- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆவணி தேய்பிறை பஞ்சமி வழிபாடு

ஆவணி தேய்பிறை பஞ்சமி வழிபாடு

- Advertisement -

அமாவாசை மற்றும் பௌர்ணமி நிறைவடைந்த பிறகு வரக்கூடிய ஐந்தாவது நாளாக தான் பஞ்சமி திதி வருகிறது. இந்த பஞ்சமி திதி நாளன்று பஞ்சமி நாயகியான வராகி அம்மனை நாம் வழிபாடு செய்ய வேண்டும். பௌர்ணமி முடிந்து வரக்கூடிய பஞ்சமி திதியை தேய்பிறை பஞ்சமி என்று கூறுவோம். இந்த தேய்பிறை பஞ்சமி நாளில் நாம் வராகி அம்மனை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்கள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது. இந்த பஞ்சமி திதிக்கு கூடுதல் சிறப்பும் உள்ளது. இது வியாழக்கிழமையோடு வருவதோடு மட்டுமல்லாமல் மஹாளய பட்ச காலத்தில் வருகிறது. அதனால் நம்முடைய முன்னோர்களின் அருளை பெறுவதற்கும் இந்த பஞ்சமி திதி நமக்கு அருள் புரியும். அப்படிப்பட்ட ஒரு பஞ்சமி திதி வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆவணி தேய்பிறை பஞ்சமி வழிபாடு

உக்கிர தெய்வங்களுள் ஒருவராகவும் மண்ணிற்கு சொந்த காரியுமாக திகழக்கூடிய வாராகி அம்மனை முழுமனதோடு யார் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும், துன்பங்களும், எதிர்மறை ஆற்றல்களும், தீய சக்திகளும், எதிரிகளின் தொல்லையும் விலகி ஓடும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பஞ்சமி திதி வியாழக்கிழமையோடு சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பை தருகிறது. குருபகவானின் சாதகமற்ற பார்வையை சாதகமாக மாற்றி தடைபட்டிருக்க கூடிய சுபகாரியங்களை விரைவில் நடக்க செய்ய இந்த பஞ்சமி வழிபாடு உதவி செய்யும்.

- Advertisement -

மஹாளய பட்ச காலத்தில் வரக்கூடிய பஞ்சமி திதி என்பதால் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சூரிய வழிபாட்டை மேற்கொண்டு விட்டு நம்முடைய முன்னோர்களையும் நினைத்து நாம் வழிபாடு செய்ய வேண்டும். மாலை நேர வழிபாடு தான் வராகி அம்மனுக்கு உரிய நேரம் என்பதால் மாலை நேரத்தில் வாராகி அம்மனுக்கு பஞ்சமுக தீபத்தை ஏற்றி வைத்து கிழங்கு வகைகளை நெய்வேத்தியமாக வைத்து தாங்கள் எப்போதும் பஞ்சமி வழிபாட்டை எப்படி செய்வீர்களோ அதே போல் செய்து வாராஹி அம்மனை வழிபாடு செய்யலாம்.

இப்படி வழிபாடு செய்யும்பொழுது “ஓம் நமோ வாராகி தாயே நமஹ” என்னும் மந்திரத்தை 11 முறை கூறினால் போதும். வாராஹி அம்மனின் அருளை பரிபூரணமாக இந்த மந்திரம் பெற உதவி செய்யும். மேலும் இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்து விட்டு நம்முடைய நியாயமான வேண்டுதலை வாராகி அம்மனிடம் முன்வைக்க அந்த வேண்டுதல் நிறைவேறுவதற்குரிய வழிகளும் உண்டாகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: நாளை 11-7-2025 மகாளய பட்சத்தில் வரும், மகா பரணி தீப வழிபாடு

சுபகாரிய தடைகளை நீக்கி நம் வாழ்க்கையில் மங்களங்கள் அனைத்தையும் பெறச் செய்வதற்கு வியாழக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பஞ்சமி திதியில் வாராகி அம்மனை எளிமையாக முறையில் வழிபாடு செய்யலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்