- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎதிரிகளும் தீய சக்திகளும் விலகி ஓட பரிகாரம்

எதிரிகளும் தீய சக்திகளும் விலகி ஓட பரிகாரம்

- Advertisement -

அமாவாசை என்றாலே அது மிகவும் சிறப்புக்குரிய நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் தான் பலரும் தங்களிடம் இருக்கக்கூடிய எதிரிகள், தீய சக்திகள் அனைத்தும் விலக வேண்டும், திருஷ்டிகள் விலக வேண்டும் என்று பலவிதமான பரிகாரங்களை செய்வார்கள். அதிலும் அமாவாசையிலேயே மிகவும் சிறப்பு மிகுந்த அமாவாசையாக திகழக்கூடிய புரட்டாசி அமாவாசை என்பது இன்னும் பல கூடுதல் சிறப்பை தரும் என்று கூறப்படுகிறது. அன்றைய தினத்தில் எந்த முறையில் நாம் பரிகாரம் செய்தால் நம்முடைய எதிரிகள் மற்றும் நம்மிடம் இருக்கக்கூடிய தீய சக்திகள் விலகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எதிரிகளும் தீய சக்திகளும் விலகி ஓட பரிகாரம்

பொதுவாக அமாவாசை தினத்தில் எலுமிச்சம் பழத்தை வைத்து திருஷ்டி சுத்தி உடைப்பதை பார்த்திருப்போம். அதேபோல் தேங்காயில் கற்பூரத்த ஏத்தி சுற்றி உடைப்பதையும் பார்த்திருப்போம். அடுத்ததாக பலரும் செய்யக்கூடிய ஒன்றாக திகழ்வது பூசணிக்காயை சுற்றி உடைப்பது. இப்படி செய்வதன் மூலம் கண் திருஷ்டிகள் அனைத்தும் விலகும் என்று கூறப்படுகிறது. அதே முறையில் தான் இந்த பரிகாரமும் அமையப் போகிறது.

- Advertisement -

புரட்டாசி அமாவாசை அன்று மாலை 6:00 மணிக்கு மேல் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படக்கூடிய ஒன்று ஊமத்தங்காய். இந்த காயை எடுத்து அதற்கு மேல் புறத்தில் சிறிதளவு மட்டும் நீக்கிவிட்டு அதற்குள் குங்குமத்தை போட்டு நிரப்பிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதற்கு மேல் மூன்று கற்பூரத் துண்டுகளை வைக்க வேண்டும். அதற்கு மேல் இரண்டு கிராம்பை வைக்க வேண்டும். இதை ஏற்றி வீட்டிற்குள் இருக்கக் கூடிய ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் காட்ட வேண்டும்.

இப்படி காட்டி முடித்த பிறகு கற்பூரம் அணைந்த பிறகு இந்த ஊமத்தங்காயை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்து மூன்று தெருக்கள் சந்திக்கும் முச்சந்திக்கு செல்ல வேண்டும். அங்கு போன பிறகு கிழக்கு பார்த்தவாறு நின்று கொண்டு இந்த ஊமத்தங்காயை உங்களுடைய தலையை வலப்புறமாக மூன்று முறையும் இடப்புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு போட்டுவிட்டு வந்துவிட வேண்டும். முச்சந்திக்கு சென்ற பிறகுதான் தலையை சுற்ற வேண்டும். வீட்டில் இருக்கும் போது தலையை சுற்றக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக கை கால் முகங்களை சுத்தமாக கழுவி விட்டு வீட்டிற்குள் வரவேண்டும். இந்த முறையில் ஊமத்தங்காயை வைத்து செய்யக்கூடிய இந்த பரிகாரம் நம்முடைய வாழ்க்கையில் நம்மை பாடாய்படுத்திக் கொண்டிருக்கும் எதிரிகளின் தொல்லைகள் விலக செய்யும். வீட்டிற்குள் இந்த ஊமத்தங்காய் தீபத்தை காட்டுவதன் மூலம் வீட்டிற்குள் இருக்கக் கூடிய எதிர்மறை சக்திகளும் தீய சக்திகளும் விலகி ஓடிவிடும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: குடும்பப் பிரச்சனை சரியாக 3 விளக்கு பரிகாரம்

இந்த முறையில் புரட்டாசி அமாவாசை அன்று நாம் செய்யக்கூடிய இந்த பரிகாரம் நமக்கு இருக்கக்கூடிய எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபட உதவுவதோடு தீய சக்திகளையும் விரட்டி அடிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்