உங்களின் கடன் பிரச்சனைகள், கஷ்டங்கள் தீர இத்துதியை படியுங்கள்

ayyappan-compressed

வாழ்வில் கஷ்டங்கள் ஏதும் வரவில்லையென்றால் நீ கடவுளை நினைக்கமாட்டாய் என்று புகழ் பெற்ற கவிஞர் ஒருவர் கூறினார். சராசரியான நிலையில் வாழும் மக்கள் அனைவருக்கும் அவர்களது வாழ்க்கையில் அன்றாடம் பிரச்சனைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. இவற்றில் பரவலாக அனைவரும் எதிர்கொள்வது தீராத கடன் தொல்லை மற்றும் அதனால் ஏற்படும் இன்ன பிற கஷ்டங்கள். இவை அனைத்தும் தீர ஸ்ரீ ஐயப்பனை வழிபட வேண்டிய “ஐயப்பன் துதி” இதோ.

ayyappan

ஐயப்பன் துதி

அபீஷ்டஸித்திம் மே தேஹி சரணாகத வத்ஸல
ஸ்வாமி சரணம் ஸ்வாமி சரணம் ஸ்வாமி சரணம்

ஸ்வாமி சரணம் ஸ்வாமி சரணம் ஸ்வாமி சரணம்
ஸ்வாமி சரணம் ஸ்வாமி சரணம் ஸ்வாமி சரணம்

ayyappan

சபரிமலை வாழ் ஐயப்பனை போற்றும் துதி இது. இந்த துதியை தினமும் காலை, மதியம், மாலை என உங்களால் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை துதித்து வருவது நல்லது. உங்களுக்கு அருகில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்கு சென்று ஐயப்பனுக்கு பால் அபிஷேகம் செய்து, மேற்கூறிய துதியை 108 முதல் 1008 முறை துதித்து வழிபடுவதால் உங்களின் வாழ்வில் ஏற்படுகின்ற கஷ்டங்கள் பல தீரும். கடன் பிரச்சனைகள் சீக்கிரம் தீர்ந்து மன நிம்மதியை பெற முடியும்.

- Advertisement -

ayyappan

திருமாலும், சிவனும் ஒரு சேர தோன்றிய ஒரு அவதாரம் தான் சுவாமி ஐயப்பன் ஆவார். புனிதமான சபரி மலையில் நைஷ்டிக பிரம்மச்சாரியாக அமர்திருந்து உலகெங்கும் இருந்து அவரை தரிசிக்க வரும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு அருள்மழை பொழிகின்றார். விரதம் இருந்து வழிபடும் பக்தர்களானாலும் சரி, சாதாரணமாக வழிபாடும் பக்தர்களானாலும் சரி பாரபட்சமின்றி அனைவருக்கும் தனது அருள்மழையை பொழியும் ஸ்ரீ ஐயப்பனை வழிபடுவதால் கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.

இதையும் படிக்கலாமே:
பதவி உயர்வு பெற துதிக்க வேண்டிய மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Ayyappan thuthi in Tamil. It is also called Ayyappan mantram in Tamil or Ayyappan stotram in Tamil or Ayyappan slokam in Tamil or Kadan prachanai theera manthiram in Tamil.