பாத சனி பரிகாரம்

Sani Astrology
- Advertisement -

நமது வாழ்க்கையில் நவகிரகங்கள் மிகுந்த ஆதிக்கம் செலுத்துகிறது என ஜோதிட சாத்திரங்கள் கூறுகின்றன. இந்த நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாகவும், ஒரு ராசியில் அதிக காலம் சஞ்சாரம் செய்யும் கிரகமாகவும் “சனி கிரகம்” இருக்கிறது. சனி கிரக பெயர்ச்சியில் பல வகைகள் இருக்கின்றன. “பாத சனி” என்பது சனி கிரக பெயர்ச்சிகளில் ஒன்று. இந்த பாத சனி என்றால் என்ன என்பதையும், பாத சனி பாதிப்புகளை போக்குவதற்கான பரிகாரங்கள் என்ன என்பதை பற்றியும் இங்கு காணலாம்.

sani bagavaan

ஒரு நபரின் ஜாதகத்தில் சனிக்கிரகம் அவரது ராசிக்கு “2 ஆம்” வீட்டில் பெயர்ச்சியடைந்து, அந்த வீட்டில் இரண்டரை ஆண்டு காலம் சனி சஞ்சாரம் செய்வதை “பாத சனி” என்பார்கள். இந்த பாத சனி காலத்தில் அஷ்டம சனி, ஜென்ம சனி போன்று கடுமையான பலன்கள் ஏற்படாது என்றாலும், அதிகம் பொருள் விரையம், உடல் நல பாதிப்புகள் மற்றும் மனச்சோர்வு அதிகம் ஏற்படும் காலமாக இது இருக்கும்.

- Advertisement -

பாத சனி காலத்தில் பாதகமான பலன்கள் ஏற்படாமல் இருப்பதற்கு சனிக்கிழமை தோறும் கோவிலில் இருக்கும் நவகிரக சந்நிதிக்கு சென்று சனி பகவானுக்கு நெய் தீபங்கள் ஏற்றி, எள் சாதம் செய்து நைவேத்தியமாக வைத்து வழிபட்டு வர வேண்டும். வழிபாடு முடிந்த பிறகு அந்த எள் சாதத்தை யாசகர்களுக்கு உண்ணக்கொடுத்து, சிறிது பணத்தையும் சேர்த்து தானமாக கொடுப்பது பாத சனி தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாகும். தினந்தோறும் காலையில் காகங்கள் மற்றும் இதர பறவைகளுக்கு உணவளித்து பின்பு நீங்கள் சாப்பிட வேண்டும்.

சற்று பண வசதி உள்ளவர்கள் வீட்டில் “நவகிரக ஹோமம்” செய்தால் சனி கிரகத்தின் பாதகமான நிலையால் ஏற்படக்கூடிய கடுமையான பலன்கள் நீங்கி, நன்மைகள் உண்டாகும். சனிக்கிழமைகளில் ஆஞ்சேநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயரை வழிபட்ட பின்பு “ஹனுமன் சாலிசா” படித்து வந்தாலும் சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். சனிக்கிழமைகளில் அடர் நீல நிற ஆடைகள் அணிந்து வந்தால் சனி பகவானின் பரிபூரண ஆசிகள் கிடைக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
பல்லி தோஷம் நிவர்த்தி பரிகாரம்

இது ப்போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Patha sani pariharam in Tamil. We also discussed Patha sani endral enna, Patha sani effects in Tamil or Patha sani remedies in Tamil and Padha sani palangal in Tamil.

- Advertisement -