ஸ்ரீ ஐயப்பன் 108 போற்றி

Ayyappan-compressed
- Advertisement -

பிரம்மம் என்பதற்கு படைத்தல் மற்றும் உண்மை என்று பல பொருள்கள் உண்டு. அந்த பிரம்மத்தின் ரகசியத்தை அறிந்தவனே உண்மையான பிரம்மச்சாரி ஆவான். இத்தகைய பிரம்மச்சாரி இறைவனின் மனித வடிவமாகவே கருதப்டுகின்றனர். ஆனால் இறைவனே மனித உருவெடுத்து ஸ்ரேஷ்ட பிரம்மச்சாரியாக இருந்தவர்
சபரிமலையில் “ஸ்ரீ ஐயப்பன்” ஆவார். அவரை போற்றும் ஸ்ரீ ஐயப்பன் 108 போற்றி இதோ

ayyappan

ஸ்ரீ ஐயப்பன் 108 போற்றி

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா
ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா
ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா
ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா
ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஈசனின் திருமகளே சரணம் ஐயப்பா
ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா
ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா
ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா
ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா
ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா
ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா
ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா
ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா
ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா
ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா
ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா

- Advertisement -

ஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா
ஓம் அச்சங்கோயில் அரசே சரணம் ஐயப்பா
ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா
ஓம் குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா
ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா
ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா
ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா
ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா
ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா
ஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா
ஓம் குருதட்சினை அளித்தவனே சரணம் ஐயப்பா
ஓம் புலிப்பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா
ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா
ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா
ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் இரு முடிப்பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் எரிமேலி தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஓம் நித்ய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா
ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா
ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா
ஓம் பெரும்ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா

iyyappan

ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா
ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா
ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் அழுதைமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் கல்லிடும் குன்றமே சரணம் ஐயப்பா
ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
ஓம் கரியிலந் தோடே சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா
ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா
ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா
ஓம் பம்பா நதித் தீர்த்தமே சரணம் ஐயப்பா
ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் திரிவேணி சங்கமே சரணம் ஐயப்பா
ஓம் திருராமர் பாதமே சரணம் ஐயப்பா
ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா
ஓம் சபரிக்கு அருள் செய்தவளே சரணம் ஐயப்பா
ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா
ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா
ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா
ஓம் திருப்பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா
ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

- Advertisement -

ayyappan

ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா
ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா
ஓம் இப்பாச்சி குழியே சரணம் ஐயப்பா
ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா
ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா
ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா
ஓம் கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா
ஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா
ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா
ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா
ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா
ஓம் பசுவின் நெய்யபிஷேகமே சரணம் ஐயப்பா
ஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் மாளிகைப் புரத்தம்மனே சரணம் ஐயப்பா
ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா
ஓம் அக்கினி குண்டமே சரணம் ஐயப்பா
ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா
ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா
ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா

ayyappan

சபரிமலையில் நைஷ்டிக பிரம்மச்சாரியாக வீற்றிருக்கும் ஐயப்பன் ஸ்வாமியை போற்றும் 108 போற்றி துதி இது. ஐயப்பனுக்கு மாலை அணிந்து 48 நாட்கள் உள்ளம், உடல், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மையாக வைத்து விரதம் இருந்து, சபரிமலை சென்று ஐயப்பனை வழிபாடு செய்யும் காலம் வரை தினந்தோறும் திரிகரண சுத்தியுடன் ஐயப்பனை மனதார வழிபட்டு இந்த 108 போற்றி துதியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து வருவதால் பீடைகள் ஒழியும். உங்கள் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் எப்படிபட்ட கஷ்டங்களும் நீங்கும். உங்களின் மனக்குறைகள் தீரும். நீங்கள் நடக்க விரும்பும் காரியங்கள் ஒவ்வொன்றாக நடக்க தொடங்கும். குழந்தை பாக்கியமில்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிட்டும். துஷ்ட சக்திகள் மற்றும் தீய எண்ணங்கள் உங்களை அணுகாது காக்கும்.

- Advertisement -

புராணங்களின் படி மகாவிஷ்ணு மோகினி எனும் அழகிய பெண்ணாக உருவம் பெற்றிருந்த போது, சிவ பெருமானின் சூட்சம யோக சக்தியும் மோகினி அவதாரத்திலிருந்த திருமாலின் சக்தியும் ஒன்று கலந்து தோன்றிய கடவுளின் வடிவம் தான் “ஸ்ரீ ஐயப்பன்”. தனக்கு நெருக்கமானவர்களுக்காக காட்டில் இருக்கும் புலியின் பாலை, அப்புலியின் மீது அமர்ந்தவாறு ஐயப்பன் கொண்டு வந்த போதே அவரின் தெய்வீக ஆற்றலை அனைவரும் உணர்ந்தனர். ஞானி மற்றும் யோகியாகவும் சபரிமலையில் இருக்கும் ஐயப்பனை வழிபடுவோர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
பல நன்மைகள் தரும் சித்தர்கள் போற்றி

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Ayyappan potri in Tamil. It is also called Ayyappa sthuthi in Tamil or Ayyappan stothram in Tamil or Sabarimala ayyappa mantra in Tamil or 108 Ayyapan saranam in Tamil or Ayyapan manthiram in Tamil.

- Advertisement -