நன்றாக இருந்த வாழ்க்கையில், திடீரென்று கஷ்டம் வர காரணம் அதீத கண் திருஷ்டி தான். சுறுசுறுப்பாக இருந்தவன் சோர்வடைவதற்கும் காரணம் கண் திருஷ்டி தான். மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிவதற்கு காரணமும் கண் திருஷ்டி தான். அதீத மருத்துவ செலவு, நோய்வாய்ப்படுதலுக்கு காரணமும் அதீத கண் திருஷ்டி தான். இரவு தூக்கம் வரவில்லையா. அதற்கு காரணம் கண் திருஷ்டி தான்.
திடீரென்று ஏதோ ஒரு கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி நன்றாக இருந்த வாழ்க்கை தடம் புரண்டு போவதற்கு காரணமும் கண் திருஷ்டி தான். ரொம்பவும் அன்னியூன்யமாக இருந்த கணவன் மனைவிக்குள் சண்டை, பிளவு இதுபோல பிரச்சனைகள் வரும். ஒற்றுமையோடு இருந்த சொந்த பந்தங்களுக்குள் சொத்து பிரச்சனை வந்து பிளவு உண்டாகும்.
இது எல்லாமே ஒரு வகையான கண்திருஷ்டி தான். சில பேருக்கு கெட்ட கனவு வரும். இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகி, சொர்க்கமான வாழ்க்கையை, நரகமான வாழ்க்கைக்குள் தள்ளும் அளவுக்கு கூட இந்த கண் திருஷ்டி வேலை செய்யும். இப்படிப்பட்ட அறிகுறிகள் நமக்கு தென்பட்டால் இதிலிருந்து வெளிப்படுவது எப்படி. இதற்கு ஆன்மீக ரீதியாக நிறைய பரிகாரங்கள் இருக்கிறது.
யோகா மேற்கொள்வது, ரெய்கி போன்ற விஷயங்களை கற்றுக் கொள்வது, கோவிலில் அமர்ந்து தியானம் செய்வது இது போன்ற விஷயங்கள் எல்லாம் நெகட்டிவ் எனர்ஜியிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள உதவும். நம்முடைய ஆராவை அடிக்கடி சுத்தம் செய்ய மேல் சொன்ன இதுபோல விஷயங்களை நாம் பின்பற்றலாம். இதெல்லாம் எங்களுக்கு தெரியாது இதற்கெல்லாம் நேரம் இல்லை என்பவர்களுக்கும் ஒரு எளிமையான பரிகாரம் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் இதோ உங்களுக்காக.
அதீத கண் திருஷ்டியை நீக்கும் பரிகாரம்
இரவு தூங்க செல்லும் போது ஒரு வெள்ளை காகிதத்தில், ஒரு பச்சை கற்பூரம், நான்கு கிராம்பு வைத்து மடித்துக் கொள்ளுங்கள். அந்த பொட்டலத்தை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கி விடுங்கள். குலதெய்வத்தை நினைத்து, என்னை பிடித்த எதிர்மறை ஆற்றல் எல்லாம் விலகி விட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளவும். பிறகு தூங்கவும்.
மறுநாள் காலை எழுந்து முதல் வேலையாக தலையணைக்கு இருக்கும் அந்த பொட்டலத்தை எடுத்து அப்படியே உங்களுடைய தலையை வலது பக்கம் மூன்று முறை, இடது பக்கம் மூன்று முறை, ஏற்ற இறக்கமாக மூன்று முறை சுற்றி ஒரு மண் அகல் விளக்கில் ஒரு சூடம் வைத்து நெருப்பு மூட்டி, அதில் இந்த பொருட்களை பேப்பரோடு போட்டு எரித்துவிட்டால் போதும். உங்களை பிடித்த நெகட்டிவ் எனர்ஜி முழுமையாக நீங்கிவிடும்.
இந்த பரிகாரத்தை இந்த கிழமையில் இப்போதுதான் செய்ய வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. எப்போது உங்களுக்கு எதிர்மறை ஆற்றலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்று தோன்றுகிறதோ, எப்போது கண் திருஷ்டியால் பின் விளைவுகள் அதிகரிக்கிறது, அப்போது உடனடியாக இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். ஏதோ ஒரு விடுதலை கிடைத்தது போல உணர்வு உடனடியாக தோன்றும்.
இதையும் படிக்கலாமே: செல்வ வளம் பெருக விநாயகர் வழிபாடு
உங்களை பிடித்த கெட்டது எல்லாம் உடம்பிலிருந்து விலகியதை உணர்வுபூர்வமாக உணருவீர்கள். மிக மிக எளிமையான பரிகாரம் இது. குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை சொல்லிவிட்டு இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.