பரிகாரங்கள் முழு பலனை கொடுக்கவில்லையா? 100% பலனைப் பெற பரிகாரத்தை இப்படி செய்யுங்கள்.

gopuram-homa

நமக்கு ஏற்படும் கஷ்டங்களில் இருந்து விடுபடுவதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் ஜாதகம் பார்த்து பரிகாரத்தை செய்வோம். சிலருக்கு பரிகாரம் செய்வதற்கு முன்பு இருந்த நிம்மதி கூட, பரிகாரம் செய்ததற்கு பின்பு இருக்காது. ஏனென்றால் இவ்வளவு பரிகாரம் செய்து கூட நமக்கு விடிவுகாலம் பிறக்கவில்லையே என்ற எண்ணம் அவர்களை வாட்டி வதைக்கும். இப்படி பட்ட எண்ணத்தை கொண்டவர்களா நீங்கள்! உங்களுக்கான பதிவு தான் இது.

நாம் கோவிலுக்கு எதற்காக செல்கின்றோம்? கோவிலுக்குச் சென்றால் நல்லது நடக்கும். மன அமைதி கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். அந்த இறைவனின் ஆசி கிடைக்கும். இந்த நம்பிக்கை எல்லாம் வைத்துக் கொண்டு தான் நம் கோவிலுக்கு செல்கின்றோம். ஆனால் அதையெல்லாம் அந்த கடவுள் நம் கைகளில் கொடுக்கின்றாரா? என்று கேட்டால் இல்லை. அந்தக் கடவுள் நமக்கு நன்மையைத் தான் தருவார் என்ற அந்த ஒரு நம்பிக்கை நம் மனதில் உள்ளதல்லவா?

கோவிலுக்கு சென்றால் நன்மை நடக்கும் என்பதை எப்படி நம்புகிறீர்களோ, (அந்த இறைவன் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை) அதே நம்பிக்கையை பரிகாரம் செய்யும் போதும் நீங்கள் வைக்க வேண்டும்.  முழு நம்பிக்கையை பரிகாரம் செய்யும்போது நீங்கள் வைக்கிறீர்களா? என்று கேட்டால் அதற்கு பதில், ‘இல்லை’ என்று தான் வரும். இந்தப் பரிகாரம் செய்தால் நமக்கு நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் எவரொருவர் பரிகாரத்தை முழுமையாக செய்து முடிக்கின்றாரோ, அவருக்கு பலனும் முழுமையாக கிடைக்கும்.

உங்களின் கஷ்டத்திற்கான தீர்வு பரிகாரம் மட்டுமல்ல. பரிகாரத்துடன் சேர்ந்த நம்பிக்கையும் தான். (நம்பிக்கைதான் பலன் தருகிறது என்றால், பரிகாரம் தேவை இல்லையே! நம்பிக்கை மட்டும் போதாதா என்று கேள்வி எழுப்பாதீர்கள்.) நம் ஜாதக கட்டத்தில் நேரம் காலம் என்று ஒன்று இருக்கிறது. கட்டத்தில் நமக்கு கெட்ட காலம் வருகிறது என்றால், அந்த கெட்டதை முழுமையாக நம்மால் தடுத்து நிறுத்த நாம் ஒன்றும் கடவுள் இல்லை. கஷ்டம் ஏற்படும். ஆனால் கஷ்டத்தின் மூலம் ஏற்படும் பாதிப்பை குறைக்கும். அந்தக் கஷ்டத்தை எதிர் கொள்ளும் மனோ தைரியத்தை நமக்கு இந்த பரிகாரம் தான் கொடுக்கும்.

- Advertisement -

இதற்கு உதாரணமாக ஒன்று. நமக்கு முதுகிலும், இடுப்பிலும் அல்லது கால்களில் சுளுக்கு விழுந்துவிட்டால் அந்த காலங்களில் எல்லாம் சிலர் சுளுக்கு மந்திரம் போட்டு சுளுக்கை நீக்கிவிடுவார்கள். நீங்கள் என்ன மந்திரம் போட்டீர்கள் என்று கேட்டால் அதை வெளியில் சொல்ல மாட்டார்கள். மந்திரத்தை வெளியில் சொன்னால் பலிக்காது என்பார்கள். ஆனால் நமக்கு ஏற்பட்ட சுளுக்கானது நீங்கி இருக்கும். உண்மையில் சுளுக்கு எடுப்பதற்கான மந்திரம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. சுளுக்கை எடுப்பவர்கள் நம்பிக்கையோடு சுளுக்கு நீங்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டு ஒரு செயல்பாட்டை செய்வார்கள். அந்த நம்பிக்கைதான் நமது சுளுக்கை போக்குகிறது. நம் மனதிற்குள் ஏற்படும் ஒரு நம்பிக்கை. மந்திரம் போட்டாகிவிட்டது சுளுக்கு நீங்கிவிடும் அந்த நம்பிக்கையே நம்மை குணப்படுத்துகிறது.

parigaaram

நீங்கள் முழுமனதுடனும், முழு நம்பிக்கையுடனும் செய்யப்படும் பரிகாரமானது என்றும் தோல்வியில் போய் முடியாது என்பதை நீங்கள் உணர வேண்டும். அப்போதுதான் உங்களின் பரிகாரத்திற்கு பலன் முழுமையாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே
கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு

English Overview:
Here we have Parikara palangal in Tamil. Parikara palan kidaikka in Tamil. Prikaram palikka in Tamil. Parikaram seyalpada in Tamil.