தண்ணீரை எண்ணையாக மாற்றி விளக்கேற்றிய சாய் பாபா – உண்மை சம்பவம்

sai-babal

அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் ஒருவரை கடவுளாக வணங்குகிறார்கள் என்றால் அவர் சாய் பாபா ஒருவர் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. சாய் பாபா இந்த பூலோகத்தில் மக்களோடு மக்களாக வாழ்ந்த காலத்தில் அவர் பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டியுள்ளார் அதில் ஒன்றை தான் இந்த பதிவில் காண இருக்கிறோம்.

Sai baba

தினம் தோறும் மாலை வேலையில் மசூதியில் விளக்கேற்றுவதை சாய் பாபா வழக்கமாக கொண்டிருந்தார். விளக்கேற்றுவதற்காக எண்ணெயை அருகில் உள்ள கடைகளில் அவர் பெற்று வந்தார். ஒவ்வொரு நாள் ஒரு கடை என அங்குள்ள அனைத்து கடைகளிலும் அவர் எண்ணையை பெறுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஒருநாள் அந்த கடைக்காரர்கள் அனைவரும் இனி பாபாவிற்கு எண்ணெய் கொடுக்க கூடாது என்று முடிவெடுத்தனர். இதற்கு காரணம், கடைக்காரர்களுக்கு புண்ணியம் வந்து சேர வேண்டும் என்பதற்காக பாபா காசு கொடுத்து எண்ணெய் வாங்குவது கிடைகாயாது. ஆனால் கடைக்காரர்கள், பாபாவின் நல்லெண்ணத்தை புரிந்துகொள்ளாமல் தவறான முடிவை எடுத்துவிட்டனர்.

Sai baba

அடுத்த நாள் வழக்கம் போல ஒரு கடையில் வந்து பாபா எண்ணெய் கேட்கிறார். ஆனால் அந்த கடைக்காரர் வழக்கத்திற்கு மாறாக எண்ணெயை தர மறுக்கிறார். அடுத்தடுத்த கடைகளுக்கு சென்று பாபா எண்ணெய் கேட்கிறார். ஆனால் அனைத்து கடைக்காரர்களும் இல்லை என்ற ஒரே பதிலையே கூறுகின்றனர். பாபா சிரித்தபடியே மீண்டு மசூதிக்கு திரும்புகிறார்.

- Advertisement -

Sai baba

இவளவு நாள் ஓசியில் எண்ணெய் வாங்கி இவர் விளக்கேற்றினாரே இன்று என்ன செய்யப்போகிறார் என்பதை அறிய கடைக்காரர்கள் பாபாவை பின்தொடர்ந்தனர். மசூதியில் இருந்த பழைய எண்ணெய் டப்பாவை எடுத்தார் பாபா. அதில் தண்ணீரை ஊற்றி நிரப்பினார். பின் அந்த தண்ணீரை தன் வாயில் ஊற்றில் பின்னர் அந்த நீரை மறுபடியும் எண்ணெய் டப்பாவில் நிரப்பினார். பின் அதை கொண்டு தீபம் ஏற்றினார்.

இதையும் படிக்கலாமே:
சாய் பாபா எப்படி ? எப்போது ? முதல் முதலில் சீரடிக்கு வந்தார் தெரியுமா ?

நடப்பவை அனைத்தையும் தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த வியாபாரிகள் வியப்படைந்தனர். சாதாரண மனிதர்களால் இப்படி தண்ணீரை எண்ணெயாக மாற்றும் அற்புதத்தை நிகழ்த்த முடியாது என்பதை உணர்ந்த அவர்கள் பாபாவிடம் மன்னிப்பு கேட்டு வருந்தினார்.

இது போன்ற மேலும் பல சாய் பாபா கதைகள் மற்றும் சிறு கதைகளை உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.