உங்களை ‘லக்கி பர்சனா’ மாற்ற இந்த 1 பழம் போதுமே! அது எந்த பழம்? அந்த பழத்தை என்ன செய்ய வேண்டும்? அதிர்ஷ்டம் உங்களைத் தேடி ஓடோடி வர, இத மட்டும் மிஸ் பண்ணாம தெரிஞ்சு வச்சிக்கோங்க!

lemon

எல்லோருக்குமே, தன்னை அதிர்ஷ்டசாலி என்று சொல்லிக்கொள்ள மிகவும் பிடிக்கும். குறிப்பாக, அடுத்தவர்கள் நம்மைப் பார்த்து ‘இவங்க ரொம்ப கொடுத்து வெச்சவங்க! லக்கி பர்சன்!’ அப்படி என்று சொல்லி விட்டாலே, நம்முடைய மனதில் ஒரு சந்தோஷம் வந்து விடும். உங்கள் முகத்தை பார்த்து விட்டு செல்பவர்களுக்கு, காலையில் உங்களுடைய முகத்தில் முழிப்பவர்களுக்கு கூட அதிர்ஷ்டம் ஓடோடி வரும். இப்படி நீங்கள் அதிர்ஷ்டமான வர்களாக மாற என்ன செய்ய வேண்டும்.

sucess

உங்களுக்குள் எதிர்மறை ஆற்றலோ எதிர் மறை சக்தியோ குடியிருக்கக் கூடாது. அதாவது நீங்கள் எப்போதுமே பாசிட்டிவ்வாக இருக்க வேண்டும். போன் சார்ஜ் போட்டு விட்டா மாதிரி, பேட்டரியை எப்போவுமே ஃபுல்லா வச்சுக்கணும். எப்பவுமே துருதுருன்னு வேலை செஞ்சுகிட்டு, எப்பவுமே தொட்ட காரியத்தில் சக்சஸ் ஆயிட்டே இருந்தீங்கன்னா, நீங்க தான் லக்கி பர்சன். முதலில் நம்மை நாமே சுறுசுறுப்பாக்கி கொள்ள, முயற்சிகளை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். சோர்ந்து போகவே கூடாது. இதுதாங்க முதல் டிப்ஸ்.

சோர்வு இல்லாமல் மனிதர்களால் வாழ முடியுமா? கட்டாயம் சோர்வு வரும். உடலில் எதிர்மறை ஆற்றல் குடியேறும். எதிர்மறை எண்ணங்கள் நம்முடைய மனதிலும் வரத்தான் செய்யும். இதுதான் இயற்கை. இந்த எதிர்மறை ஆற்றலை அப்படியே உறிஞ்சி வெளியே கொண்டுவரும் சக்தி ஒரு பழத்திற்கு மட்டும்தான் உள்ளது.

lemon1

நாம் எல்லோரும் அறிந்த ஒரு பழம் தான் இது. கெட்ட சக்திகள் அனைத்தையும் உறிஞ்சி எடுத்து வெளியேற்றும் தன்மை கொண்ட அந்த பழம் தான் ‘எலுமிச்சை பழம்’. உங்களுக்கு உடல் சோர்வு இருக்கின்றது. எந்த ஒரு வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. சுறுசுறுப்பாக இயங்க முடியவில்லை. எப்போதுமே பலவீனமாக ஃபீல் பண்றீங்க! தொட்டதெல்லாம் தோல்வியில் முடிகின்றது. அப்படின்னா, முதல்ல ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கி வெச்சுக்கோங்க.

- Advertisement -

முந்தைய நாள் இரவே கரும்புள்ளிகள் இல்லாத பச்சை நிறம் இல்லாத, அதாவது காயாக இருக்கக்கூடாது. பழுத்த மஞ்சள் நிற எலுமிச்சை பழத்தை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். மறுநாள் காலை 6 மணிக்கு முன்பாகவே இந்த பரிகாரத்தை செய்து விட வேண்டும். அதற்கேற்ற மாதிரி எழுந்து, பல்தேய்த்து முகம் கைகால்களை கழுவிக்கொண்டு, கிழக்கு பார்த்தவாறு சம்மணம் போட்டு அமர்ந்து கொள்ளுங்கள். முதுகு தண்டுவடம் நேராக இருக்கட்டும்.

நீங்கள் வாங்கி வந்த எலுமிச்சம்பழத்தை உள்ளங்கையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் வெளியேற வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு, அந்த எலுமிச்சை பழத்தை உங்களது தொப்புளின் மேல் வைக்க வேண்டும். துணியின் மேல் வைக்கக்கூடாது. துணியை நீக்கி விட்டு தொப்புளின் மேல் படும்படி லேசாக வைத்து உங்கள் கைகளால் பிடித்துக் கொள்ளுங்கள்.

stomac

ஒரு நிமிடம் வரை அப்படியே பிடித்துக்கொண்டு, ஒரு நிமிடம் கழித்து தொப்புளை சுற்றி அந்த எலுமிச்சை பழத்தை மூன்று முறை வட்டமாக சுற்ற வேண்டும். அதாவது உங்களது வயிற்றில் எலுமிச்சை பழம் உராசியபடியே சுற்றவேண்டும். அதன் பின்பு அந்த எலுமிச்சம்பழத்தை ஒரு பேப்பரில் வைத்து மடித்து, கால் படாத இடத்தில் தூக்கிப் போட்டு விடுங்கள். அவ்வளவுதான். (எக்காரணத்தைக் கொண்டும் அந்த எலுமிச்சை பழத்தை வேறு ஒரு பயன்பாட்டிற்காக பயன்படுத்தவே கூடாது.)அதன் பின்பாக குளித்து முடித்து விட்டு சுத்தமாகி பூஜை அறையில் தீபம் ஏற்றி தினசரி வழிபாடு செய்யுங்கள்.

elumichai lemon

இப்படியாக, இந்த பரிகாரத்தை செய்யும் போது, உங்கள் உடம்பில் இருக்கக்கூடிய நெகட்டிவ் எனர்ஜியை தொப்புளின் வழியாக எலுமிச்சைப்பழம் மொத்தமாக ஈர்த்துக்கொள்ளும். அதன்பின்பு உங்களை அறியாமலேயே ஒரு புத்துணர்ச்சி உங்கள் உடலில் ஏற்படும்.

happy

சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள் முன்னேற்றத்துக்கு தடை இருக்காது. அதிர்ஷ்ட காத்து அதன் பின்பு உங்கள் பக்கம் வீசத் தொடங்கிவிடும். இந்த பரிகாரத்தை உங்களுக்கு எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் செய்து கொள்ளலாம். இத்தனை நாட்கள் தான் செய்யவேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. ட்ரை பண்ணி பாருங்க ஒரு நாளில் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கவில்லை என்றால், தொடர்ந்து ஐந்து நாட்கள் இந்த பரிகாரத்தை செய்தால் நல்ல பலனைப் பெறலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
கடுமையான திருஷ்டியை போக்கும் மரம்! அது என்ன மரம்? எப்படி திருஷ்டியை போக்கும் தெரிந்தால் வியந்து போவீர்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.