பிறரிடம் ஏமாறும் தோஷம் நீங்க பரிகாரம்

sandhiran

ஒரு சில உயிரினங்கள் போல மனிதனும் சக மனிதர்களுடன் சேர்ந்து வாழும் தன்மை கொண்டவனாக இருக்கிறான். நாம் ஒருவருக்கொருவர் உதவுவதற்காகவே சேர்ந்து வாழ்கின்ற ஒரு சமூக அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பல மனிதர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போது, தனது சக மனிதர்களை ஏமாற்றி, அதன் மூலம் மிகுந்த ஆதாயம் அடைய தயங்குவதில்லை. மனிதர்கள் பலர் ஏமாறுவதற்கான காரணம் என்ன என்பதையும் அதை தடுப்பதற்கான பரிகாரங்கள் என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

Chandra Baghavan

நமது ஜோதிட சாத்திரங்கள் படி ஒரு நபரின் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு முன்னும், பின்னும் எந்த ஒரு கிரகங்களும் இல்லாமல் இருப்பது “அவ யோகம்” அல்லது “கேமத்துரும யோகம்” என அழைக்கப்படுகிறது. இந்த அவ யோகம் கொண்டவர்கள் சுலபத்தில் பிறரால் ஏமாற்றப்படுகின்றனர். மேலும் சந்திரன் ஒருவரின் ஜாதகத்தில் பலவீனமாக இருந்தாலும் அவரால் ஒரு விடயத்தில் எச்சரிக்கை உணர்வுடன் முடிவெடுக்க முடியாது. பிறரின் ஆசை வார்த்தைகளுக்கு இணங்கி சுலபத்தில் ஏமாறும் நிலை இவர்களுக்கு உண்டாகிறது.

பேராசை என்ற ஒன்று நம்மிடம் இல்லாமல் இருப்பதே நாம் பிறரிடம் ஏமாறாமல் இருக்க சுலபமான வழியாகவும். எனினும் எந்த ஒரு விடயத்திலும் நாம் பிறரிடம் ஏமாறுவதையும், நம்மை பிறர் ஏமாற்றுவதையும் தடுப்பதற்கு தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை வழிபட்டு வர வேண்டும். பௌர்ணமி தினங்களில் முன்னிரவு வேளைகளில் சந்திர பகவானுக்கு கேசரி செய்து நைவேத்தியம் வைத்து அவருக்குரிய மந்திரங்களை துதித்து வழிபட்டால் பிறரிடம் ஏமாறாமல் இருக்கும் புத்திசாலித்தனம் மற்றும் முன்னெச்சரிக்கை உணர்வை தருவார் சந்திர பகவான்.

krishna

மாதந்தோறும் வரும் வளர்பிறை ஏகாதசி தினத்தில் அவல் பொரி போட்ட பாயசம் செய்து, கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று வழிபட்டு, அங்குள்ள பக்தர்களுக்கு அப்பாயசத்தை பிரசாதமாக வழங்கினால் பிறரிடம் ஏமாறும் தோஷம் நீங்கும். கோவிலுக்கு சென்று வழிபடமுடியாதவர்கள் தங்கள் வீட்டிலேயே பால் கலக்காத அவல் பொரி பாயசம் தயாரித்து, ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு படைத்து வழிபட்டு முதலில் ஓரு பசுமாட்டிற்கு கொடுத்து பிறகு வீட்டிலுள்ளவர்களுக்கும், அண்டை வீட்டார்களுக்கும் கொடுப்பதால் பிறரிடம் ஏமாறும் தோஷங்கள் கிருஷ்ண பகவானின் அருளால் நீங்கும். மேற்கூறிய யோக அமைப்பு தங்களின் ஜாதகத்தில் இல்லாதவர்கள் கூட இப்பரிகாரங்களை திட நம்பிக்கையுடன் செய்து வந்தால் பிறரிடம் ஏமாறும் நிலையை தவிர்க்கலாம்.

இதையும் படிக்கலாமே:
பாத சனி பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Ava yoga pariharam in Tamil.