நாம் எல்லோரும் அறிந்த, அதிர்ஷ்டத்தை தரக்கூடிய 2 பரிகாரம். உங்கள் வீட்டில் முறைப்படி செய்கிறீர்களா? இல்லையென்றால் எந்த பலனும் இல்லை.

pooja-room

எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்த பரிகாரமாக இருந்தாலும், சில சமயம் அந்த பரிகாரத்தை செய்யும் போது, சில தவறுகளை செய்வது சகஜம் தான். அதற்காக நமக்கு பெரியதாக தண்டனை ஏதும் கிடைக்காது. என்றாலும், பலனும் கிடைக்காது என்பதுதான் உண்மை. அறியாமல் செய்த தவறுக்கு தண்டனையும் இல்லை. பலனும் இல்லை. பரிகாரம் வீணாகிவிடுமே! இந்த காரணத்திற்காக தான் குறிப்பிட்ட இந்த இரண்டு பரிகாரங்களை நம் வீட்டில் சரியாகத்தான் செய்கிறோமா என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த பதிவு.

mirro

முதலாவதாக, சமீபகாலமாக எல்லோரது வீட்டு பூஜை அறையிலும் கண்ணாடி வைக்க வேண்டும் என்பது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். இந்த வழக்கமானது பழங்காலம் தொட்டே இருந்து வந்ததுதான். சமீப காலமாக மறைந்து, மீண்டும் எல்லோருக்கும் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்திருக்கும் கண்ணாடியை நீங்கள் சரியான முறையில் தான் வைத்திருக்கிறீர்களா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பூஜை அறையில் வைத்திருக்கும் கண்ணாடி உங்களுக்கு இதுவரை யோகத்தை தந்திருக்கின்றதா? தரவில்லை என்றால் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்திருக்கும் கண்ணாடியானது கிழக்கு திசை நோக்கியோ அல்லது வடக்கு திசை நோக்கியோத் தான் இருக்க வேண்டும். சுவாமி படம் எந்த திசையில் வைத்துள்ளீர்களோ அதே திசையில் தான் முகம் பார்க்கும் கண்ணாடியும் வைக்க வேண்டும். கட்டாயம் தெற்கு திசையிலும் மேற்கு திசையிலும் வைக்கக்கூடாது.

mirror

அதாவது சுலபமாகச் சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் இறைவனை பார்த்து வழிபடும்போது, உங்களின் முக பிம்பம் அந்த கண்ணாடியில் பிரதிபலிக்க வேண்டும். உங்களது முகம் அந்த கண்ணாடியில் தெரிய வேண்டும். அவ்வளவுதான். இப்படி தொடர்ந்து வழிபாடு செய்து பாருங்கள். கட்டாயம் யோகம் உங்கள் வீடு தேடி வரும்.

- Advertisement -

உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் கண்ணாடியை சுத்தம் செய்து மஞ்சள் குங்கும பொட்டு வைக்கவேண்டும். உங்கள் பூஜை அறையில் வைத்திருக்கும் கண்ணாடியின் சட்டம், அதாவது ஃப்ரேம், பிளாஸ்டிகிலோ, இரும்பிலோ, இருக்கக்கூடாது. மரத்தினால் செய்யப்பட்டதாக தான் இருக்கவேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

vasal-kathavu

அடுத்ததாக வெள்ளிக்கிழமை என்றால் நம் எல்லோரது வீட்டு நில வாசப்படியையும் நன்றாகத் துடைத்து மஞ்சள் குங்கும பொட்டு வைப்பதை வழக்கமாக வைத்திருப்போம். நம்மில் பலபேர் இந்த பழக்கத்தை மறந்தும், பலபேர் இன்றளவும் நில வாசற்படிக்கு பொட்டு வைத்து தான் வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. முடிந்தவரை சூரியன் உதிப்பதற்கு முன்பாகவே நில வாசற்படிக்கு பொட்டை வைத்துவிடுங்கள். முதலில் நில வாசப்படியை வெறும் துணியால் துடைத்துவிட்டு, அதன்பின்பு மஞ்சள் கலந்த நீரால் துடைத்து கொள்ளுங்கள்.

நில வாசற்படிக்கு வைக்கும் மஞ்சள்தூளில் சிறிதளவு பச்சைக் கற்பூரத்தை கலந்து, குழைத்து நில வாசப்படியில் பூசுங்கள். அதன்பின்பு குங்குமம் வையுங்கள். இந்த முறை மிகவும் சிறப்பான முறையாக சொல்லப்பட்டுள்ளது. நம் வீட்டு மகாலட்சுமி நம் நில வாசப்படியில் தான் வசிக்கிறாள் என்பதும், நல்ல தேவதைகள் வாசல்படியில் தான் வசிக்கிறார்கள், என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

turmeric

இந்த பச்சைக் கற்பூரத்தின் மனமானது தேவதைகளின் மனதை மகிழ்விக்கும். நம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். கடன் சுமை குறையும். வீடு சுபிட்சமாக இருக்கும். இந்த முறையை 11 வாரம் பின்பற்றி பார்த்தாலே நல்ல பலன் கிடைப்பதை நம்மால் உணர முடியும்.

சில பேர், வீட்டில் சில பழக்கவழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடித்து தான் வருவார்கள். ஆனாலும் பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும். அதற்கு காரணம், நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகள்தான். இதனால் பெரிய அளவில் பாதிப்பு வரவில்லை என்றாலும், நமக்கு வரக்கூடிய அதிர்ஷ்டம் தடைபடுகிறதே! அதனைத் திருத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

இதையும் படிக்கலாமே
குறிப்பிட்ட இந்த நேரத்தில், உங்கள் வீட்டில் பல்லி சத்தம் போடுகிறதா? நிச்சயம் உங்களுக்கு அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Athirstam vara Tamil. Athirstam. Athirstam in Tamil. Athirstam peruga Tamil. Athirstam Tamil.