தலை சீவும் போதும், தலைக்கு குளிக்கும் போதும் நூற்றுக்கணக்கில் முடி கொட்டுகிறதா? டக்குனு ஒரு முறை இந்த ஹேர் பேக்கை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

முடி உதிர்வு பிரச்சனை நிறைய பேருக்கு இருக்கத்தான் செய்கிறது. முடி உதிர்கிறது என்று தலை சீவும் போதும், தலைக்கு குளிக்கும்போதும் கவலைப்பட்டுக் கொண்டே இருக்காதீர்கள். கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால் தலைமுடி உதிரத்தான் செய்யும். தலைமுடி உதிர்வுக்கு உடனடியாக ஒரு தீர்வைத் தேடுவது தான் புத்திசாலித்தனம்.

கணக்கில் அடங்காமல் உங்கள் தலைமுடி உதிர தொடங்கினால் நிச்சயமாக உங்கள் உடல் ஆரோக்கியத்தில் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று தான் அர்த்தம். முதலில் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சத்து நிறைந்த சாப்பாட்டை சாப்பிடுங்கள். அதன் பின்பு இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமாக முடி உதிர்வு குறைய தொடங்கும். முடி அடர்த்தியாக வளரும்.

- Advertisement -

முடி உதிர்வை கட்டுப்படுத்த, முடி பலபலன்னு இருக்க, முடி அடர்த்தியாக வளர, அந்த காலத்திலிருந்தே பயன்படுத்தி வரக்கூடிய ஒரு பூதான் ஆவாரம் பூ. நம்முடைய உடல் சூட்டை தனித்து முடி உதிர்வை உடனடியாக கட்டுப்படுத்தக் கூடிய தன்மை இந்த பூவுக்கு உண்டு. இந்த பூவை எப்படி ஹேர் பேக்காக பயன்படுத்தலாம் தெரிந்து கொள்வோமா.

ஆவாரம் பூவை பறித்து வந்தாலும் சரி அல்லது கடையில் சொல்லி வாங்கிக் கொண்டாலும் சரி. காயாமல் வாடாமல் இருக்கும் ஆவாரம்பூ நமக்குத் தேவை. ஆவாரம் பூவை வாங்கி தண்ணீரில் நன்றாக கழுவி அதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு முறை அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு இதோடு புளித்த தயிர் அல்லது தேங்காய் பால் இந்த இரண்டில் எதை வேண்டுமென்றாலும் சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

உங்களுடைய தலையில் பொடுகு தொல்லை அதிகமாக இருக்கிறது என்றால் தயிர் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும். பொடுகு இல்லை எனும் பட்சத்தில் நீங்கள் தேங்காய்ப்பாலை கூட இந்த ஆவாரம்பூ வோடு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளலாம்.மிக்ஸியில் அரைத்த இந்த விழுதை ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றி கொள்ளுங்கள்.

இந்த விழுதோடு தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் ஆயில், உங்கள் வீட்டில் எந்த எண்ணெய் இருக்கின்றதோ அந்த எண்ணெயிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து கலந்து அதன்பின்பு, இந்த விழுதை அப்படியே உங்களுடைய தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வைத்து அதன் பின்பு எப்போதும் போல தலைக்கு குளித்து விட வேண்டும். (மேலே சொன்ன எண்ணெய்களில் ஏதாவது ஒரு எண்ணெயை பயன்படுத்தினால் போதும்).

- Advertisement -

சிலபேருக்கு ஹேர் பேக் திப்பி திப்பியாக இருந்தால் பிடிக்காது. அதாவது இந்த ஆவாரம்பூவை என்னதான் அரைத்தாலும் லேசாக தலையில் ஆங்காங்கே ஒட்டுவது போல உணர்வு இருக்கும். ஆகவே ஆவாரம் பூவுடன் தேங்காய் பாலை ஊற்றி அரைத்த பின்பு வெள்ளை காட்டன் துணியில் வடிகட்டி திப்பிகளை நீக்கிவிட்டு வெறும் சாரை மட்டும் கூட தலை முழுவதும் அப்ளை செய்து அப்படியே கொண்டை கட்டிக்கொள்ளுங்கள். 20 நிமிடம் இந்த ஹேர்பேக் தலையில் இருந்தால் போதுமானது.

மைல்டான ஷாம்பு சியக்காய் எதைப் போட்டு ஹேர்வாஷ் செய்தாலும் பரவாயில்லை. ஆனால் தலையில் இருக்கும் ஹேர் பேக் சுத்தமாக போகும்படி தலையை அலசி விடுங்கள். ஒரு முறை இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தும்போது நிச்சயம் உங்களுக்கு முடி உதிர்வில் நல்ல வித்தியாசம் தெரியும். உங்களுடைய முடி பளபளப்பாகவும் மாறும்.

வாரத்தில் இரண்டு நாள் இந்த ஹேர் பேக்கை போடுவது முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இருந்தா மட்டும் இந்த ரெமிடியை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -