ஜெர்மனியில், திருவாசகம் கேட்டு பிறந்த அதிசய குழந்தை.

thiruvaasagam-titilel

நமக்கு எளிதாக கிடைக்கக்கூடிய எதையும் நாமும் எளிதாக உதாசீனம் செய்துவிடுவோம் என்று கூறுவார்கள். இந்த கருத்தை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் ஜெர்மனியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நம்மில் பலர் திருவாசகத்தை படிப்பதும் இல்லை கேட்பதும் இல்லை. ஆனால் ஜெர்மனியை சேர்ந்து தம்பதியினர் திருவாசகம் கேட்டதால் அவர்கள் வாழ்வில் மிக பெரிய அற்புதம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வாருங்க இதை பற்றி விரிவாக பார்ப்போம்.

ஜெர்மனியை சேர்ந்த கர்ப்பணிப் பெண் ஒருவர் நிறை மாதம் ஆகியும் வயிற்றில் சிசுவின் அசைவையே உணராததால் பெர்லின் மருத்தவமனையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவர் ஒருவரிடம் பரிசோதனை செய்துள்ளார்.

அவரும் பல்வேறு சோதனைகள் மற்றும் ஸ்கேன் எடுத்துப்பார்த்து ” குழந்தை அசைவின்றி இருப்பதற்கு காரணம் தெரியவில்லை ஆனால் சிசுவுக்கு உயிர் இருக்கிறது ” என்று கூறி அனுப்பிவிட்டார்.

- Advertisement -

என்ன செயவதென்று புரியாமல் தொடர்ந்து ஒவ்வொரு மருத்துவராக பார்த்துள்ளனர் ஆனால் அனைவரும் ஒரே விதமான பதிலையே கூறியுள்ளனர்.

இந்நிலையில் அப்பெண்ணும் அவர் கணவரும்  மன நிம்மதிக்காக இளையராஜாவின் திருவாசகம் இசையைக் கேட்டுள்ளனர். என்ன ஆச்சரியம்! “திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகாதார்” என்ற சான்றோர் வார்த்தைக்கு இணங்க சிலநிமடங்களில் வயிற்றில் அசைவு தெரிய மகிழ்ச்சியில் இசையை நிறுத்தி உள்ளனர். உடனே குழந்தையின் அசைவும் நின்றுள்ளது.

தொடர்ந்து நான்கு முறை இப்படி போட்டு போட்டு நிறுத்தியுள்ளனர். குழந்தையும் அதற்கு ஏற்றார் போல் அசைவை நிறுத்தியுள்ளது. அதன்பின் தொடர்ந்து வீடு முழுவதும் ராஜாவின் இசைதான் ஒலித்துக்கொண்டே இருந்துள்ளது. சரியாக பத்தாவது மாதத்தில் அறுவை சிகிச்சை இன்றி குழந்தை ஆரோக்கியமாக பிறந்து மருத்துவர்களை விய்ப்பில் ஆழ்த்தியது.

அந்த ஜெர்மன் தம்பதியர் சென்னைக்கு வந்து இளையராஜாவை சந்தித்து நடந்ததை கூறியுள்ளனர். இளையராஜாவும் குழந்தைக்கு ஆசி வழங்கியுள்ளார். தற்போது ஜெர்மனியை சார்ந்த மருத்துவர்கள் பலரும் இந்த இசையில் உள்ள அற்புதத்தை ஒப்புக்கொண்டுள்ளதோடு மட்டும் இல்லாமல் ராஜாவின் திருவாசகம் சிடி யைக்கேட்டு அந்த இசைக்கட்டுமானத்தில் வியந்து போயுள்ளனர்.

அத்துடன் மருத்துவத்துறையில் இந்திய இசையால் என்னென்ன அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்ற ஆராய்ச்சியிலும் இறங்கியுள்ளனர்.

இப்படிப்பட்ட பல அதிசயங்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்தவர்கள் தமிழர்கள். ஆனால் நாம் நம் பாரம்பரியத்தை மறந்து போனதால் நமக்கு நம் பொக்கிஷங்களின் மதிப்பு தெரியாமல் போய்விட்டது. உதாரணத்திற்கு நம் போகர் சித்தர் கூறிய அரும்பெரும் மருத்துவ குறிப்புகளை ஓரங்கட்டிவிட்டோம். ஆனால் வெளிநாட்டவரோ அந்த குறிப்புகளை வைத்து மருத்துவ துறையில் சாதனைகள் பல படைத்து வருகின்றனர்.