இரண்டே வாரத்தில் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற, வாழைப்பழ ஹேர் டை எப்படி தயார் செய்வது?

hair4
- Advertisement -

வெறும் வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவதற்கு மட்டும் இந்த ஹேர் பேக் கிடையாது. உங்களுடைய முடியை ஊட்டச்சத்துடன் நீளமாக வளர செய்யவும் இந்த ஹேர் பேக் பயன்படும். அதாவது வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல் உங்களுடைய முடியை வலுவாகவும் வேரிலிருந்து கருப்பாக வளர செய்ய இந்த ஒரே ஒரு ஹேர் பேக் போதும். வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சுலபமாக இந்த ‘பனானா ஹேர் டை’ எப்படி தயாரிப்பது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பழுத்த வாழைப்பழம் தோல் உரித்தது – 2 சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டு கொள்ளுங்கள். இதோடு முட்டை – 1, தேன் – 1 ஸ்பூன் இந்த பொருட்களை எல்லாம் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவேண்டும். மஞ்சள் கருவுடன் முட்டையை சேர்த்து கொள்ளலாம். உங்களுக்கு அந்த வாடை பிடிக்காது என்றால் வெறும் வெள்ளைக் கருவை மட்டும் இந்த பேக் தயார் செய்ய சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரைத்த இந்த விழுதை ஒரு ஃபில்டரில் ஊற்றி வடிகட்டி கொள்ளவேண்டும். வடிகட்டிய இந்த விழுதோடு 2 லிருந்து 3 ஸ்பூன் ஹென்னா பொடியை போட்டு கலந்து இதை ஹேர்டை போல தயார் செய்து கொள்ளவேண்டும். அதாவது இந்த பேக் ரொம்பவும் திக்காத இருக்கக்கூடாது. ரொம்பவும் தண்ணீராகவும் இருக்கக்கூடாது. தலையில் அப்ளை செய்யும் அளவிற்கு ஓரளவுக்கு திக் பேஸ்டாக இந்த கலவையை தயார் செய்து கொள்ளுங்கள்.

நம்முடைய பனானா ஹேர்டை தயார் ஆகிவிட்டது. கையில் ஒரு கிளவுஸ் போட்டுக்கொண்டு இந்த ஹேர்டையை உங்கள் கையாலேயே எடுத்து முடியின் வேர்ப்பகுதி முதல் நுனி வரை அப்ளை செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக வெள்ளை முடி இருக்கக்கூடிய இடத்தில் கவனமாக ஹேர் பேக்கை போட்டு விட்டு இரண்டு மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு மைல்டான ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விட வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த குறிப்பை பின்பற்றி வர ஒரு சில வாரங்களிலேயே உங்களுடைய நரைமுடி கூடிய சீக்கிரத்தில் கருப்பாக மாறும்.

அதோடு மட்டுமல்லாமல் உங்களுடைய முடி வளர்ச்சியில் நல்ல வித்தியாசம் தெரியும். முடி உதிர்வு கூடிய சீக்கிரத்தில் குறையும். தலையில் இருந்து புதியதாக வளரக்கூடிய முடிகள் நிச்சயம் கருப்பாக வளரும். உங்களுக்கு இந்த ஹேர் பேக் பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -