இந்திய அணி நிச்சயம் உலகக்கோப்பையை வென்று இவருக்கு பரிசளிக்கும் – சச்சின்

தோனி தலைமையிலான இந்திய அணி 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையை கைப்பற்றியது. அந்த தொடரில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான சச்சின் அபாரமாக விளையாடி தொடரை கைப்பற்ற முக்கிய காரணியாக இருந்தார். அவரது 24 ஆண்டுகளாக கிரிக்கெட் வாழ்வின் முக்கியமான தருணமாக 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் அமைந்தது.

chahal

தற்போது 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் மே மாதம் இங்கிலாந்து நடைபெற இருக்கிறது. அதற்கான இந்திய அணி தற்போது முடிவாகி விட்டது. இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் என கோப்பையை வெல்லும் முழுபலத்துடன் இந்திய அணி திகழ்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்து சச்சின் தனது கருத்தினை அளித்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் கூறியதாவது : இந்திய அணியின் பேட்டிங் அனைத்து காலத்திலும் சிறப்பான ஒன்றாகவே இருந்தது. ஆனால், பவுலிங் யூனிட் சற்று பேட்டிங்கை விட குறைவாக இருக்கும். ஆனால், தற்போது உள்ள இந்திய அணியில் பும்ரா, ஷமி மற்றும் புவனேஷ்வர் குமார் போன்றோர் சிறப்பாக பந்துவீசி எதிரணியை நிலைகுலைய வைக்கின்றனர். மேலும் சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக வீசி வருகின்றனர்.

dhoni

எனவே, நிச்சயம் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும். 2011ஆம் ஆண்டு எவ்வாறு இந்திய அணி வெற்றி பெற்றதோ அதே போன்று 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று அதனை தோனிக்கு பரிசாக அளிக்கும் . கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியில் தலைமை வகித்த அவருக்கு சிறப்பான வழிஅனுப்புதல் உலகக்கோப்பை மூலம் அமையும் என்று சச்சின் கூறினார்.

இதையும் படிக்கலாமே :

இது அவருடைய அணி . அவரை உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேற்ற முடியாது – ரவி சாஸ்திரி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்