அடுப்பில்லா அவல் பாயாசம் செய்முறை

fireless aval Payasam
- Advertisement -

இன்றைய கால சூழ்நிலையில் ஒவ்வொரு மனிதரும் தங்களுடைய உடல் நிலையில் அதிக அளவு அக்கறை கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஏனெனில் அந்த அளவுக்கு பெயர் கூட தெரியாத புதுப்புது வியாதிகள் பெருகி கொண்டு இருக்கிறது. இதில் நாம் எதை மாற்ற முடிந்தாலும் முடியா விட்டாலும் நம்முடைய உணவில் நிச்சயம் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

ஆகையால் பெரும்பாலும் நாம் இயற்கை உணவுகளை உண்டால் இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். ஒரு நாளைக்கு நாம் இன்னும் மூன்று வேலை உணவில் ஒரு வேளையாவது இயற்கையான உணவை உண்ணலாம். அதாவது அடுப்பில் வைத்து சமைக்காமல் பச்சை காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது நல்ல பலனை தரும்.

- Advertisement -

அந்த வகையில் அடுப்பே பற்ற வைக்காமல் ஒரு அருமையான அவல் பாயாசம் எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம். இதை தெரிந்து கொள்வதோடு அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் நிச்சயம் நல்ல ஆரோக்கியமான உடல் நலனை பெறலாம்.

பொருட்கள்

சிகப்பு அவல் – 1 கப்,
தேங்காய் பால் – 3 கப்,
நாட்டு சர்க்கரை – 1/4 கப்
முந்திரி – 10
திராட்சை -5
வாழைப்பழம் – 3
ஏலக்காய் பொடி – 2 பின்ச்

- Advertisement -

செய்முறை

இந்த பாயாசம் செய்வதற்கு முன்பு அவலை ஒரு முறை தண்ணீர் ஊற்றி அலசி விடுங்கள். அதன் பிறகு இந்த அவல் முழுவதும் முழங்கும் வரை தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் வரை நன்றாக ஊற விடுங்கள். நன்றாக உரிய அவலில் செய்யும் போது தான் பாயாசம் ருசியாக இருக்கும். அவல் ஊறவில்லை என்றால் பாயாசம் சாப்பிடும் போது அவல் முழுதாக இருந்தால் சாப்பிட நன்றாக இருக்காது.

இப்போது ஒரு முழு தேங்காயை சிறிய துண்டுகளாக மிக்ஸியில் போட்டு அரைத்து மூன்று கப் வரும் அளவு தேங்காய் பால் தயார் செய்து கொள்ளுங்கள். முதலில் அரைக்கும் போது தண்ணீரை கொஞ்சம் அதிகமாக ஊற்றியும் இரண்டாவது முறை அரைக்கும் போது தண்ணீரை கம்மியாக ஊற்றியும் அரைத்தால் தேங்காய்ப் பால் தாராளமாக கிடைக்கும்.

- Advertisement -

இரண்டு மணி நேரம் கழித்து ஊற வைத்த அவலை முதலில் நன்றாக கரண்டி வைத்து மசித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் வாழைப்பழம், நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி அனைத்தையும் சேர்த்து மீண்டும் நன்றாக கை அல்லது கரண்டி வைத்து மசித்து விடுங்கள். இவை எல்லாம் சேர்த்து பஞ்சாமிர்தம் போல குழைந்து வர வேண்டும்.

இப்படி குழைத்த இந்த அவலை நாம் எடுத்து வைத்த தேங்காய் பாலில் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். அதன் பிறகு முந்திரி திராட்சை சேர்த்து மீண்டும் ஒரு முறை கலந்து விடுங்கள். இனிப்பு போதவில்லை என்றால் நாட்டு சர்க்கரையை இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவு தான் சுவையான அவல் பாயாசம் தயார்.

இதையும் படிக்கலாமே: ஆரோக்கியம் நிறைந்த சிறுதானிய அவல் இனிப்பு இட்லி செய்முறை

ஆரோக்கியமான உணவை குழந்தைகளுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் தர வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயம் இந்த அவல் பாயாசம் ரெசிபி செய்து கொடுங்கள். அடுப்பில்லா சமையலின் மூலம் ஆரோக்கியத்தை சுலபமாக பெறலாம்.

- Advertisement -