ஜாதகத்தில் ஆயுள் பலன் பற்றி அறிவது எப்படி தெரியுமா ?

Astrology Sani

ஜோதிடம் என்பது வானியல் மற்றும் விஞ்ஞானம் சார்ந்த ஒரு கலையாகும். நமது நாட்டில் பெரும்பாலானோர்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, ஜோதிடர்களிடம் சென்று ஜாதகம் எழுதும் நடைமுறையை பின்பற்றி வருகின்றனர். அப்படி ஜாதகத்தை எழுதும் போது பெரும்பாலான ஜோதிடர்கள் முதலில் கணிப்பதும், குழந்தைகளின் பெற்றோர்கள் தெரிந்து கொள்ள விரும்புவதும் நீண்ட காலம் வாழும் “ஆயுள் ஸ்தானம்” எவ்வாறு இருக்கிறது என்பதைத்தான். இந்த ஆயுள் ஸ்தானம் மற்றும் ஆயுள் பலன் குறித்த சில விடயங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஒரு நபரின் ஜாதக கட்டத்தில் அவர் பிறந்த லக்னத்திற்கு 8 இடம் ஆயுள் ஸ்தானமாக கருதப்படுகிறது. இந்த “ஆயுள் ஸ்தானம்” ஒரு நபரின் ஆயுளை பற்றி கூறுவதாகும். எட்டாமிடத்தில் கிரகங்கள் எதுவும் இல்லையென்றால் அந்த எட்டாம் இடத்தின் ராசியை கொண்டு ஆயுள் தீர்மானிக்க படுகிறது. எட்டாமிடமாகிய இந்த ஆயுள் ஸ்தானத்தில் ஆயுள்காரகனாகிய “சனிபகவான்” இருக்க பிறந்தவர்கள் நீண்ட ஆயுளை பெறுவார்கள். சனிபகவானின் சொந்த ராசியாகிய மகரம், கும்பம் போன்ற ராசிகளும், சனிபகவான் உச்சமடையும் ராசியான துலாம் ராசியும் ஒரு ஜாதகத்தில் 8 ஆம் இடமாக இருந்து, அந்த 8 ஆம் இடத்தில் சுப கிரகங்களின் பார்வை இருக்கும் பட்சத்தில், அந்த ஜாதகத்திற்குரிய நபர் 100 ஆண்டு காலம் அல்லது 90 ஆண்டுகளையாவது கடந்து வாழ்வார்.

Sani Bagavan Astology

இந்த எட்டாமிடத்தில் எந்த ஒரு கிரகங்கள் இருந்தாலும், அக்கிரகங்களுக்கு அந்த எட்டாம் இடம் பகை ஸ்தானமாகவோ அல்லது நீச்ச ஸ்தானமாகவோ இல்லாமல் இருப்பது அவசியமாகும். உதாரணமாக ஒரு நபரின் ஜாதகத்தில் துலாம் ராசி 8 ஆம் இடமாகி அதில் சூரியன் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த துலாம் ராசி சூரியன் நீச்சம் அடையும் ராசியாகும். மேலும் துலாம் ராசிக்கு அதிபதியான “சுக்கிரன்”, சூரியனுக்கு பகை கிரகம் ஆவார். இப்படியான அமைப்பை கொண்ட ஒரு ஜாதகருக்கு சூரியனின் தசா புக்தி காலங்களில், அந்த ஜாதகருக்கு உயிருக்கு ஆபத்தான கண்டங்கள் ஏற்படும்.

astrology

இந்த எட்டாம் இடம் பாதகமான நிலையில் ஜாதகம் அமைய பெற்ற நபர்கள் அந்த கிரக காலங்களில் பாதகமான பலன்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான கண்டங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு. அந்த எட்டாம் இடத்தில் இருக்கும் கிரகங்களுக்குரிய மந்திரங்களை தினமும் துதித்து வழிபட்டு வருவது நல்லது. மேலும் எட்டாம் இடத்தில் இருக்கும் கிரகங்களுக்குறிய கோவிலுக்கு ஆண்டிற்கு ஒரு முறை சென்று வழிபடுவதும், பரிகார பூஜைகளை செய்வதும் கண்டங்கள் ஏற்படாமல் தடுத்து நீண்ட ஆயுளை அளிக்கும்.

இதையும் படிக்கலாமே:
கிழக்கு பார்த்த வீடு வாஸ்து பலன்

இது போன்ற மேலும் பல ஜோதிடம் சரிந்த குறிப்புகளை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Ayul palan in Tamil. By which one can predict Ayul kalam in Tamil. It is also called as Ayul jathagam palan in Tamil or Ayul rasi palan in Tamil.