முன் ஜென்மத்தில் பாவம் செய்தது தான் உங்கள் கஷ்டத்திற்கு காரணமா? பரிகாரம் என்ன?

karma
- Advertisement -

போன ஜென்மத்தில் நான் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லையே? அதற்காகத்தான் நான் இப்போது இவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் என்று புலம்பாத நபர்களே கிடையாது. ஏதாவது ஒரு இடத்தில் நிச்சயம் இது போல ஒரு வார்த்தையை நாம் கூறி இருப்போம். நம்முடைய முன் ஜென்ம பாவ வினை தான் இந்த ஜென்மத்தில் தொடர்கிறது என்கிற நம்பிக்கை நம்மில் பலருக்கும் இருந்து வருகிறது. அப்படிபட்ட முன்ஜென்ம பாவ வினை என்னவெல்லாம் செய்யும்? அதிலிருந்து நம்மை தப்புவிக்க என்ன பரிகாரம் செய்யலாம்? என்பதை பற்றி பதிவில் காணலாம்.

karma

தவறு செய்யாத மனிதர்களே கிடையாது. எல்லோரும் ஏதோ ஒரு தவறை செய்து கொண்டே தான் இருப்போம். அதற்கான தண்டனைகள் மறு ஜென்மத்திலும் தொடரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதற்காகத்தான் மறுபடியும் பிறந்து கொண்டிருக்கிறோம். அந்த பாவ வினைகளால் நிகழ்காலத்தில் நமக்கு எண்ணற்ற கெடுபலன்கள் உண்டாகும். காரியத்தடை உண்டாகலாம். எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் தோல்விகளை தழுவ நேரிடும். வேலையில் பிரச்சனைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் திடீரென சிக்கல்கள் உண்டாவது, வேலை பறிபோவது, தொழில் தொடங்கலாம் என்றால் அதிலும் இடைஞ்சல், பிரச்சனைகள் ஏற்படுவது என்று தொடர்ந்து ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். கடன் தொல்லை இருக்கும். என்னதான் ஓடி உழைத்து சம்பாதித்தாலும் பணம் கையில் தங்காது. வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகி கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதற்கெல்லாம் காரணம் முன்ஜென்ம பாவ வினையாக இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் அதனை எப்படி நிவர்த்தி செய்வது? என்ன பரிகாரம் செய்யலாம்? எப்படி வெற்றி பெறலாம் என்பவற்றை காணலாம்.

- Advertisement -

குலதெய்வ வழிபாடு:
குலதெய்வ வழிபாட்டை முறையாக மேற்கொள்ள வேண்டும். நம்மில் பலருக்கு குலதெய்வம் என்ன என்று தெரியாமல் இருந்து கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும் பட்சத்தில் நம்முடைய குறைகளை யார் வந்து தீர்த்து வைப்பார்கள்? நம்முடைய குலதெய்வம் என்றும் நம்முடன் இருந்து கர்ம வினையிலிருந்து நம்மை பாதுகாக்கும். எனவே குலதெய்வத்தை கண்டுபிடித்து குலதெய்வ பரிகாரத்தை செய்து அவர்களின் அருளை முதலில் பெற்றுக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் கர்மவினை குறையும்.

Ayyanar

முன்னோர் வழிபாடு:
முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்து வருகிறோமா? என்று கேட்டால், இல்லை என்று தான் கூறுவோம். நம்மால் முடிந்த அளவிற்கு நம்முடைய முன்னோர்களுக்கு அமாவாசை அன்று கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும். இல்லையெனில் அதற்குரிய பிரத்தியேகமான முக்கிய நாட்களிலாவது எள் தண்ணீர் இறைத்து முன்னோர் ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நம்முடைய கர்மவினை குறையும்.

- Advertisement -

பசுவிற்கு வெல்லம், வாழைப்பழம், அகத்திக்கீரை இவற்றை தொடர்ந்து 21 நாட்கள் கொடுக்க வேண்டும். தினமும் காகத்திற்கு மதிய உணவில் சிறிது வைக்க வேண்டும். இவையும் கர்ம வினையை குறைக்க கூடிய பரிகரங்களில் ஒன்றாகும்.

tharpanam

பரிகாரம்:
இந்த பரிகாரத்தை முறையாக மேற்கொள்வதன் மூலம் கர்மவினையிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். அமாவாசை தினத்தன்று தான் இதை செய்ய வேண்டும். அம்மாவாசை அன்று முன்னோர்களுக்கு திதி கொடுத்து விட்டு ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று இஷ்ட தெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு முன்ஜென்ம பாவ வினையிலிருந்து காக்க வேண்டி பிரார்தித்தனை செய்து கொள்ளுங்கள். பின்னர் வீட்டிற்கு வந்து பூஜை அறையில் உட்கார வேண்டும். இப்போது குலதெய்வத்தை மனதார நினைத்து கொண்டு என்னுடைய கர்மவினை பாவங்களிலிருந்து என்னை காத்தருள்வாயாக என்று வேண்டிக்கொண்டு ஒன்பது அரச மர இலைகளை மூன்று மூன்றாக, மூன்று அடுக்காக விரித்துக் கொள்ளுங்கள். அதன்மீது கல் உப்பை பரப்பி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் உதிரி பூக்களை இலைகளை சுற்றி போட்டு கொள்ளுங்கள். அந்த உப்பின் மேல் அகல்விளக்கு வைத்து நல்லெண்ணெய் ஊற்றி வாருங்கள். ஒவ்வொரு இலையிலும் இதே போல் செய்து 9 அகல் விளக்குகள் ஏற்றி வழிபடுங்கள். இதனை 9 அம்மாவாசை அன்று செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம்முடைய பாவ வினைகளிலிருந்து நாம் மோட்சம் பெறலாம்.

- Advertisement -

arasa-ilai-agal

நாம் வழக்கமாக கோவிலுக்கு செல்லும் பொழுது அங்கிருக்கும் சண்டிகேஸ்வரரை கட்டாயம் வணங்க வேண்டும். அவர் முன் என்னுடைய முன்ஜென்ம பாவங்கள் எல்லாம் தீர்ந்து நான் மோட்சம் பெறவேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு 20 பேருக்கு அன்னதானம் செய்யுங்கள். நாம் எதைப்பற்றி வேண்டுகிறோமோ? இல்லையோ? நம்முடைய பாவங்கள் நீங்க வேண்டும் என்று கட்டாயம் வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு வேண்டுவாதனால் கர்மவினை நீங்கி வாழ்வில் நிம்மதி அடையலாம். இந்த ஜென்மத்தில் நல்லதையே நினைத்து நல்லதையே செய்து நற்பிறவி அல்லது பிறவா நிலை பெறலாம்.

இதையும் படிக்கலாமே
பரிகாரங்கள் முழு பலனை கொடுக்கவில்லையா? 100% பலனைப் பெற பரிகாரத்தை இப்படி செய்யுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Karmavinai theera in Tamil. Karmavinai theera parikaram in Tamil. Karmavinai nenga vazhigal in Tamil. Karmavinai pariharam in Tamil.

- Advertisement -