நீங்கள் இப்படி இருந்தால், உங்களுக்கு கெட்ட நேரம் வந்தால் அது இப்படி தான் தாக்கும் தெரிந்து கொள்ளுங்கள்!

sad-navagraga

ஒருவர் எவ்வளவு தான் நல்ல நிலையில் இருந்தாலும் கெட்ட நேரம் என்று வந்து விட்டால் அவ்வளவு தான். அதற்கு பிறகு அவர்கள் வாழ்க்கையில் புயலே அடிக்க துவங்கி விடும். இப்போது தான் ஒரு பிரச்சினை முடிந்திருக்கும், அதற்குள் அடுத்த பிரச்சனை ஆரம்பித்திருக்கும். எந்த விஷயத்திலும் அவர்களுக்கு நல்லதே நடக்காதது போல் ஒரு உணர்வு வர ஆரம்பித்து விடும். என்னடா இது வாழ்க்கை! என்கிற விரக்தி மனப்பான்மை வரும். எவ்வளவு தான் நீங்கள் புலம்பினாலும் சரியான தீர்வு என்பது மட்டும் உங்களுக்கு கிடைக்காது.

sad-crying4

இந்த கெட்ட நேரம் ஒருவருக்கு மிக எளிதாக வரக்கூடிய வாய்ப்புகளும் நாம் தான் அமைத்துக் கொடுக்கிறோம் என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள் அல்லவா? ஆமாங்க எல்லோருக்குமே கெட்ட நேரம் வரும் தான். ஆனால் அதை தைரியமாக எதிர்கொள்பவர்கள் அதிலிருந்து வெளியே வந்து மீண்டும் தன்னை உயர்நிலைக்கு கொண்டு சென்று விடுகிறார்கள். அதிவிரைவாகவே அவர்கள் பழைய நிலைக்கு திரும்பி விடுகிறார்கள். ஆனால் இந்த ஒரு சிலரால் கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றக்கூடிய ஆற்றல் பெற முடியாமல் போகும்! அந்த ஒரு சிலரில் நீங்களும் ஒருவரா? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

ஒருவருக்கு கெட்ட நேரம் என்பது அவரின் ஜாதகப்படி கிரக நிலைகள் சரியான அமைப்பில் இல்லாத போது வருகிறது. நல்லதை செய்யக்கூடிய கிரகங்கள் நீசம் பெற்று இருக்கும் பொழுது நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து தான் நம்மால் வரும் பிரச்சினைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

navagragam

தீய கிரகங்கள் நம்மை அடைவதற்கு நான்கு வழிகளை தேர்ந்தெடுக்கும். முதலாவது நம்முடைய மனம், இரண்டாவது உடல், மூன்றாவது புத்தி, நான்காவது செய்கின்ற செயல். இந்த நான்கும் சரியாக நாம் வைத்துக் கொண்டால் நமக்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள முடியும்.

- Advertisement -

நம் மனதை மற்றவர்கள் யாரும் வந்து திடப்படுத்த முடியாது. நாம் தான் ஆசைகளுக்கும், சஞ்சலங்களும் இடம் கொடுக்காமல் நம்மை நாமே திடப்படுத்திக் கொள்ள வேண்டும். நடந்தவைகள் நடந்தவைகள் தான். அவைகளை மாற்றவே முடியாது என்பது நம் அறிவுக்கு தெரியும். ஆனால் மனம் அதை ஏற்க மறுக்கும். இது போல் மனதில் கவலைகள் இருந்தால் கெட்ட நேரம் வரும் ொழுது சுலபமாக உங்களை தாக்கிவிடும்.

sad-man

அடுத்து உடல். உடலை திடகாத்திரமாக நாம் வைத்திருக்க வேண்டும். வியர்வை சிந்தி உழைப்பவர்களுக்கு படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும். இரவு பகல் பாராமல் உழைத்தாலும்! ஒரே இடத்தில் உடல் உழைப்பு இல்லாமல் வேலை செய்பவர்களுக்கு, என்ன தான் தூங்க நினைத்தாலும் தூக்கம் என்பது வராது. ஒரு வேலையும் செய்யாமல் உடல் அசதியாக இருக்கும். இது போன்றவர்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்து, உடலை அசதியில் இருந்து நீக்கி உற்சாகத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் நீங்கள் மந்தமாக இருந்தால் கெட்ட நேரம் வந்தால் தீய கிரகங்கள் எளிதாக உங்களைத் தாக்கி விடும்.

அது போல் தான் புத்தியும், செய்கின்ற செயலும் சரியாக இருக்க வேண்டும். எப்போதும் சோகமான முகத்துடன், எதிலும் நாட்டம் இல்லாமல் இருந்தால் தீய கிரகங்கள் ஆட்கொள்ள வசதியாக போய்விடும். இந்த நான்கு விஷயங்களிலும் மற்றவர்கள் மூலம் நமக்கு எந்த உதவியும் கிடைக்காது. நம்மை நாமே தான் சரி செய்து கொள்ள வேண்டும். இதைத் தவிர மற்றவர்களால் நமக்கு வரும் பிரச்சினைகளும் இருக்கின்றன.

perumal

மற்றவர்களால் நமக்கு ஏற்படப்போகும் பிரச்சினைகளை சமாளிக்க நாம் முதலில் இந்த நான்கு விஷயத்தில் சரியாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் உறுதியாகக் கொள்ளுங்கள். உங்களால் முடியாதது எதுவுமில்லை. நடந்தவைகளை உதறி விட்டு இனி நடக்கப் போவதை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
இந்தச் செடியை இப்படி செய்தால் பணப்பிரச்சினை முற்றிலுமாக நீங்கி விடுமாம்! அதெப்படி?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.