வீரர்கள் தான் இப்படி என்றால் ரசிகர்களுமா ? ஆஸி ரசிகர்களை வெளியேற்றிய போலீஸ்

aus fans
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 443 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 292 ரன்கள் முன்னிலை பெற்றது.

rohit-3

இந்நிலையில் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் பாலோ ஆன் கொடுக்காமல் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்தது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 54 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில் நான்காம் நாளான இன்று இந்திய அணி 106 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. இதனால் ஆஆஸ்ட்ரேலிய அணிக்கு 399 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி விளையாடிக்கொண்டிருந்த போது ஆஸ்திரேலிய நாட்டு ரசிகர்கள் இந்திய நாட்டு ரசிகர்களை கேலி செய்யும் விதமாக அவர்களை நோக்கி உங்களது பாஸ்போர்ட் உங்களிடம் உள்ளதா.? அப்படி வைத்திருந்தால் அதனை எங்களிடம் காமியுங்கள் என்று வம்பிழுத்தனர்.

aus fans 1

மேலும் கோலி பீல்டிங் செய்து கொண்டிருந்த போது கோலி ஒரு முட்டாள் என்று அவரை குறிப்பிட்டு விமர்சித்தனர். மேலும் இனவெறி தூண்டும் விதமாகவும் நடந்து கொண்டனர். இதனை கவனித்த மைதான கண்காணிப்பாளர்கள் போரிசரின் உதவியுடன் அந்த ரசிகர்களை மைதானத்தில் இருந்து வெளியேற்றினர். ஆஸி வீரர்கள் சர்ச்சை அடங்கும் முன் அவர்கள் நட்டு ரசிகர்களும் இப்படி நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

“யார்க்கர்” பந்துகளை நான் தொடர்ந்து வீசுவதற்கு கற்று கொடுத்தவர் இவர்தான் -பும்ரா

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -