இந்த இட்லி செய்ய வெறும் 10 நிமிடங்கள் போதுமே! மாவே அரைக்காமல் இந்த இட்லியை எப்படி செய்யறது? ரகசியத்தை நீங்களும் தெரிஞ்சுக்க ஆசைப்பட்றீங்களா?

aval-idli

நம்முடைய உணவு பழக்கவழக்கங்களில் இட்லிக்கு அதிகப்படியான முக்கியத்துவம் உண்டு. ஆனால், இட்லி செய்ய வேண்டும் என்றால், மாவு ஃபிரஷ்ஷாக இருக்க வேண்டும். அதே சமயம் கிரைண்டரில், அல்லது மிக்ஸியில் மாவு அரைக்க வேண்டும். அதன் பின்பு புளிக்க வைக்க வேண்டும். அதன் பின்பு இட்லி செய்ய வேண்டும். எவ்வளவு பெரிய வேலை! இதையெல்லாம் விட்டு விடுங்கள். 10 நிமிடத்தில் சுலபமான முறையில், சுவையான பஞ்சு போல இட்லி எப்படி செய்வது என்ற ஒரு ரகசிய குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுக்கு இந்த இட்லி எப்படி செய்யறதுன்னு தெரிந்துகொள்ள ஆசையா இருந்தா, இந்த குறிப்பு படிச்சு தெரிஞ்சுக்கோங்க!

aval-idli3

உடனடி இட்லி செய்ய தேவையான பொருட்கள்:
அவல் – 1 கப் (100 கிராம்), தயிர் – 2 கப், இட்லி ரவை – 1 1/2 கப், பேக்கிங் சோடா – 1 சிட்டிகை, தண்ணீர் – 2 கப், உப்பு தேவையான அளவு. (உப்புமாவுக்கு பயன்படுத்தும் ரவை அல்ல இது. இட்லி அரிசியை பொடித்து கடைகளில், இட்லி ரவை என்று கிடைக்கின்றது. அதை வாங்கிக் கொள்ளுங்கள்.)

முதலில் ஒரு அகலமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அளந்து வைத்திருக்கும் அவலை கொட்டி, 1 கப் அளவு தயிரை ஊற்றி நன்றாக ஊற வைத்துவிட வேண்டும். 5 நிமிடங்கள் நன்றாக ஊறிய பின்பு, அவலை ஒரு கரண்டியை வைத்து அல்லது உங்கள் கையை வைத்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். மீண்டும் மீதம் இருக்கும் 1 கப் தயிரை ஊற்றி மற்றொரு 5 நிமிடங்கள் இந்த அவல் அப்படியே ஊறவைத்து விடுங்கள்.

aval-idli2

மொத்தமாக இப்போது 10 நிமிடங்கள் தயிருடன் அவல் சேர்ந்து ஊரலாம். இந்த கலவையோடு இட்லி ரவையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மீண்டும் நன்றாக கரைத்து விட வேண்டும். இதையும் ஒரு மூடி போட்டு அப்படியே 10 நிமிடங்கள் ஊற வைத்து விட வேண்டும்.

- Advertisement -

மீண்டும் இதைத் திறந்து பார்த்தால் தண்ணீர் மொத்தத்தையும் உறிஞ்சி வைத்திருக்கும். மீண்டும், தண்ணீரை ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு நன்றாக கட்டிப் பதத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும். (2 கப் அளவு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரைத்துக் கொள்ளலாம். இரண்டு கப்புக்கு மேலாக தண்ணீர் அளவு தேவைப்பட்டாலும் 1/2 கப் சேர்த்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.)

aval-idli4

கட்டி கட்டியாக இருந்தால் கையை கொண்டு நன்றாக கரைத்து விடுங்கள். இட்லி மாவு பதத்திற்கு தண்ணீரை ஊற்றி மாவை தயார் செய்து விட்டு, இறுதியாக தான் உப்பையும், சோடா உப்பையும் சேர்த்து கரைத்து உடனடியாக இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லி வார்க்க வேண்டும்.

aval-idli6

இட்லி பானையில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து ஆவியில் இந்த இட்லியை மிதமான தீயில் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் போதும். சூப்பரான இட்லி தயார். வேகவைத்த இட்லி தட்டில், இட்லி நன்றாக ஆறிய பின்பு ஒரு ஸ்பூன் கொண்டு இட்லியை எடுத்து, உங்களுக்கு பிடித்த சைடிஷ் ரோடு பரிமாறி பாருங்கள்.

aval-idli5

இதன் சுவை மாவு அரைத்து செய்யும் இட்லியை விட சூப்பராக இருக்கும். அதேசமயம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் இட்லியும் கூட! நீங்க வேணும்னா இன்னிக்கு நைட்டே இந்த இட்லியை ட்ரை பண்ணி பார்க்கலாமே!

இதையும் படிக்கலாமே
எண்ணிப் பார்க்கிற அளவுக்கு தான் உங்க தலையில முடி இருக்கா? அப்படின்னா வீட்டில் இருக்கும் இந்த 2 பொருளை வைத்து பொடுகு முழுவதும் ஒரே வாரத்தில் நீக்கி அடர்த்தியான முடியை வளர செய்வோமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.