இந்த அறிகுறிகள் உங்கள் வீட்டில் இருந்தால் திடீர் அதிர்ஷ்டம் வரப் போகிறது என்று அர்த்தம் தெரியுமா?

ஜோதிடத்தில் திடீர் அதிர்ஷ்டம், திடீர் யோகம் எல்லாம் ஒரு சிலருக்கு தான் அமையும். வருகின்ற வாய்ப்பை கைநழுவி போவதற்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். அதிர்ஷ்டத்தை நம்பி கொண்டிருக்க முடியாது என்றாலும் அதிர்ஷ்டம் வந்தால் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கவும் முடியாது அல்லவா? ஒரு சில அறிகுறிகளை வைத்தே நமக்கு அதிர்ஷ்டம் வரப் போகிறது என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

kuberan

அந்த வகையில் இந்த சில அறிகுறிகள் உங்கள் வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம் வரப் போகிறது என்று அர்த்தமாம்! அப்படியான அறிகுறிகள் என்ன? எதை வைத்து அதிர்ஷ்டம் வரப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்? என்பதை அறிய தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

ஒருவருடைய வீட்டில் சில உயிரினங்கள் வந்து போவது அதிர்ஷ்டத்தையும், யோகத்தையும் ஏற்படுத்தும் என்பார்கள். அதே போல சில ஜந்துக்கள் வருவது துரதிர்ஷ்டத்தை கூட ஏற்படுத்தும். உதாரணத்திற்கு ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பார்கள். கருப்பு நிற வண்டுகள் வீட்டிற்குள் வருவது மிகவும் நல்லது என்கிறது சகுன சாஸ்திரம். பொதுவாக இவ்வகையான வண்டுகள் வெளிப்புறத்தில் அதிகமாக இருக்கும். ஆனால் வீட்டிற்குள் வருவது என்பது எப்போதாவது, யாருக்காவது நிகழும் ஒரு விஷயம் தான். இப்படி நடக்கும் பொழுது உங்களுக்கு அடுத்த சில நாட்களில் அதிர்ஷ்டம் வரப் போகிறது என்று அர்த்தம்.

vandu

‘என்னைப்பார் யோகம் வரும்’ என்று கழுதை படத்தை போட்டு எழுதி வைத்திருப்பார்கள். இதுவும் சகுன சாஸ்திரம் தான். காலையில் எழுந்ததும் கழுதையின் முகத்தில் முழிப்பது அந்த நாளை இனிமையாக்கி தரும் என்பது நம்பிக்கை. கழுதையின் குரலை நீங்கள் கேட்பது போல உங்களுக்கு எப்போதாவது நடக்கும் பொழுது அடுத்த கொஞ்ச நாட்களில் உங்களுக்கு நல்ல ஒரு அதிர்ஷ்டம் வரும். பொன், பொருள் திடீரென அதிகமாக சேரும் என்பது சகுன சாஸ்திரம் கூறும் விஷயமாகும்.

- Advertisement -

சிறிய வண்டு போல இருக்கும் குளவி வீட்டிற்குள் வருவதும், கூடுகட்டுவதும் நல்லது தான் என்கிறது சகுணம். சிகப்பு நிற குளவி வீட்டில் கூடு கட்டினால் அதிர்ஷ்டம் வருமாம். குளவி பொதுவாக மனிதனை கொட்டினால் விஷமாகும் என்று கூறுவார்கள். மிகுந்த வலியை ஏற்படுத்தும் இதன் கொடுக்கு எப்படி அதிர்ஷ்டத்தை கொடுக்கும்? என்று ஆச்சரியமாக தான் இருக்கும்.

donkey milk

சிகப்பு நிற குளவி உங்கள் வீட்டைச் சுற்றி கூடுகட்டி வைத்திருந்தால் அதன் மூலம் அடுத்த சில மாதங்களில் நீங்கள் நினைக்கும் மிகப் பெரிய விஷயங்கள் நடைபெறும். உதாரணத்திற்கு ஒரு மிகப் பெரிய வீடு வாங்க வேண்டும் என்ற கனவு உங்களுக்கு இருந்தால் அது நிறைவேறும் என்கிறது சகுன சாஸ்திரம். குறிப்பாக சிகப்பு நிற குளவிகள் கட்டும் கூட்டின் உடைய மண்ணை எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு நீங்கள் வெளியில் செல்லும் பொழுது அதிலிருந்து சிறு மண்ணை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டு சென்றால் காரிய சித்தியாகும் என்பது நம்பிக்கை.

kulavi

வீட்டின் பூஜை அறையில், பூஜை படத்தின் பின்புறத்தில் இது போன்ற குளவிகள் கூடு கட்டி வைத்து இருந்தால் நிச்சயமாக அதிர்ஷ்டம் வரும். எனவே இதனை பிரச்சனையாக நினைத்து தகர்த்து விட வேண்டாம். பழைய பொருட்களின் மீது இது போல குளவிகள் கூடு கட்டுவது சகஜம் தான் என்றாலும் எல்லோருக்கும் இது நிகழ்வதில்லை என்பது நிதர்சனமான உண்மை. கிளிகள், புறாக்கள், அணில் போன்ற உயிரினங்கள் தெரியாமல் வீட்டிற்குள் வந்தால் அதுவும் அதிர்ஷ்டம் தான். காகம் வீட்டிற்குள் வருவது துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். இது போல இன்னும் சில உயிரினங்கள் வீட்டிற்குள் வருவதை வைத்து பலன்களும் சொல்லப்படுவது உண்டு.