உங்கள் பெயரின் முதல் எழுத்து B என்றால் உங்களை பற்றி இதோ

Letter starting with B

நியூமராலஜி அறிவியல் என்பது எண்களின் முக்கியத்துவம் மற்றும் அவை நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய ஆய்வுதான். எழுத்துக்கள் மற்றும் எண்களுக்கு இடையேயான கூட்டாய்வை பகுப்பதன் மூலம் உங்கள் குணநலன்கள், தனித்திறன்கள், குறிக்கோள்கள் எண்ணங்கள், உங்கள் இயல்பான திறமைகள், உங்கள் முக்கிய பண்புகள் மற்றும் பிற நபர்களுடன் நீங்கள் தொடர்பு கொள்ளும் விதம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்த முடியும்.

Alphabet B

உங்கள் பெயரின் முதல் எழுத்து B வாக இருந்தால்? உங்கள் குணநலன் பற்றி என்ன வெளிப்படுத்துகிறது என்பதை அறிய கீழே பாருங்கள்!

B என்ற எழுத்துடன் தொடங்கும் நபர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். எதையும் வெளிப்படையாக இவர்கள் பேச மாட்டார்கள். இவர்களிடம் ஒரு வார்த்தை பெறுவதற்குள் படாதபாடு பட வேண்டி இருக்கும். இவர்கள் உண்மையாகவும், விசுவாசமாகவும் இருக்கக் கூடியவர்கள். இவர்களை நம்பி ஒரு காரியம் ஒப்படைத்தால் நிச்சயம் அதை சிறப்பாக செய்து முடிப்பார்கள். இவர்கள் குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் இருப்பதையே அதிகம் விரும்புவார்கள். தன் மீது பாசம் வைப்பவர்களிடம் அதிக பற்றுடன் இருப்பவர்கள், அதற்குரிய மரியாதையை கொடுப்பவர்கள். எதையும் அலட்சியப்படுத்த மாட்டார்கள். வெளி மனிதர்களின் பழக்கத்தைவிட ஒரு குடும்பத்தை சார்ந்திருப்பது இவர்களுக்கு விருப்பமான ஒன்றாக இருக்கும்.

Alphabet B

இவர்களிடம் சமையல் திறன் மற்றும் ஆர்வம் அதிகம் இருக்கும். தங்களுடைய உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த தெரிந்தவர்களாக இருப்பார்கள். நிதானத்தை கையாள்பவர்கள். தங்களை சுற்றி உள்ளவர்களிடம் மிகவும் இணக்கமாக இருப்பவர்கள். இவர்களிடம் உண்மையான நட்பும், அதிகப்படியான அக்கறையும் கொட்டிக்கிடக்கும்.

- Advertisement -

இவர்கள் தங்கள் இணையுடன் பரிசுகளை பரிமாறிக் கொள்ள விரும்புகிறவர்கள். இவர்கள் ரொமான்டிக் பெர்சனாக இருப்பார்கள். அடிக்கடி ஆச்சரியப்படுத்தும் வகையில் நடந்து கொள்வார்கள். சிறு விஷயத்திற்கு கூட கலங்க கூடியவர்கள். மிகவும் சென்சிடிவ் பெர்சனாக இருப்பார்கள். தன்னை காயப்படுத்தியவர்களிடம் பேசுவதை தவிர்ப்பார்கள்.

 Alphabet-B

இவர்களிடம் விட்டுக் கொடுக்கும் தன்மை சிறிது குறைவாக இருக்கும். தொண்டு செய்வதில் மகிழ்ச்சி அடைபவர்கள். ஆடம்பரமாக இருக்க விரும்புவார்கள். தங்கள் துணையை பற்றி அதிகம் அறிய வேண்டுமென்று நினைப்பவர்கள். ஒரு வலுவான உறவை மேற்கொள்ள விரும்புவார்கள்.

இவர்கள் மிகவும் பொறுமையாகவும், கனிவுடனும் இருப்பார்கள். தங்கள் இலக்குகளை அடைவதில் பெரும்பாலும் வெற்றியை அடைவார்கள். தோல்விகளைக் கண்டு துவண்டு போனாலும் மீண்டும் எழுந்து தன்னால் முடியும் என்று தன்னம்பிக்கையுடன் விடா முயற்சி செய்ய விரும்புபவர்கள். சாகசம் மேற்கொள்ள விரும்புபவர்கள்.

இதையும் படிக்கலாமே
உங்கள் பெயரின் முதல் எழுத்து A என்றால் உங்களை பற்றி இதோ

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Name astrology in Tamil. Jathagam in Tamil. Name namerology in Tamil. Name astrology palangal in Tamil.