- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎதிர்பாராத முன்னேற்றத்தை தரும் சங்கு பூஜை

எதிர்பாராத முன்னேற்றத்தை தரும் சங்கு பூஜை

- Advertisement -

வசந்த காலத்தில் தொடக்கமாக திகழ்வதுதான் மாசி மாதம். பலவிதமான விசேஷங்கள் நிறைந்த தினங்கள் வரும். அப்படி வரக்கூடிய தினங்களில் ஒன்றாக தான் மாசி பௌர்ணமி தினம் திகழ்கிறது. அன்றைய தினத்தில் பலரும் குலதெய்வ வழிபாட்டை செய்வதோடு தங்களுடைய இஷ்ட தெய்வ வழிபாட்டையும், சிவபெருமான், சந்திர பகவான் மற்றும் பெண் தெய்வங்களின் வழிபாட்டையும் மேற்கொள்வார்கள். இதோடு அன்றைய தினத்தில் நாம் கண்டிப்பான முறையில் சங்கு வழிப்பாடும் செய்ய வேண்டும். ஏனென்றால் மகாலட்சுமி சங்காக அவதரித்த தினம் தான் மாசி பௌர்ணமி என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் எந்த முறையில் சங்கு பூஜை செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

முன்னேற்றத்தை தரும் சங்கு பூஜை

மகாலட்சுமி பலவிதமான அவதாரங்களை எடுத்துள்ளார். அப்படி அவர் எடுத்த அவதாரங்களில் ஒன்றாக திகழ்வதுதான் சங்கு அவதாரம். மேலும் இந்த சங்கானது பெருமாளின் கையில் இருக்கக்கூடிய ஒன்றாகவும் திகழ்கிறது. பொதுவாகவே சங்கை நம்முடைய வீட்டில் வைப்பதன் மூலம் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் அன்றைய காலத்தில் சங்கை நிலை வாசலில் பதித்து வைத்தார்கள். இப்படி பதித்து வைப்பதன் மூலம் எதிர்மறை ஆற்றல்கள் எதுவும் உள்ளே வராமல் நேர்மறை ஆற்றல்கள் மட்டுமே வீட்டிற்குள் வரும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த சங்கை வைத்து வழிபாடு செய்யும் முறையை தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை மாலை 6:00 மணியிலிருந்து இரவு 9 மணிக்குள் செய்துவிட வேண்டும். இதற்கு முத்துச்சங்கு கிடைத்தால் மிகவும் சிறப்பு. அப்படி முத்துச்சங்கு கிடைக்காத பட்சத்தில் சாதாரண வலம்புரி சங்கை கூட பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு தாம்பாள தட்டில் வெற்றிலையை வைத்து அந்த வெற்றிலைக்கு மேல் சங்கை வைத்துக் கொள்ளுங்கள். முதலில் சாதாரண தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்து கொள்ளுங்கள். பிறகு பன்னீரை ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு தண்ணீரில் விபூதியை கலந்து அந்த தண்ணீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

இதே போல் சந்தனத்தையும் தண்ணீரில் கரைத்து சந்தன தண்ணீராக அபிஷேகம் செய்ய வேண்டும். அடுத்ததாக குங்குமத்தை தண்ணீரில் கலந்து குங்கும தண்ணீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். கடைசியாக பசும்பால் அபிஷேகம் செய்து கொள்ளுங்கள். பிறகு சாதாரண தண்ணீரை ஊற்றி சுத்தமாக கழுவி ஈரம் இல்லாமல் நல்ல துணியை வைத்து துடைத்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த சங்கிற்கு சந்தனம் குங்குமம் வைத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது சங்கை சுற்றி வட்ட வடிவில் மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். மல்லிகை பூக்களுக்கு அடுத்தவாறு நாணயங்களை வட்டமாக பரப்பி அலங்காரம் செய்து கொள்ளுங்கள். இந்த நாணயங்கள் ஒவ்வொன்றிலும் புனுகை தடவி வைக்க வேண்டும். இப்பொழுது மகாலட்சுமி தாயாரின் இந்த ஒரு மந்திரத்தை 108 முறை கூறி சங்கிற்கு வாசனை மிகுந்த மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். வழிபாடு நிறைவடைந்த பிறகு புனுகு தடவி வைத்திருக்கும் நாணயத்தை கல்லாப்பெட்டியில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

மந்திரம்

“ஓம் ஸ்ரீம் கமலகாரின்யை நமஹ”

இதையும் படிக்கலாமே:செல்வ வளத்தை அதிகரிக்கும் மாசி பௌர்ணமி வழிபாடு

இந்த முறையில் மாசி பௌர்ணமி தினத்தன்று சங்கு பூஜை செய்வதன் மூலம் பணம் நம் கையில் தங்க ஆரம்பிக்கும். எதிர்பாராத முன்னேற்றங்கள் உண்டாகும். மகாலட்சுமி அருளும் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்