அடைந்தனர். மேலும் ஆடிப் பௌர்ணமியான இன்றைய தினத்தில் பெருமாளுக்கு அவரது அணுக்கத் தொண்டரும், பெரிய திருவடி என அழைக்கப்படுபவருமான “கருட பகவான்” செய்யும் கருட சேவை வைபவம் நடைபெற உள்ளது. எனவே இன்றைய தினம் மேலும் சிறப்பாக அலங்காரங்கள் செய்யப்பட்ட அத்தி வரதர் தரிசனம் பக்தர்களுக்கு கிடைக்கப் பெற உள்ளது .

- Advertisement -

Garudan

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மாதந்தோறும் வரும் பௌர்ணமி தினத்தில் கருட சேவை வைபவம் நடைபெறுவது வழக்கம். எனவே இன்று மாலை 4 மணி முதல் 8 மணிவரை கருட சேவை நடைபெறும் நேரத்தில் அத்தி வரதர் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, 8 மணிக்கு பிறகு மீண்டும் அத்திவரதர் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே:
செய்வினை பாதிப்புகளை நீக்கும் பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar raja kolam in Tamil. It is also called as Athi varadhar in Tamil or Athi varadhar kovil in Tamil or Athi varadhar vizha in Tamil.