- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅதிர்ஷ்டம் தரும் வளர்பிறை சஷ்டி தீபம்

அதிர்ஷ்டம் தரும் வளர்பிறை சஷ்டி தீபம்

- Advertisement -

இன்றைய தினம் வளர்பிறை சஷ்டி திதி இருக்கிறது. திதிகளில் 6வது திதியாக வருவது இந்த சஷ்டி திதி. இந்த நாளில் எவர் ஒருவர் முருகனை நினைத்து விரதம் இருந்து வழிபாடு மேற்கொள்கிறீர்களோ, அவர்களுடைய வாழ்க்கையில் வெற்றி கிடைப்பது உறுதி. அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இந்த வளர்பிறை சஷ்டி திதியில், மேலும் என்ன சிறப்பு இருக்கிறது.

இந்த நாளில் செல்வ வளம் உயர, அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீச, செய்ய வேண்டிய வழிபாடு என்ன என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இன்றைய தினம் 3 – 4 – 2025 வியாழக்கிழமையோடு சேர்ந்த இந்த வளர்பிறை சஷ்டி திதி வந்திருப்பதால், இதை குருவார சஷ்டி திதி என்று சொல்லுகின்றோம்.

- Advertisement -

குரு பகவானுக்கு உகந்த இந்த நாளில், முருகனை வழிபாடு செய்தால் சிறப்பான பலனை பெறலாம். இந்த நாளில் முருகனையே குருவாக நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு அதிர்ஷ்ட காற்று வீசும். இது முதல் விஷயம். இரண்டாவது, வியாழக்கிழமை என்றால் குபேரருக்கு உரிய தினம். அந்த குபேரன் நினைத்தால் தான் நமக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கும். ஆக இந்த நாளில் குபேரரையும் நாம் வழிபாடு செய்யலாம். குரு பகவான், முருகர்,  குபேரர் இந்த மூன்று பேரையும் வசியம் செய்யக்கூடிய ஒரு தீபத்தை இன்று நாம் ஏற்ற வேண்டியது எப்படி.

வெற்றிக்கும் முருகனுக்கும் உரிய பொருள் வெற்றிலை, ஒரு வெற்றிலை எடுத்துக் கொள்ளுங்கள். பச்சை நிற திரி பச்சை என்பது குபேர பகவானுக்கு உரியது. அதையும் எடுத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் அல்லது சந்தனம், இது குரு பகவானுக்கு உரியது, ஒரு கிழங்கு மஞ்சள் கிடைத்தால் எடுத்துக் கொள்ளலாம். குண்டு மஞ்சள், எதுவுமே இல்லை என்றால் மஞ்சள் தூள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதிர்ஷ்டம் தரும் சஷ்டி தீபம்

இன்று மாலை பூஜையறையை சுத்தம் செய்து முருகனுக்கு செவ்வரளி பூக்களால் அலங்காரம் செய்து, முருகனுக்கு உகந்த ஒரு நெய்வேத்தியம் வைத்து ஒரு தாம்பூல தட்டில், ஒரு வெற்றிலையை வையுங்கள். அதன் மேலே மண் அகல் விளக்கு வைத்து, நெய் ஊற்றி, பச்சை நிறத்தில் திரி போட்டு, தீபம் ஏற்றவும். இந்த விளக்குக்கு பக்கத்தில் மஞ்சள் கிழங்கு அல்லது மஞ்சள் தூள் வைத்து குரு பகவானையும் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இந்த விளக்கை ஏற்றி “ஓம் சரவணபவாய நமஹ” என்ற மந்திரத்தை உள்ளம் உருகி ஆறு முறை சொன்னாலும் போதும். உங்களை பிடித்த தரித்திரம் விலகும். உங்களோடு வந்து அதிர்ஷ்டம் ஒட்டிக் கொள்ளும். இப்படிப்பட்ட ஒரு அற்புதமான நாள், அதுவும் வளர்பிறையில் வருவது என்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். இந்த நாளை யாரும் தவற விடாதிங்க.

இதையும் படிக்கலாமே: 12 ராசிகளுக்கு உகந்த முருகன் வழிபாடு

முருகனை மேல் சொன்ன முறையில் வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் உங்களுடைய துன்பங்களுக்கு ஏதாவது ஒரு வகையில், அந்த முருகப்பெருமான் இன்று ஒரு வழியை காட்டிக் கொடுப்பான் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்