ஒவ்வொரு மாதமும் சூரிய பகவான் ஒவ்வொரு ராசிக்கு சஞ்சாரம் செய்வார். அப்படி சிம்ம ராசிக்கு சஞ்சாரம் செய்யக்கூடிய மாதமாக திகழ்வதுதான் ஆவணி மாதம். சிம்ம ராசி என்பது சூரிய பகவானுக்குரிய ராசி என்பதால் ஆவணி மாதம் என்பது சூரிய பகவானுக்குரிய மாதமாக திகழப்படுகிறது. அப்படி சூரிய பகவானுக்குரிய மாதமாக திகழக்கூடிய ஆவணி மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை என்பது மிகவும் விசேஷமான ஞாயிற்றுக்கிழமையாக திகழ்கிறது. அன்றைய தினம் விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலம் சூரிய பகவானின் அருளை பரிபூரணமாக பெற முடியும். சூரிய பகவானின் அருளை பெறுபவர்களுக்கு பல நன்மைகள் உண்டாகும். அப்படிப்பட்ட ஆவணி ஞாயிறு வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஆவணி முதல் ஞாயிறு வழிபாடு
ஆவணி ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்குரிய கிழமையாக திகழ்கிறது. சூரிய பகவான் வேலை தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு தரக்கூடியவராக திகழ்கிறார். அதிலும் குறிப்பாக அதிகாரமிக்க இடங்களில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் சூரிய பகவானின் அருள் என்பது கண்டிப்பான முறையில் வேண்டும். அப்படி சூரிய பகவானின் அருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் பொதுவாக ஞாயிற்றுக்கிழமையில் வழிபாடு செய்வார்கள். அதிலும் குறிப்பாக ஆவணி மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை என்பது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் மேற்கொள்ள வேண்டிய வழிப்பாட்டு முறையை பற்றி தெரிந்து கொள்வோம்.
பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் ஒன்று, மூன்று, ஐந்து என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் கிழக்கு பார்த்தவாறு நல்லெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்ற வேண்டும். எந்த நேரத்தில் சூரிய உதயம் ஆகிறது என்பதை தெரிந்து கொண்டு அந்த நேரத்தில் கையில் ஒரு கை பிடி அளவு கோதுமையை எடுத்துக்கொண்டு சூரிய பகவானை பார்த்து உங்களுடைய கோரிக்கை என்னவோ அந்த கோரிக்கையை கூற வேண்டும்.
இவ்வாறு கூறி முடித்த பிறகு கோதுமையை வீட்டில் எடுத்து வந்து அதை சமைத்து சாப்பிட்டு விட வேண்டும். அன்றைய தினம் காலையிலோ அல்லது மாலையிலோ தீபம் ஏற்றி வைத்துவிட்டு “ஓம் ஆதித்ய நமஹ” என்னும் மந்திரத்தை 308 முறை கூறி உங்களுடைய வேண்டுதலை முன்வைக்க சூரிய பகவானின் அருளால் அந்த வேண்டுதல் நிறைவேறும். அன்றைய தினம் காலையில் ஒருவேளை மட்டும் உணவை தவிர்த்து விட்டு விரதம் இருப்பது என்பது சிறப்பு. மேலும் அன்றைய தினம் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே:பூஜை அறையில் வெற்றி பாக்கு வைக்கும் முறை
இப்படி ஆவணி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாம் வழிபாடு செய்யலாம். இயலாதவர்கள் முதல் ஞாயிற்றுக்கிழமையாவது சூரிய பகவானை வழிபாடு செய்ய அவர்களுடைய வேலை தொடர்பான அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.