தசரதர் 6,0000 பெண்களை திருமணம் செய்தது ஏன் தெரியுமா ?

Ramayanam

நமது நாட்டின் முன்னோர்களான ரிஷிகளும், முனிவர்களும் நமது நாட்டின் மக்கள் அவர்களின் வாழ்வில் மேம்பட சிறந்த புராணங்களையும், இதிகாசங்களையும் இயற்றினர். அதில் வாழ்விற்கு மேன்மையளிக்கும் கருத்துக்கள் பல இருந்தாலும், அந்த இதிகாச புராணங்களில் இருக்கும் சில கதைகளின் உண்மையான பின்னணி தெரியாமல் பெரும்பாலான மக்கள் இருக்கின்றனர். அப்படியான ஒரு கதை தான் “தசரத மகாராஜா “60,000 பெண்களை” மணந்து கொண்டதாக கூறப்படும் சம்பவம். தசரதர் ஏன் இத்தனை திருமணங்கள் புரிந்தார் என்பதற்கான காரணத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

thasarathan

வேத காலத்தில் காட்டில் ஆசிரமத்தில் தங்கியிருந்த ஜமதக்னி முனிவர் சிறந்த தவ ஆற்றல் கொண்டவராக இருந்தார். அந்த ஆற்றலின் மூலமாக சொர்க்கலோக பசுவான “காமதேனுவை” தனது ஆசிரமத்தில் வளர்த்து வந்தார். அதை கண்ட மன்னன் கார்த்தவீர்யாஜுனன் அந்த காமதேனுவை தனக்கு தருமாறும், அதற்கு இணையான செல்வத்தை தான் தருவதாகவும் ஜமதக்னி முனிவரிடம் கூறினான். அதற்கு ஜமதக்னி முனிவர் மறுப்பு தெரிவிக்க, அதை அவரிடமிருந்து பறித்து சென்றான் கார்த்தவீர்யாஜுனன். இதைக் கேள்விப்பட்ட ஜமதக்னியின் தவ புதல்வரும், “மஹாவிஷ்ணுவின்” அவதாரமுமான “பரசுராமர்” கார்த்தவீர்யார்ஜுனனுடன் போரிட்டு, அவனை கொன்று அந்த காமதேனு பசுவை மீட்டுவந்து தனது தந்தை ஜமதக்னியிடம் ஒப்படைத்தார்.

கார்த்தவீர்யாஜுனன் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக, அவனது மூன்று புதல்வர்கள் பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவரை, “21 முறை” வாளால் வெட்டிக்கொன்றனர். இதனால் கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற பரசுராமர், அந்த மூன்று மகன்களையும் மற்றும் அவனது படைகளையும் சிவ பெருமான் தனக்கு அளித்த கோடரி மூலம் வெட்டி வீழ்த்தினார். மேலும் தனது தந்தை ஜமதக்னி முனிவரை கொடூரமாக கொன்ற “சத்திரியர்களான” “அரசர்கள்” மீது பரசுராமருக்கு மிகுந்த வெறுப்பு ஏற்பட்டது. எனவே இந்த நாட்டின் எந்த ஒரு சத்ரிய பரம்பரையின் “21 தலைமுறையினரையும்” தான் வெட்டி வீழ்த்தப்போவதாக சபதம் ஏற்று அப்படியே செய்து வந்தார்.

thasarathan

 

- Advertisement -

அப்போது “அயோத்திய நகரை” ஆண்டு வந்த சத்ரிய குலத்தில் உதித்த “தசரத சக்ரவத்தி” தனது நாட்டை தர்மத்தின் படி ஆட்சி புரிந்து வந்தார். பல போர்களில் வெற்றி பெற்றிருந்த வீரராக தசரதர் இருந்தாலும், பரசுராமரின் “போர்திறன், தவசக்தி, மற்றும் சிவ பெருமானிடம் அவர் தவமிருந்து பெற்ற கோடரி” போன்றவை அவரிடம் இருக்கும் வரை, இந்த பூமியில் தான் உட்பட எந்த சத்ரியனும் அவரை வெல்ல முடியாது என்றறிந்தார். அதே நேரத்தில் புதிதாக திருமணம் புரிந்திருக்கும் எந்த ஒரு அரசனையும் போருக்கு அழைக்காமல் அவனை ஆசிர்வதித்து செல்லும் பரசுராமரின் குணம் பற்றி அறிந்தார் தசரதர்.

இது தான் பரசுராமரின் பலவீனம் என தெரிந்து கொண்டு, ஒவ்வொரு முறை பரசுராமர் தன்னை போருக்கு அழைக்க நேரில் வரும் போதும் புதிதாக ஒரு பெண்ணை திருமணம் புரிந்து பரசுராமரின் முன்பு தோன்றினார் தசரதர். அப்போது பரசுராமர் அவரை போருக்கு அழைக்காமல் அவரையும், அவரது புது மனைவியையும் ஆசிர்வதித்து விட்டுச் சென்றார். இப்படி ஒவ்வொரு முறையும் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள, பரசுராமர் பார்வையில் படும்போதெல்லாம் ஒரு பெண்ணை புதிதாக திருமணம் செய்து கொண்டு அவர் முன் தோன்றினார்.

thasarathan

தனது நாட்டு மக்களுக்கு அரசனாக சேவைசெய்யும் பொருட்டு, தான் உயிருடன் இருக்க வேண்டிய அவசியத்திலேயே தசரத சக்கரவாதி இத்தனை திருமணம் புரிந்தாரே அன்றி சுகங்கள் அனுபவிக்கும் எண்ணத்தினாலல்ல. எனவே நமது புராணங்களையும், இதிகாசங்களையும் ஆழ்ந்து படிக்காமல், மேலோட்டமாக சில விடயங்களை தெரிந்து கொண்டு அத்தகைய காப்பியங்களை கேலி செய்வது தவறு.

இதையும் படிக்கலாமே:
தமிழர்களின் பழமை மற்றும் ஆன்மீக பணி பற்றி கூறிய ஞானீ

இது போன்ற மேலும் பல ஆன்மீக கதைகள் படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.