- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆகஸ்ட் மாதம் கூற வேண்டிய மந்திரம்

ஆகஸ்ட் மாதம் கூற வேண்டிய மந்திரம்

- Advertisement -

ஒவ்வொரு மாத பிறப்பிலும் அந்த மாதம் சிறப்பான மாதமாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவோம். அப்படி ஆசைப்படுவதோடு ஒரு சில எளிமையான வழிபாட்டு முறைகளை நாம் செய்யும்பொழுது நாம் ஆசைப்பட்டது அப்படியே நடக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் மிகவும் சிறப்பு மிகுந்த மாதமாக அமைவதற்கு அந்த மாதத்தில் நாம் கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஆகஸ்ட் மாதம் விநாயகர் மந்திரம்

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு விதமான சிறப்புகள் இருக்கும். அந்த சிறப்புகளுக்கு ஏற்றார் போல் அந்த மாதத்தில் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்ற ஒரு வழிமுறையும் இருக்கிறது. அப்படி குறிப்பிட்ட தெய்வத்தை நாம் வழிபாடு செய்வதோடு அந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை அனுதினமும் நாம் கூறும் பொழுது அந்த மாதத்தில் நாம் தொட்ட காரியங்கள் அனைத்துமே வெற்றிகரமாக நடக்கும் என்று கூறலாம். அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் மிகவும் அற்புதமான ஒரு நாள் ஒன்று வருகிறது. அதுதான் விநாயகர் சதுர்த்தி. அதனால் ஆகஸ்ட் மாதம் விநாயகரை வழிபாடு செய்வதற்குரிய மாதமாக திகழ்கிறது என்று கூட கூறலாம்.

- Advertisement -

முழுமுதற் கடவுளாக திகழக்கூடிய விநாயகப் பெருமானை அனுதினமும் வழிபாடு செய்ய வேண்டும் என்றாலும் ஆவணி மாதம் வரக்கூடிய ஆகஸ்ட் மாதத்தில் வழிபாடு செய்ய விநாயகரின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும் என்றே கூறலாம். அப்படி விநாயகரின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும் ஆகஸ்ட் மாதம் சிறப்பான மாதமாக அமைவதற்கும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதோடு அவருக்குரிய மந்திரத்தையும் நாம் கூற வேண்டும். பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விநாயகப் பெருமாளுக்கு அருகம்புல்லை வைத்து இந்த மந்திரத்தை கூற வேண்டும்.

இந்த மந்திரத்தை 27 முறை கூறினால் போதும். இப்படி கூறிய பிறகு எந்த ஒரு செயலை நாம் செய்தாலும் அதில் நமக்கு வெற்றி மட்டுமே கிடைக்கும் கூறலாம். முக்கியமான காரியத்திற்காக செல்பவர்கள் விநாயகருக்கு வைத்த அருகம்புல்லை தங்களுடன் எடுத்துச் செல்லும் பொழுது அந்த காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கி காரிய வெற்றி உண்டாகும். இயன்றவர்கள் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு சென்று சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு செய்ய காரிய தடைகள் அனைத்தும் சிதறு தேங்காய் சிதறுவது போல் சிதறி காரிய வெற்றியை கொடுக்கும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் ஸ்ரீம் கம் கணபதயே நம”

இதையும் படிக்கலாமே: எதிர்மறை ஆற்றல்கள் விலக அஷ்டமி பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை விநாயகப் பெருமானை முழுமனதோடு நினைத்து தினமும் கூறுபவர்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதம் மிகவும் அற்புதமான அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்