ஐயப்பன் இந்த பூமியில் பிறக்க காரணம் என்ன தெரியுமா ?

ayyappan3

ஒரு சமயம் ராஜசேகரன் என்னும் பந்தள அரசன் பம்பா நதி அருகே சென்றுகொண்டிருந்தபோது அவர் ஒரு அழகிய குழந்தையை கண்டார். அந்த குழந்தையின் கழுத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என்று அந்த குழந்தைக்கு பெயரிட்டு அவரே வளர்த்துவந்தார். சில வருடங்களுக்கு பிறகு ராஜசேகரனுக்கு இன்னொரு குழந்தை பிறந்தது.

ayyappan

அதன் பிறகு மகாராணிக்கு தான் பெற்ற குழந்தையின் மீதே பாசம் அதிகமானது. மணிகண்டனுக்கு இளவரசன் பட்டம் சூட்ட முடிவெடுத்தார் ராஜசேகரன். இதை விரும்பாத அரசி மணிகண்டனை சூழ்ச்சியால் ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவெடுத்தாள். தனக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக பொய்யுரைத்து அதற்கு புலிப்பால் தான் மருந்து என்று மருத்துவரையும் பொய்யுரைக்க செய்தார்.

புலிப்பாலை கொண்டுவர ஐயப்பனை அனுப்பி வைத்தார் அந்த அரசி. இதில் இருக்கும் சூழ்ச்சியை அறிந்த பிறகும் ஐயப்பன் புலிப்பாலை கொண்டுவர காட்டிற்குள் சென்றார். அங்கு மகிஷி என்னும் அரக்கியை தன் வில் மூலம் கொன்று வீழ்த்தினான் வில்லாளி வீரன். ஐயப்பன் இந்த பூமியில் அவதரித்ததற்கான நோக்கமே அந்த அரக்கியை கொள்வதற்காக தான்.

ayyappan

தங்களுக்கு பெருந்துன்பம் விளைவித்த அரக்கியை வதம் செய்த ஐயப்பனை கண்டு தேவர்கள் மனம் மகிழ்ந்தனர். தேவேந்திரன் புலியாக மாற, மற்ற தேவர்களும் புலியாக மாறி அவரை சூழ புலிமேல் அமர்ந்து நாடு திரும்பினார் ஐயப்பன். புலிகளை கண்டு அஞ்சி நடுங்கினாள் அரசி. தன் தவறை உணர்ந்து ஐயப்பனிடம் பண்ணிப்பு கேட்டு புலிகளை திரும்ப அனுப்பும்படி வேண்டினாள். ஐயப்பனும் புலிகளை திரும்ப அனுப்பினார்.

- Advertisement -

ayyappan

இதையும் பார்க்கலாமே:
ஐயப்பனுக்கு நடந்த அபிஷேகம் – வீடியோ

அதன் பின் தன்னுடைய அவதார நோக்கம் நிறைவேறியதால் தான் சபரி மலைக்கு சென்று தவம் இருக்க போவதாகவும் தன்னை காண வேண்டும் என்றால் அங்கு வந்து காணும்படியும் அனைவரிடமும் கூறிவிட்டு சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் சென்று அமர்ந்தார் ஐயப்பன்.

ஆன்மிகம் கதைகள், மந்திரங்கள் என ஆன்மீகம் சம்பந்தமான அனைத்து விவரங்களையும் உடனுக்குடன் பெற எங்களுடைய பிரத்யேகமான தெய்வீகம் மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்து பயனடையுங்கள்.

English Overview:
Here we have Ayyappan history in Tamil. It is also called as Ayyappan story in Tamil or Ayyappan varalaru in Tamil or Ayyappan kathai in Tamil.