- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎதிர்மறை ஆற்றலை நீக்கி நன்மையை தரும் வாராகி வழிபாடு

எதிர்மறை ஆற்றலை நீக்கி நன்மையை தரும் வாராகி வழிபாடு

- Advertisement -

வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக பஞ்சமி திதி திகழ்கிறது. அதிலும் வளர்பிறை பஞ்சமியில் வழிபாடு செய்யும் பொழுது அனைத்து விதமான நன்மைகளையும் நம்மால் பெற முடியும் என்றே கூறலாம். அப்படிப்பட்ட வளர்பிறை பஞ்சமி அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. அன்றைய நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாடு நம் இல்லத்தில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை நீக்குவதோடு அனைத்து விதமான நன்மைகளையும் கொண்டு வந்து சேர்க்கும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எதிர்மறை ஆற்றல் நீங்க வாராகி வழிபாடு

அஷ்டலட்சுமிகளின் அருளை பரிபூரணமாக தரக்கூடிய தெய்வங்களுள் ஒருவராக திகழக்கூடியவள் தான் வாராகி அம்மன். படைத்தளபதியாகவும், மண்ணிற்கு சொந்தக்காரியாகவும் திகழக்கூடிய வாராகி அம்மனை யார் ஒருவர் முழு மனதோடு வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருந்து அவர்களுக்கு வரக்கூடிய தீமைகளிலிருந்து அவர்களை காப்பாற்றி நல்வழிக் காட்டுவாள் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வாராகி அம்மனை நினைத்து வளர்பிறை பஞ்சமி நாளில் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை அக்டோபர் மாதம் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலையில் வரக்கூடிய ராகுகாலமான 4:30 மணியிலிருந்து 6 மணிக்குள் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்ய தொடங்குவதற்கு முன்பாக மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து மோதிர விரலில் மஞ்சளை தொட்டு “ஸ்ரீம் வாராஹி” என்று எழுத வேண்டும். எழுதிய இந்த கண்ணாடியை பூஜை அறையில் வைத்து அதற்கு முன்பாக அகல் விளக்கில் நெய் ஊத்தி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். இந்த தீபமானது அந்த கண்ணாடியில் தெரிய வேண்டும்.

இந்த கண்ணாடிக்கு முன்பாக கிழங்கு வகைகளை நெய்வேத்தியமாக வாராகி அம்மனுக்கு வைத்துவிட்டு “ஓம் வம் வாராகியை நமஹ” என்னும் மந்திரத்தை 51 முறையும் வாராகி அம்மனின் மூல மந்திரமான “ஓம் சியாமலாய வித்மஹே ஹரஹஸ்தாய தீமஹி தன்னோ வாராகி பிரசோதியாத்” என்னும் மந்திரத்தை 51 முறையும் கூறி மஞ்சளால் முகம் பார்க்கும் கண்ணாடிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

வழிப்பாட்டை நிறைவு செய்த பிறகு நெய்வேத்தியமாக வைத்த பொருட்களில் சிறிதளவை மட்டும் எடுத்து வடகிழக்கு மூலையில் வீட்டிற்கு வெளியே தூவி விட வேண்டும். அர்ச்சனை செய்த மஞ்சள் தண்ணீரில் கரைத்து வீடு முழுவதும் திணிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட எதிர்மறை ஆற்றலாக இருந்தாலும் அவை நீங்குவதோடு மட்டுமல்லாமல் நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: பணம் சேமிப்பாக உயர தேங்காய் பரிகாரம்

எதிர்மறை ஆற்றல்களை விலக்கி நன்மைகளை தரக்கூடிய வாராகி அம்மனை இந்த முறையில் பஞ்சமி தினத்தில் வழிபாடு செய்து முழு பலனை பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்