- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசகல செல்வங்களைத் தரும் ஆவணி அமாவாசை தீப வழிபாடு

சகல செல்வங்களைத் தரும் ஆவணி அமாவாசை தீப வழிபாடு

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் நமக்கு தேவைப்படக்கூடிய அனைத்து விதமான அத்தியாவசிய தேவைகளும் பூர்த்தி அடைய வேண்டும் என்பதற்காகத்தான் பல விதங்களில் முயற்சிகளை நாம் மேற்கொள்கிறோம். இருப்பினும் அந்த முயற்சிகள் பலருக்கும் வெற்றியடையாமல் ஏதாவது ஒரு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இந்த பாதிப்புகள் நீங்க வேண்டும் என்றால் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான சுக போகங்களையும் நாம் பெற வேண்டும். அப்படிப்பட்ட சுக போகங்களை வாரி வழங்கக்கூடிய கிரகமாக சுக்கிர பகவானும் அவருக்குரிய அதி தேவதையான மகாலட்சுமியும் திகழ்கிறார்கள். இவர்கள் இருவரின் அருளையும் பரிபூரணமாக பெறுவதற்கு ஆவணி அமாவாசை நாளில் ஏற்ற வேண்டிய ஒரு தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஆவணி அமாவாசை தீப வழிபாடு

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிர பகவான் நல்ல நிலையில் இருக்கிறார் என்றால் அவர் சுகபோகமான வாழ்க்கையை வாழ்வார் என்று பொருள்படும். அன்றாடம் அவருக்கு தேவையான அனைத்தும் கிடைத்துவிடும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சுக்கிர பகவானின் அதி தேவதையாக திகழக்கூடியவள் தான் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதற்கு உரிய கிழமையாக வெள்ளிக்கிழமை திகழ்வதுபோல அமாவாசையும் உரிய திதியாக திகழ்கிறது. அமாவாசை நாளில் யார் ஒருவர் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறலாம்.

- Advertisement -

அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து அமாவாசை திதியும் வருகிறது. அதனால் இன்றைய நாளில் மறவாமல் நாம் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். பொதுவாகவே மகாலஷ்மி தாயாரை வெள்ளிக்கிழமை வழிபாடு செய்வதற்கு உரிய நேரமாக சுக்கிர ஹோரை திகழ்கிறது. காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் சுக்கிர ஹோரை வரும் என்றாலும் அந்த நேரத்தில் அமாவாசை இருக்காது. மதியம் 1 மணியில் இருந்து 2 மணிக்குள் சுக்கிர ஹோரை வரும் என்றாலும் அந்த நேரத்தில்தான் அமாவாசை திதி தொடங்குகிறது என்பதால் அந்த நேரத்தில் முன்னோர் வழிபாட்டை செய்வதுதான் உகந்தது. அதனால் இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் வரக்கூடிய சுக்கிர ஹோரையில் நாம் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும்.

மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதற்கு பலவிதமான வழிமுறைகள் இருந்தாலும் மிகவும் எளிமையான ஒரு தீப வழிபாட்டு ஒன்று இருக்கிறது. இதற்கு மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக ஒரு சிறிய தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவு வெள்ளை மொச்சையை போட்டு பரப்பிக் கொள்ளுங்கள். அந்த வெள்ளை மொச்சைக்கும் மேல் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட வேண்டும். இயன்றவர்கள் தாமரை தண்டு திரியை கூட போட்டுக் கொள்ளலாம்.

- Advertisement -

பிறகு ஒன்று இரண்டு வெட்டி வேரை எடுத்து சிறு சிறு துண்டுகளாக அந்த எண்ணைக்குள் போட்டு நாம் தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றி வைத்த பிறகு மகாலட்சுமி தாயாரின் அஷ்டகத்தை பாராயணம் செய்ய வேண்டும். இயன்றவர்கள் வாசனை மிகுந்த மலர்களால் மகாலட்சுமி தாயாரை அர்ச்சனை செய்யலாம். இப்படி இரவு நேரத்தில் வரக்கூடிய சுக்கிர ஹோரையில் சுக்கிரனுக்குரிய தானியத்தின் மீது தீபமேற்றி வைத்து மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும் பொழுது மகாலட்சுமி மற்றும் சுக்கிரனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். மறுநாள் தட்டில் வைத்திருந்த மொச்சையை பறவைகளுக்கு தானமாக போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ஆவணி அமாவாசை துர்க்கை அம்மன் வழிபாடு

மகாலட்சுமி மற்றும் சுக்கிர பகவானை அவர்களுக்குரிய சிறப்பான நாளில் எளிமையான முறையில் இப்படி முழுமனதோடு வழிபாடு செய்ய அவர்களின் அருளை பரிபூரணமாக பெறலாம். வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று சிறப்பாக வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்