பேபி கார்ன் ரெசிபியை ரெஸ்டாரண்டில் மட்டும்தான் போய் வாங்கி சாப்பிட வேண்டுமா? ஏன் நம்ம வீட்ல செய்யக்கூடாதா? இதோ பேபி கான் புல்லட் ப்ரை ரெசிபி உங்களுக்காக.

baby-corn
- Advertisement -

நிறைய பேருக்கு இந்த பேபி கார்ன் சமைத்து சாப்பிட வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் எப்படி சமைப்பது என்று தெரியாது. சில பேர் ரெஸ்டாரண்டுக்கு போனால் இப்படிப்பட்ட டிஷ்ஷை ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். இதே போல ஒரு பேபி கார்ன் டிஷ்ஷை நம் கையால் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், எவ்வளவு நன்றாக இருக்கும். குழந்தைகளும் இப்படிப்பட்ட வித்தியாசமான உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். ஆரோக்கியம் தரும் ‘பேபி கான் கொரியண்டர் புல்லட்’ செய்வது எப்படி ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

இதற்கு முதலில் இரண்டு பாக்கெட் அளவு பேபி கான் எடுத்துக் கொள்ளுங்கள். வாங்கி வந்த பேபி கானை முதலில் இரண்டு மூன்று முறை நல்ல தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து விடுங்கள். ஒரு அகலமான பாத்திரத்தில் பேபி கானை போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு மஞ்சள் தூள் உப்பு போட்டு, பத்து நிமிடம் இதை அந்த தண்ணீரில் வேக வைக்கவும்.

- Advertisement -

பேபிகான் நன்றாக வெந்து வந்தவுடன் அதை எடுத்து பச்சை தண்ணீரில் போட்டு 5 நிமிடம் கழித்து, பேபி கால்களை எல்லாம் தண்ணீர் வடித்து தனியாக வைத்து விடுங்கள். வேக வைத்த இந்த பேபி கான்களை கொஞ்சம் கிராஸ் ஆக சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி, எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்படி வெட்டுவதை தான் புல்லட் ஷேப் என்று சொல்கிறார்கள்.

அடுத்து ஒரு பவுலில் 1 டேபிள் ஸ்பூன் கான்பிளவர் மாவு, 1 டேபிள்ஸ்பூன் மைதா, பொடியாக நறுக்கிய மல்லித்தழை 2 ஸ்பூன், மாவுக்கு மட்டும் தேவையான அளவு உப்பு, போட்டு இதில் நறுக்கி வைத்திருக்கும் பேபிகானையும் போட்டு இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு தண்ணீரை ஊற்றி இதை நன்றாக கோட்டிங் செய்து கொள்ளவும். நாம் சேர்த்த மாவு இந்த வெட்டி வைத்திருக்கும் பேபிகானில் ஒட்டிக் கொள்ளும். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து நான்கு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அந்த எண்ணெயில் தயாராக இருக்கும் பேபி கான்களை போட்டு பொன்னிறமாக மொறு மொறுப்பாக வரும் வரை வறுத்து இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை அப்படியே சாப்பிட்டால் கிரிஸ்பியாக சுவையாக தான் இருக்கும்.

ஆனால் இதை நாம் அப்படியே சாப்பிட போவது கிடையாது. அடுப்பில் மீண்டும் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிகப் பொடியாக நறுக்கிய பூண்டு பல் 1 ஸ்பூன் போட்டு, மிகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2 போட்டு, வதக்கவும். இந்த இரண்டு பொருட்களும் லேசாக வதங்கி வாசம் வரும்போது, 2 டேபிள் ஸ்பூன் டொமேட்டோ சாஸ் உற்றி, காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூள் போட்டு 1/2 ஸ்பூன் மல்லி பொடி போட்டு, இந்த கிரேவிக்கு மட்டும் தேவையான அளவு உப்பு போட்டு, எல்லா பொருட்களையும் ஒரு நிமிடம் நன்றாக கலந்து விடுங்கள். இதில் அரை டம்ளர் தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள்.

இதனுடைய பச்சை வாடை நீங்கியதும் மொறு மொறு என்று பொறித்து வைத்திருக்கிறோம் அல்லவா அந்த பேபி கானை இந்த கிரேவியில் கொட்டி ஒரு முறை கலந்து விட்டு, மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தாராளமாக தூவி அடுப்பை அணைத்துவிட்டு, இதில் 1/2 ஸ்பூன் எலுமிச்ச பழச்சாறை ஊற்றி கலந்து பாருங்கள். செம டேஸ்ட்ங்க. வித்தியாசமான இந்த சுலபமான ரெசிபி பிடிச்சவங்க மிஸ் பண்ணாம உங்க குழந்தைகளுக்கு செஞ்சி கொடுத்து தான் பாருங்க. அவங்க ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவாங்க.

- Advertisement -