கிழக்கு பார்த்த வீடு வாஸ்து பலன்

vasthu

திசைகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, மற்றும் தெற்கு ஆகும். இதில் பகல் பொழுதில் உலகிற்கே ஒளி தரக்கூடிய “சூரியன்” உதிக்கின்ற திசை “கிழக்கு திசை” ஆகும். உலகின் எல்லா கலாச்சாரங்களிலிலும் சூரியன் தெய்வீகத்தன்மை கொண்டதாகவும் உயர்வானதாகவும் போற்றப்படுகிறது. நமது நாட்டின் கோவில்கள் கூட பெரும்பாலும் சூரியன் உதிக்கின்ற கிழக்கு திசையை நோக்கிய வாறு கொண்ட வாயில்களை கொண்டே கட்ட்டப்படுகின்றன. வாஸ்து சாஸ்திரத்தில் இந்த கிழக்கு திசைக்குரிய முக்கியத்துவம் மற்றும் பலன்களை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

vasthu

ஜோதிட ரீதியாக சூரியன் தந்தைக்கு காரகனாகிறார். எனவே கிழக்கு நோக்கி வீட்டின் தலைவாயில் இருக்கும் வீடுகளில் வசிப்பவர்களின் தந்தைக்கு உடல்நலம் நன்றாக இருக்கும். அதோடு அந்த வீட்டில் வசிக்கும் அனைவரின் உடல்நலனும் நன்றாக இருக்கும். மேஷம், சிம்மம் ராசியில் பிறந்தவர்கள் கிழக்கு திசையை நோக்கிய தலை வாசல் கொண்ட வீடுகளில் வசிப்பதால் சிவபெருமானுடைய நல்லருள் முழுமையாக கிட்டும்.

இந்த கிழக்கு திசையை பார்த்தவாறு இருக்கும் வீடுகளில் வசிப்பவர்களின் குழந்தைகள் சூரிய பகவானின் நல்லருளால் கல்வியில் சிறந்த முன்னேற்றம் அடைவார்கள். வேறு திசை நோக்கிய தலைவாயில்களை கொண்ட வீடுகளில் வசிப்பவர்களும் தங்களின் பிள்ளைகள் படிக்கின்ற போது கிழக்கு திசையை பார்த்தவாறு படிக்கும் சூழ்நிலையை அவர்களின் வீடுகளில் ஏற்படுத்தி தருவது, அவர்களை கல்வியில் சிறக்கச் செய்யும்.

suriyan

அரசாங்க ஊழியர்கள், அரசாங்க உயரதிகாரிகள் கிழக்கு திசை வாயில் கொண்ட வீடுகளில் வசிப்பது அவர்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும். ஜாதகத்தில் சூரியன் நீச்சம் அடைந்தவர்கள் கிழக்கு திசை நோக்கிய வீடுகளை தவிர்ப்பது நல்லது. இவர்கள் தெற்கு அல்லது வடக்கு பார்த்த வாயில் கொண்ட வீடுகளில் வசிக்க வேண்டும். நீண்ட காலமாக நோய் பாதிப்பால் அவதியுறுபவர்கள் கிழக்கு வாயில் கொண்ட வீடுகளில் வசித்து வரும் போது தீராத நோய்கள் நீங்க தொடங்கி உடல் நலம் மேம்படும்.

இதையும் படிக்கலாமே:
வாஸ்துப்படி வீட்டில் குழந்தைகள் எங்கு அமர்ந்து படிப்பது சிறந்தது

இது போன்று மேலும் பல வாஸ்து சாஸ்திரம் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதற்கு எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vastu for east facing house in Tamil. It is also called as east facing house vastu tips in Tamil. kilakku partha veedu vastu in Tamil or Kizhakku partha veedu vasthu.